Thiruvallikeni Sri Parthasarathy Thirukkoil Brahmotsavam: Day 9

0
1,907 views

Thiruvallikeni Sri Parthasarathy Brahmotsavam Day 9 Morning: Porvai Kalaithal

Yesterday (2nd May 2013) was the 9th day of Sri Parthasarathi Brahmotsavam – Theerthavari.  In the morning, Sri Parthasarathi had purappadu in “Aaal mael pallakku” – a palanquin with four men holding the pallakku on their shoulders.

The day’s events are sequel to that of the previous days’ i.e., ‘Thirumangai Mannan Vaibhavam’; Emperuman turning Kaliyan into his astute devotee teaching him the  ‘ashtakshara mantra’

In symbolizing search of lost ring, Perumal has Himself covered with ‘sheets’ and comes incognito  – the deed of His searching is celebrated at the same place where He gave the Ultimate advice to Thirumangai Mannan.  With every circling round, one porvai is removed and for a few seconds one can have darshan of Sri Parthasarathy with no floral garlands – then many flowers adorn Perumal.  Upon reaching the Temple, the conflict with Ubaya Nachimar on His going out untold is enacted.

The conflict is not that of mortals…it is divine… ‘pranaya kalaham’ arising out of the celestial bonds between ‘Thayar and Perumal’….  In the words of Andal ~  *ஊடல் கூடலுணர்தல் புணர்தலை*

ஒன்பதாம் உத்சவம் – காலை “ஆளும் பல்லக்கு ” – இந்த பல்லக்கு நான்கு ஆட்கள் தங்கள் தோள்கள்  மீது பல்லக்கை  சுமப்பது போன்றே அமைந்து இருப்பதால் “ஆள் மேல் பல்லக்கு:.  இந்த பல்லக்கில் பெருமாள் நிறைய போர்வைகளை போற்றிக்கொண்டு எழுந்து அருள்கிறார்.   திருமங்கை மன்னனை ஆட்கொண்ட படலத்தில், பெருமாள் ஒரு கணையாழியை [மோதிரத்தை] தொலைப்பதாகவும், அதிகாலை பெருமாள்   நாச்சிமாருக்கு கூட தெரியாமல்  தனது மோதிரத்தை தேடி போர்வையுடன் வந்து,  முன் தினம் கலியன்  வைபவம் நடந்த அதே இடத்தில் நகையை தேடும் வைபவம் “போர்வை களைதல்” என  கொண்டாடப்படுகிறது.

கலியன் வைபவம் நடந்து, திருத்தி பணி கொண்டாடப்பட்டு,  பட்டோலை வாசிக்கப்பட்ட அதே இடத்தில் பெருமாள் பல்லக்கு ஒன்பது சுற்றுக்கள் சுற்றி ஏளப்பண்ணப்படும். ஒவ்வொரு சுற்றின் போதும், ஒவ்வொரு போர்வையாக களையப்பட்டு, பெருமாள் பிறகு அழகான மலர் மாலைகள் அணிந்து எழுந்து அருள்வார்.

திருக்கோவிலை சென்றடைந்ததும்  ‘மட்டையடி’ எனப்படும் ப்ரணய கலஹம்’  – எனப்படும் பிணக்கு – ஊடலில்  பெருமாள் எழுந்து அருளும் போது,  உபய நாச்சிமார்  திருக்கதவை சாற்றி விட, பெருமாள் மறுபடி மறுபடி திரும்ப ஏளும் வைபவமும்,  சுவாமி நம்மாழ்வார் வந்து பிணக்கை தீர்த்து வைப்பதும் நடைபெறுகிறது.    ப்ரணய கலஹ  ஊடலை திருக்கோவில் கைங்கர்யபர பட்டர் சுலோகம் அதன் அர்த்தத்துடன் படிக்கும் வைபவம் கோவில் வாசலில் நடக்கிறது. – கணையாழி மோதிரம் காணாமல் போனதே மெய்யானால், விடியப் பத்து நாழிகைக்குப் புறப்பட்டருளி, மின்னிடை மடவார் சேரியெலாம் புகுந்து யதா மனோரதம் அனுபவித்து அவ்வனுபவத்தாலே உண்டாயிருக்கிற அடையாளங்கள் எல்லாம் திருமேனியிலே தோற்றா நிற்கச் செய்தேயும் என  நாச்சியார்  வினவ, பெருமாள்  அலங்கார வார்த்தைகளால்  மறுமொழி அருளிச் செய்யும் பிரபாவம் விமர்சையாக கொண்டாடப்படுகிறது.  பிறகு, பெருமாளும் நாச்சிமாரும் பூப்பந்து எறிந்து விளையாடுகின்றனர்.

இன்று காலை புறப்பாட்டின் போது எடுக்கப்பட்ட சில புகைப்படங்கள் இங்கே :

