ஸ்ரீ வகுளாரண்ய ஷேத்ர மாஹாத்மியம்

0
2,366 views
 

Sri Kodanda Rama, also fondly known as Aeri Katha Rama (the one who saved the village from flooding from Madurantakam lake), is enshrined in the Aeri Katha Ramar Temple. The temple is about 1300 years old. Sita resides in the temple as Sri Janaki Valli. The other deities enshrined are Sri Chakrathalwar, Sri Ramanuja, Sri Lakshmi Narasimha and Sri Hanuman.

The Kodandaramaswamy temple has two sets of utsavar archa-vigrahas of the presiding deity and His consort, and Lakshmana. While one deity is named Rama, the other is known as Karunakaran.

புராண வரலாறு

பிரம்ம புத்திரர்கள் ஸீமந் நாராயணனை வணங்கி மோஷத்தை அடையும் உபாயத்தை அறிவிக்கும்படி பிரார்த்தித்தனர். ஸீ மந் நாராயணன் அவர்களை வகுளாரண்யம் சென்று (மதுராந்தகம்) அங்கு ஸீ விபாண்டகாச்ரமத்தில் தங்கி பரம்பொருளை த்யானிக்கும்படி ஸாதித்து தம் அம்சமான ஸீ கருணாகர முர்த்தியின் திவ்ய மங்கள விக்ரஹத்தை கொடுத்தருளினார். அதன் பிரகாரம் அவர்க‌ள் க்ருதயுகத்தில் மோக்ஷம் அடைந்தனர். மகிழமரகாடாயிருந்த இந்த ஷெத்திரத்தில் சுக மஹரிஷி, விபாண்டக மஹரிஷி போன்ற முனிவர்கள் தவப் பயன் பெற்ற இடமாகவும் திருமழிசை அழ்வார் சித்தி பெற்ற இடமாயும் ஆசாரியர்கள், பெரிய நம்பிகள், ஸீ பகவத் ராமானுஜர், ஸீ நிகமாந்த மஹா தெசிகன் முதலியவர்கள் உகந்தருளியதாய் “ப்ரும்ம வைவர்த்தம்”, ‘பார்க்கவம்’ போன்ற புராணங்களில் சிறப்புப் பெற்றதுமாய் இருக்கிறது இந்த திவ்ய ஸ்தலம். மதுராந்தகம் என்ற காரணப்பெயரும் இதற்கு உண்டு.

ஸீ ஆளவந்தாரின் திருஉள்ளத்திற்கு உகப்ப பெரிய நம்பிகள் திருவரங்கத்திலிருந்து காஞ்சிபுரம் வரும்போது, காஞ்சிபுரத்திலிருந்து ஸீ ராமானுஜர் திருவரங்கம் வரமுற்பட்டபோது இருவரும் மதுராந்தகத்தில் சந்திக்க நெர்ந்தது. ஸீ மந் நாராயணனின் திருவுள்ளம் என மகிழ்ந்து ஸீ பகவத் ராமானுஜர் பெரிய நம்பிகளின் திருவடிகளை ஆச்ரயித்து “பஞ்ச ஸம்ஸ்காரம்” என்ற தீஷையை இக்கோவிலில் உள்ள மகிழ மரத்தடியில் பெற்றார். இத்திருமகிழ மரத்ததின் திருநாமம் “வைகுன்ட வர்த்தனம்” என்பதாகும். க்ருஹஸ்தாஸ்ரமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸீ ராமானுஜரின் உருவம் இங்கு பார்க்கலாம். இந்த இடத்தை “த்வயம் விளைந்த திருப்பதி” என்றும் வழங்கலாயினர்.

