Thiruvelliyangudi Sri Kolavilliramar Thirukkoil Balalayam

0
2,543 views

kolavilliramar thiruvelliyangudi

On December 13, 2013, Balalayam took place well at Thiruvelliyangudi Sri Kolavilliramar Temple, one of the 108 Divya Desams. Significantly, during the homam, a Garuda Paravai (bird) was sitting on top of the Vimanam. This kainkaryam is taking place with the help of all the astikas as well as with the permission of the Tamil Nadu Hindu Religious Endowment Department.

With the grace of Sri Maragathavalli Thayar and Ksheerabdinathan Sri Kolavilliramar and Acharyas, in July 2013, after twelve years, samproksanam activities commenced. The renovation activities include the following:

  • Sri Vishnu Sannidhi, Garudazhwar Sannidhi, Azhwargal Sannidhi and Pushkalavarttaka Vimanam Jeernodarana Ashta Bandhanam (Rs 7 lakhs)
  • Sri Thayar Sannidhi  Jeernodarana Ashta Bandhanam (Rs 5.5 lakhs)
  • Sri Andal and Sri Hanuman Sannidhi Thirupani (Rs 3.5 lakhs)
  • Renovation of the Madil Suvaru (compound wall), which was built in the period of the Cholas, the Vijayanagar king Sri Krishnadevaraya, Thanjavur Maratha king, as it is on the brink of collapse (Rs 15 lakhs)
  • Renovation of Raja Gopuram and Ceppu Kalasa Ashta Bandhanam (Rs 6 lakhs)
  • Excavation, construction and samproksana homas (Bhoomi puja, Vimana-Gopura Balalayam, Murthy Balalayam, Samproksanam, Tadiyaradhanai, Veda-Divya Prabandam goshti) will involve a total cost of about Rs 40 lakhs.

For more information, interested Astikaas may contact: Sri Sriraman – 91-9841016079 Or Sri Vijayaraghavan 91-9940078350 or by email – tkssriram@hotmail.com and tkpvijay@gmail.com

108 திவ்ய தேசம் – திருவெள்ளியங்குடி – ஸ்ரீ கோலவில்லி ராமர் கோவில் ஸம்ப்ரோக்ஷணம்

ஸ்ரீ கோலவில்லி ராமர் கோவிலானது 108 வைணவ திவ்ய தேச கோவில்களில் ஒன்றாகும். இது சுக்ர புரி என்றும் பார்கவபுரி என்றும் அழைக்கப்பெற்றது.

மூலவர் – ஸ்ரீ ஷீராப்தி நாதன் – உற்சவர் – ஸ்ரீ கோலவில்லி ராமர் (எ) ஸருங்கார சுந்தரர்- தாயார் – ஸ்ரீ மரகதவல்லி – விமானம் – புஷ்கலாவர்த்தக விமானம் – தீர்த்தம் – இந்திர, சுக்ர, பிரம்ம,  பராசர தீர்த்தம், நதி – மண்ணியாறு, திவ்ய பிரபந்த  மங்களாசாசனம் – ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் – 10 பாசுரங்கள்.

சோழ நாட்டு திவ்ய தேசங்களில் நடுநாயகமாய், மண்ணியாற்றின் நதிக்கரையில்,  4 தீர்த்த புஷ்கரணிகளுடன் , புஷ்கலாவர்த்தக விமானத்தின் கீழ், ஸர்வ லோக சரண்யனான எம்பெருமான் ஸ்ரீமந்  நாராயணன் ஸ்ரீ ஷீராப்தி நாதனாக, வரப்ரஸாதியாக காட்சி அளிக்கின்றார். திருவிக்கிரம அவதாரத்தின் போது தன் கண்ணை இழந்த சுக்ராச்சாரியார் இந்த பெருமாளை வழிபட்டு கண்ணொளியை மீண்டும் பெற்றார் என்பது இந்த ஸ்தலத்தின் பெருமை.

திருவெள்ளியங்குடியானது மூர்த்தி, க்ஷேத்ரம் தீர்த்தம் என்னும் முப்பாங்கும் அமையப்பெற்ற ஸ்ரீவைகுணடம் மற்றும்  திருவரங்கம் போல் ஒரு ஒப்பான உன்னத க்ஷேத்ரம். இந்த திவ்ய தேச எம்பெருமானை திருமங்கை ஆழ்வார் தனது தேனினும் இனிய பெரிய திருமொழியில் 10 பாசுரங்களால் மங்களாசாசனம் செய்துள்ளார். ( 4ஆம் பெரிய திருமொழி-10ஆம் திருவந்தாதி )

இந்த க்ஷேத்ரம், 4 யுகங்களிலும் இருந்துள்ளதைப் பற்றியும் தனது பெரிய திருமொழியில் குறிப்புகள் செய்துள்ளார். கலியுகத்தில் எம்பெருமான் திருவுள்ளத்தால், ஆஸ்திக உள்ளங்கள் ஒன்றுகூடி, கடந்த 2001ஆம் ஆண்டு திருக்கோவில் திருப்பணி செய்யப்பட்டு ஸம்ப்ரோக்ஷணம் செய்விக்கப்பட்டது. இக்கோவில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ளது.