Thiruvallikeni Sri Parthasarathy Brahmotsavam Day 9 Evening: Kannadi Pallakku

On the  ninth day evening of the Sri Parthasarathi Swami Brahmothsavam, at Thiruvallikkeni divyadesam  [2nd May 2013]it is  – ‘Kannadi Pallakku’  – the palanquin embedded with beautiful mirror work.   There was a big, captivating, eye-capturing palanquin made of glass – rather with glasses fitted all over and with chandelier like things suspended on its arms.  Slowly it faded into oblivion as it was not maintained properly and glass pieces started falling as it was not maintained in the proper manner.
For a few years, when there was no ‘Kannadi Pallakku’, Sri Parthasarathy had purappadu on ‘punniyakodi vimana chapparam’.  Then a newly made one – looking differently than the earlier one was submitted.  Now there is purappadu in the ‘kannadi pallakku’ – literally the palanquin made of glass.
திருவல்லிக்கேணியில் ஸ்ரீ பார்த்தசாரதி பிரம்மோத்சவம் முடியப் போகிறது. ஒன்பதாவது நாள் ஆன இன்று மாலை ‘கண்ணாடி பல்லக்கு’.
“மின் இலங்கு திரு உருவும் பெரிய தோளும், கைத்தலமும், அழகான திருக்கண்களும்’ உடைய எங்கள் பெருமாளுக்கு எதை சேர்வித்து மேலும் மிளிரச் செய்வது !  முத்துப் போன்றவனும்  ஒளி பொருந்திய மரகதப்பச்சை போன்றவனும் ஆனா எம் முகில் வண்ணனை பல வாகனங்களில் சேவித்த நமக்கு இன்று ‘பெருமாள் கண்ணாடி பல்லக்கில் சேவை சாதித்து அருளினார்
கண்ணாடி கடினத்தன்மை கொண்ட, உடையக்கூடிய, ஒளியை ஊடுசெல்ல விடக்கூடிய, பளிங்குருவற்ற திண்மமுமான பொருளொன்றைக் குறிக்கிறது.  முக்கியமாக பளபளக்க வல்லது. இன்று ஒன்பதாம் நாள் – இரவு ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கண்ணாடி பல்லக்கில் எழுந்து அருளினார். கைரவிணி குளக்கரையினிலே, தெற்கு குளக்கரை தெருவில் ஒரு மண்டபம் உள்ளது.  இது கண்ணாடி பல்லக்கு மண்டபம்  என்றே வழங்கப்படுகிறது. பல வருடங்கள் இங்கே ‘அழகான கண்ணாடி பல்லக்கு’ வைக்கப்பட்டு இருந்தது.  பெரிய பல்லக்கு – முழுதும் கண்ணாடி வேலைப்பாடுகளுடன், பெரிய குஞ்சலங்கள் போன்று தொங்கும் கண்ணாடிகள் உடன் அழகாக இருந்தது இது. இதில் இருந்த முப்பட்டகங்கள் பிரமிக்க வைக்கும்; ஒளிக்கற்றைகளை சிதறடித்து வண்ண ஜாலங்கள் செய்யும்.
உத்சவத்துக்கு சில மணி நேரங்கள் முன்பு, இந்த மண்டபத்தில் இருந்து படோபடமாக ஏளப்பண்ணப்பட்டு  கோவில் வாகன மண்டபத்தை வந்து சேரும்.  காலப்போக்கில் கண்ணாடிகள் உதிர்ந்து, பல்லக்கு பொலிவு இழந்து இந்த புறப்பாடு நின்று போனது.  பெருமாள் ஒன்பதாம் உத்சவம் இரவு, புண்ணியகோடி  விமானத்தின், விமானம் இல்லாமல் சப்பரம் மட்டும் உள்ள அமைப்பில், சில வருடங்கள் ஏளினார்.  இந்த மண்டபம்  அலுவலக அதிகாரிகள் கார் நிற்கும் இடமாக மாறிப்போனது வருத்தமே!
சில வருடங்கள் முன் ஒரு பக்தர்      (திரு. என் சி ஸ்ரீதர்) புதிதாக மற்றொரு கண்ணாடி பல்லக்கு சமர்ப்பித்தார்.  கண்ணாடி பல்லக்கில் ஸ்ரீ பார்த்தசாரதி   பெருமாள், எதிரே உபயநாச்சிமார் எழுந்து அருளி இருக்க, சிறப்பு நாதஸ்வர கச்சேரி, வாண வேடிக்கைகளுடன்,   விமர்சையாக புறப்பாடு நடைபெற்றது.  இந்த ஏற்பாடுகள் திரு N.C. Sridhar  அவர்களால் செய்யப்பட்டவை. புறப்பாட்டின் போது எடுக்கப் பட்ட சில படங்கள் இங்கே :

Write-up and Photo Courtesy: Sri Srinivasan Sampathkumar

For previous days’ utsavam photographs, please visit

http://anudinam.org/2013/05/02/thiruvallikeni-sri-parthasarathy-thirukkoil-brahmotsavam-kudhirai-vahanam/

http://anudinam.org/2013/05/01/thiruvallikeni-sri-parthasarathy-thirukkoil-brahmotsavam-vennai-thazhi-kannan-thirukolam/

http://anudinam.org/2013/04/30/thiruvallikeni-sri-parthasarathy-thirukkoil-brahmotsavam-thiruther/

http://anudinam.org/2013/04/30/sri-parthasarathy-swami-brahmothsavam-ainthaam-aaram-and-ezham-thirunaal/

http://anudinam.org/2013/05/02/thiruvallikeni-sri-parthasarathy-thirukkoil-brahmotsavam-yanai-vahanam/

http://anudinam.org/2013/04/28/sri-parthasarathy-swami-brahmothsavam-aaram-thirunal/

http://anudinam.org/2013/04/26/thiruvallikkeni-sri-parthasarathy-swami-brahmothsavam-moondram-thirunaal

http://anudinam.org/2013/04/25/thiruvallikkeni-sri-parthasarathy-swami-brahmothsavam-irandam-thirunaal/

http://anudinam.org/2013/04/24/thiruvallikkeni-sri-parthasarathy-swami-brahmothsavam/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here