ஸீ சக்ரவர்த்தித்திருமகன் தண்டகாரண்ய வாஸம் செய்தருளிய சமயம் ஸீ பிராட்டியுடனும் இளைய பெருமாணுடனும் ஸீ விபாண்டகர் அச்ரமத்தில் சில காலம் எழுந்தருளி ஸீ கருணாகரனை விசெஷ ஆராதனம் செய்தருளி வந்தார்.  பின்பு அங்கிருந்து புறப்பட்ட ஸமயம் ஸீ விபாண்டக மகரிஷி மறுபடியும் இங்கு வரவேணும் என பிறார்த்தித்தார். இராவண வதம் முடிந்து லங்கையிலிருந்து புஷ்பக விமானத்தில் திரும்பி வரும்போது இந்த இடத்தில் விமானம் தடைபெற்று நின்றது. சீதாபிராட்டி, இது எற்கனவே விபாண்டக மகரிஷிக்கு கொடுத்த வாக்குருதியை ஞாபகப்படுத்த, ஸீ ராமனும் ஜானகியின் (கையை) ஹஸ்தத்தை தன் திருக்கைகளால் அவலம்பனம் செய்து விமானத்தில் இருந்து இறங்கி ஆச்ரமத்தில் தங்கி மேலும் சில காலம் கருணாகரனை ஆராதனை செய்து அவருடன் அயோத்தி சென்றதாக வரலாறு. சில காலத்திற்கு பிறகு விபாண்டகமஹரிஷியும் தானும் ஆராதித்த ஸீ கருணாகரனை சிறிய திருவடியிடம் கொடுத்து அனுப்பி இங்கு எழுந்தருளச் செய்தார். சிறிய திருவடியும் தினம் இப் பெருமாளை ஆரதித்து வரும்போது ஒருநாள் ஸீ ராமசந்திர புஷ்கரிணியில் நீராடிக் கொண்டிருக்கும்போது ஸீ ராமன், பிராட்டி, லஷ்மணன் இவர்களை புஷ்கரிணிக்குள் கண்டு பிரமித்து கோவிலுக்கு சென்ற சமயம் அங்கு அந்த மூவரும் பிரதிஷ்டை நிலையில் இருப்பதை ஸெவித்தார். அது முதல் அவரும் கோவிலுக்கு எதிரில் தனி ஸந்நிதியில் எழுந்தருளியிருக்கிறார்.

1795 வருஷம் கர்னல் லையனஸ் பிளேஸ் என்ற கலக்டர் வெள்ளத்தில் கரை உடைந்து ஏரியை பார்க்க வந்து அங்கு முகாம் இட்டிருந்தார். கரையில் செம்பனிமுடியாத ஒரு நிலையில் ஒரு நாள் இரவு நல்ல மழை பெய்யும் பொழுது அதை பரிசீலிக்கச் சென்ற அவர் கரையை இரு மனித உருவங்கள் வில் அம்பு இவைகளுடன் கரைஉடையாது கொண்டிருந்த காட்சியை கண்டு மெய்மறந்து மண்டியிட்டு புளகாங்கிதமடைந்தார். ஜனகவல்லித் தாயாரின் மண்டபத்தை அவர் செப்பனிட்டு அரசு செலவில் புதுபித்த வரலாறும் இன்றளவும் அங்கிருக்கும் கல்வெட்டிலிருந்து தெரிய வருகிறது.

1935 வருஷம் ஸீ மான் மக்னிராம்ஸேட் பாங்கூர் என்ற தனிகர் இக்கோயிலின் ஜீர்ணோத்தாரணம் செய்யும் சமயம் கோவில் சுவர் கீழ் 20 அடி பள்ளத்தில் ஒரு மண்டபம் தெறிந்தது. அம்மண்டபத்தின் நடுவில் கமலாஸன வடிவுடைய ஒரு பள்ளத்தில் நவநீத க்ருஷ்ணன் விக்ரஹம், சில மூளா பாத்ரங்கள், திருஉருவச்சிலைக்குறிய‌ சங்கு சக்கரங்கள் கிடைத்தன. அவைகளை தனி ஸந்நிதியில் எழுந்தருளபண்ணி பூஜையும் செய்து வருகிறார்கள். பெரிய நம்பிகள் ஸீ பகவத் ராமானுஜருக்கு பஞ்ச ஸம்ஸ்கார தீஷையின் போது உபயோகப்ப்டுத்தப் பட்டவையாக இன்றும் காணக்கிடைப்பது நமது பாக்ய விசெஷமாக, கோவிலுக்குள் இந்த பாதாள அரை இன்றும் காப்பாற்றப்பட்டு வருகிறது.

– கல்யாணபுரம் ஈச்சம்பாடி வெங்கடேசன்

 

More news about Mathuranthakam:

English Man’s Prapatti: http://anudinam.org/2012/01/03/an-englishmans-prapatthi/

http://anudinam.org/2012/05/10/student-admission-in-madurantakam-paatasaala/

http://anudinam.org/2011/11/11/madhuranthakam-ramar-temple/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here