பன்னிரண்டு ஆண்டுகளுக்குப் பிறகு இப்பொழுது ஸம்ப்ரோக்ஷணம் செய்விக்கும் பணி 2013 ஆம் ஆண்டு ஜூலை மாதம் எம்பெருமான் ஸ்ரீமந் நாராயணன் மற்றும் எம்பெருமானார் ஸ்ரீமத் ராமானுஜரது கிருபையாலும் ஆசார்ய பெருமக்கள் நல்லாசியாலும் துவங்க பட்டது.

இந்த ஸம்ப்ரோக்ஷணத்தில் கீழ்க்கண்ட திருப்பணிகள் செய்யப்பட உள்ளன.

  1. ஸ்ரீ பெருமாள் ஸன்னதி, ஸ்ரீகருடன் ஸன்னதி, ஆழ்வாராதிகள் ஸன்னதி மற்றும் புஷ்கலாவர்த்தக விமான ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தனம் ( ரூ 7 லக்ஷம்)
  2. ஸ்ரீ தாயார் ஸன்னதி & விமான ஜீர்ணோத்தாரண அஷ்ட பந்தனம்  ( ரூ 5.5 லக்ஷம்)
  3. ஸ்ரீ ஆண்டாள் ஸன்னதி மற்றும் ஸ்ரீ ஆஞ்சநேயர் ஸன்னதி திருப்பணி (ரூ 3.5 லக்ஷம்)
  4. சோழர்கள் காலத்தில் கட்டப்பெற்றதும், விஜயநகர அரசர் ஸ்ரீகிருஷ்ணதேவராயராலும் , தஞ்சை மராட்டிய மன்னர்களாலும்  திருப்பணி செய்யப் பெற்றதுமான  மதில் சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது – இந்த மதில் சுவரைச் செப்பனிடுதல்.( ரூ 15 லக்ஷம்)
  5. இராஜகோபுரம் – செப்பனிடுதல் மற்றும் செப்புக் கலச அஷ்ட பந்தனம் – ( ரூ 6 லக்ஷம்)

செப்பனிடுதல் , கட்டிட வேலை மற்றும் ஸம்ப்ரோக்ஷன ஹோமங்கள் ( பூமி பூஜை, விமான – கோபுர பாலாலயம், மூர்த்தி பாலாலயம், ஸம்ப்ரோக்ஷணம், ததியாராதனை, வேத – திவ்ய ப்ரபந்தம் கோஷ்டி ) முடிய மொத்தம் சுமார் ரூபாய் 40 லக்ஷம் வரை செலவுகள் உள்ளன.

ஸ்ரீ கோலவில்லிராம கைங்கர்யமான இந்த திருப்பணி, தமிழ் நாடு இந்து சமய அறநிலையத் துறையின் அனுமதியுடன், ஆஸ்திக அன்பர்களின் உதவிகளைக் கொண்டே செய்யப்பட உள்ளன.

ஆஸ்திக உள்ளங்களை இந்த 108 திவ்ய தேச கோவிலில் ஒன்றான  ஸ்ரீ கோலவில்லிராம ஸன்னதியின் கைங்கர்ய திருப்பணியில் தங்களையும், தங்கள் குடும்பங்களையும் ஐக்கியப்படுத்தி, ஸ்ரீ மரகதவல்லி தாயார் உடனுறை ஸ்ரீ க்ஷீராப்தி நாதன் எனப்படும் ஸ்ரீ கோலவில்லி ராமரின் பரிபூர்ண அனுக்ரஹத்தைப் பெறுமாறு வேண்டுகிறோம்.

திருவெள்ளியங்குடி குடிகந்தாடை ஸ்ரீராமன் – tkssriram@hotmail.com  (91-9841016079)
திருவெள்ளியங்குடி குடிகந்தாடை விஜயராகவன் –  tkpvijay@gmail.com (91-9940078350)

ஒள்ளிய கருமம் செய்வன் என்று உணர்ந்த மாவலி வேள்வியில் புக்கு
தெள்ளிய குறன் ஆய், மூவடி கொண்டு, திக்கு உர வளர்ந்தவன் கோயில்
அள்ளி அம் பொழில்வாய் இருந்து வாழ் குயில்கள் அரி அரி என்று அவை அழைப்ப
வெள்ளியார் வணங்க விரைந்து அருள் செய்வான் திருவெள்ளியங்குடி அதுவே
– ஸ்ரீ திருமங்கை ஆழ்வார் – பெரிய திருமொழி – 4.10.

The following are some of the photographs and video taken on the day of Balalayam followed by the official Koil Thirupani pathrigai…

Thiruvelliyangudi_utsavar moolavathayar with new vastharamUsthava thayar with new vastharam narasimhar with new vastharam Thiruvelliangudi Thiruvelliyangudi_garudangarudan Thiruvelliangudigarudan Thiruvelliangudi1kolavilliramar


Thiruvelliangudi samprokshanam Thiruvelliangudi samprokshanam1 Courtesy: Sri Vijay Parthasarathy

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here