On, 2nd May, 2015 Manmatha varusha Chithirai Hastham ; is the day 8 0f Chitrai Brahmotsavam was celebrated at Sri Bakthavatsala Perumal Temple, Thirukannamangai. In the morning Sri Bhakthavatsala perumal in vennai thazhi kannaan thirukolam thiruveedhi purappadu took place in Pallaku and Vishesha Thirumanjanam was performed. In the evening around 8.00 P.M Sri Bhakthavatsala Perumalin Kudhirai vahanam goes on Thiruveedhi Purappadu. Lot of Bhaagavathas from nearby villages participated in the Purappadu and had blessings of Divyadampatis.
ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 19ந் தேதி 02.05.2015 வெள்ளிக்கிழமை காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்” திருப்பல்லக்கில் “ வெண்ணெய்த் தாழி” சேவை வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார்.
இரவு 8 மணிக்கு “ குதிரை” வாகனத்தில் ஆரோஹணித்து திருவீதி வலம் வந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஆண்டாள் சகிதம் திருப்பள்ளியறையில் சேவை சாதித்து அருளினார்.
ஏராளமான பக்தர்கள் சேவித்து இன்புற்றனர்.
வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்*
கன்று வீசிய ஈசனை* பேய்மகள் –
துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*
தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-
நஞ்சினை* அமுதத்தினை நாதனை*
நச்சுவார் உச்சிமோல் நிற்கும் நம்பியை*
கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சினைக்*
கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*
The following are some of the photos taken during the occasion…
Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR