Thirukannamangai Swami Desikan Manmadha Varusha Thirunakshatra Utsavam Concludes : Part 4 (Periya Satrumurai)

5
1,997 views

Thirukannamangai Swami Desikan Periya Satrumurai 2015On September 24, 2015,  748th Thirunakshathra Mahothsavam of Swami Desikan took place  at Thirukkannamangai Divya Desam, Day 10  utsavam was celebrated well . Vishesha Visthaara thirumanjanam was performed for Swami Desikan and Sri Hayagrivar in the morning. The water was taken from Kaveri which is 2 Km away from the temple. 54  Different Variety  Prasadams are  made  Amuthupadi for Perumal on  Swami Desikan Thirunakshatram. Veda parayanam and  with Nalayira Divya Prabhanda parayanam took place in a very magnificent manner.  Lot of Bhaagavathaas took part in  Swami Nigamantha Mahadesikan Thirunakshatram at Thirukkannamangai.

மன்மத வருஷம் புரட்டாசி 7ந் தேதி வியாழக்கிழமை திருவோண  நன்நாளில் காலை 7 மணி சுமாருக்கு 2 மைல் தொலைவில் உள்ள காவிரியின் கிளை நதியான “வெட்டாற்றில்” இருந்து புனித நீர் யானை மீதும் மற்றும் சுமார் 33 கடங்களில், 33 ஸ்வாமிகளால் எடுத்து குடை தீவட்டி, மேள  வாத்ய கோஷ்டியுடன் திருவீதி முழுவதும் வலம் வந்து சந்நிதி முன் எழுந்தருளப் பண்ணி ஸ்தபனம் செய்யப்பட்டது.

ஸ்வாமிகளுக்கு சிறிது நேர ஓய்வுக்குப் பின் ததியாராதனை 10 மணிக்கு முடிந்து, சுமார் 11 மணிக்கு ஸ்ரீ ஹயக்ரீவன், ஸ்ரீ நிகமாந்த மஹா தேசிகனுக்கு வெளி மண்டபத்தில் விஸ்தார திருமஞ்சனம் மதியம் 1.30 வரை விசேஷமாக நடந்தது. ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேகவல்லி தாயாருக்கும் திருமஞ்சனம் நடைபெற்றது.  உடன் ஸ்ரீ ஹயக்ரீவரை சந்நிதி உள் எழுந்தருளப் பண்ணிவிட்டு, ஸ்ரீ தேசிகனுக்கு “கங்கையினும் புனிதமான தர்ஸ புஷ்கரிணி”யில் அபவிருதம்(தீர்த்தவாரி) ஆகி, உடனே விசேஷ அலங்காரம் செய்விக்கப்பட்டு ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளுக்கு புறப்பாடு ஆகி, யானை முன் செல்ல, ஸ்ரீ பாஷ்யகாரர், ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள், ஸ்ரீ அபிஷேக வல்லித் தாயார் சந்நிதிகளில் மங்களா சாசனம் ஆனது.

பின் ஸ்ரீ ஹயக்ரீவர்  மங்களாசாசனம் நடந்தது. அதன் பின் சுமார் 6.30 மணியளவில் திருப்பாவை சாற்றுமுறை நடந்தது.

இரவு 10 மணிக்கு ஸ்ரீ பக்தவத்சலப் பெருமாள் விசேஷ புஷ்ப அலங்காரம் செய்யப்பட்டு ஸ்ரீ தேசிகன் ஸந்நிதிக்கு எழுந்தருளுவதற்கான புறப்பாடு ஆனது. விசேஷ ப்ரம்மாண்ட வெடி,  வாண வேடிக்கை, விசேஷ நாதஸ்வரக் கச்சேரியுடன் உள் ப்ரகாரத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலன் எழுந்தருளி ஸ்ரீ ஆண்டாள் சந்நிதி அருகில் எழுந்தருளியவுடன், ஸ்ரீ தேசிகன் வேத கோஷத்துடன், பஞ்சாயி சொல்லி பூர்ண கும்பம் சமர்ப்பிக்கப்பட்டு, பட்டு, பரிவட்டம், மாலை இத்யாதிகளுடன் எதிர்கொண்டழைத்து பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதியை நோக்கி திரும்பி ஏளியவுடன், பட்டு பரிவட்டங்கள் சாற்றி ஆரத்தி ஆனதும்,  தஸாவதார ஸ்லோகம் 13ம்  ஒவ்வொரு ஸ்லோகமாக சேவிக்கப்பட்டு, ஒவ்வொரு ஸ்லோகத்திற்கும் ஒவ்வொரு தளிகை, அதாவது சுமார் 25 KG சுக்கு ஏலம் கலந்த நாட்டுச் சர்க்கரை, பாதாம் பருப்பு, பிஸ்தா பருப்பு, சாராபருப்பு, முந்திரி, உலர் திராக்ஷை, பேரீச்சை, டைமன் கல்கண்டு, குண்டு சீனா கல்கண்டு, குழவு ஜீனி, தேங்காய் பூ, கொப்பரை தேங்காய் பல், அக்ரூட் பருப்பு, அத்திப் பழம், dirty fruity, முதலிய பதார்த்தங்கள் ஒவ்வொன்றாக நைவேத்யம், கற்பூரம், காளாஞ்சி செய்விக்கப்பட்டு, பின் அனைத்து த்ரவியங்களையும் ஒன்றாக கலந்து சேவிக்க வந்திருக்கும் அனைத்து சேவார்த்திகளுக்கும் சந்தனம், காளாஞ்சியுடன் இந்த ப்ரசாதம் விநியோகிக்கப்பட்டது.

ப்ரசாத வினியோகம் ஆனதும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்குள் எழுந்தருளினார்.

மறு அலங்காரம் ஆகி, நவநீதம் தளிகை சமர்ப்பிக்கப் பட்டு திரை திறந்து, பின் நித்யானுசந்தான திருவாராதனம் கோஷ்டி நடைபெற்றது. அதன் பின் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஸ்ரீ தேசிகன் சந்நிதிக்கு எழுந்தருளியபின் பெருமாள் முன் சேவிப்பதற்காக 4000 ல் நிறுத்தி வைக்கப்பட்ட 400 பாசுரங்கள் சேவிப்பதற்கு தொடக்கம் ஆகி 400 பாசுரங்கள் சேவிக்கப்பட்டது.  மறுநாள் 25.09.2015 காலை 9 மணியளவில் மடப்பள்ளியிலிருந்து ஜீரா முதலிய தளிகைகளுடன் 54 வகை பக்ஷணங்கள் குடை தீவட்டி இத்யாதி மர்யாதைகளுடன் உள் ப்ரகாரத்தில் ப்ரதக்ஷணமாக எடுத்து வரப்பட்டு ஸ்ரீ தேசிகன் சந்நிதியில் உள்ள ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு திருப்பாவாடை தளிகை சமர்ப்பிக்கப்பட்டு அனைத்து தளிகைகளும் கண்டருளப் பட்டு பெரிய சாற்றுமுறை சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. அதன் பின் பெருமாள், ஆழ்வார்கள், ஆச்சார்யன், ஆஸ்ரம, ஸ்ரீ மடத்து ஸம்பாவனைகள் மற்றும் கோஷ்டி வேத பாராயண, அத்யாபக ஸ்வாமிகள் சம்பாவனைகள் ஆனதும் தீர்த்த கோஷ்டி ஆனது. அனைத்து ப்ரசாதங்களும் வந்திருந்த 100க்கணக்கான ஸேவார்த்திகளுக்கும் விநியோகம் செய்யப்பட்டது.

அதன் பின் சந்நிதி மர்யாதை ஆகி சுமார் மதியம் 1.30 மணியளவில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் பனி முக்காட்டு சேவையுடன் ஆஸ்தானத்து எழுந்தருளினார். ஸ்ரீ தேசிகன் விடையாற்றி புறப்பாடு நடந்தது. இரவு 8 மணிக்கு விடையாற்றி உத்ஸவத்துடன் ஆச்சார்யனின் 748 வது திருநக்ஷத்ர மஹோத்ஸவம் இனிதே முடிவடைந்தது.  ஏராளமான பக்தர்கள் கலந்து சேவித்து ஆச்சார்யன் மற்றும் ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.

These are some of the photos taken during the occasion…

Sri Bakthavathsala Perumal At Swamy Desikan Sannidhi and Periya Sattrumurai.

Thirukannamangai Sri Bhakthavatsala Perumal at Swami Desikan Sannadhi-1 2015Thirukannamangai Sri Bhakthavatsala Perumal at Swami Desikan Sannadh 2015 resized_DSCN0014-1resized_DSCN0014 resized_DSCN0015 resized_DSCN0016 resized_DSCN0017 resized_DSCN0018 resized_DSCN0018-1 resized_DSCN0020 resized_DSCN0021 resized_DSCN0022 resized_DSCN0022-1 resized_DSCN0023 resized_DSCN00211

Navaneetham Distribution

Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-01.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-02.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-03.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-04.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-05.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-06.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-07.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-08.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-09.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-10.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-11.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-12.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-13.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-14.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- navaneetham distribution   2015-15.jpg

Swami Nigamantha Mahadesikan Vidayatri Purappadu

Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-1.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-2.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-3.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-4.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-5.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-6.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-7.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-8.jpg Thirukannamangai Swami Desikan Thirunakshatra Utsavam Periya Satrumurai- vidayatri  2015-9.jpg

Writeup & Photography : Sri Dr Rajagopalan TSR

 

 

Print Friendly, PDF & Email

5 COMMENTS

  1. Face Bookல் ஸ்ரீமான் திருப்புல்லாணி ரகுவீரதயாள் ஸ்வாமியின் Comment: பல ஊர்களில் தேசிகன் உத்ஸவங்களைக் கண்டு களிக்கும் பேறு பெற்ற ஒரு பெரியவர் இந்த வருடம் திருக்கண்ணமங்கையில் ஒரு நாள் சேவித்தாராம். கண்டதில்லை இதுபோல உத்ஸவம் என்று சொல்லிச் சொல்லி வியக்கிறார். அவர் சொன்னதை அப்படியே இங்கு எழுதுவதை யாரும் தவறாகவோ அபசாரமாகவோ தயவு செய்து எண்ண வேண்டாம். அவர் சொன்னது “திருவஹீந்த்ரபுரத்தில் 10 நாள் செலவு செய்வதை திருக்கண்ணமங்கையில் ஒரு நாளில் செய்கிறார்கள். இரவு முயுவதும் 100க்கும் மேலான ஸ்ரீவைஷ்ணவர்கள் கூடியிருந்து உத்ஸவம் சிறக்க உறுதுணையாயிருந்தனர். தசாவதார ஸ்தோத்ரம் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு தளிகை அமுது செய்விக்கப் பட்டது. திருநக்ஷத்ரத்தன்று 54 வகை பக்ஷணங்கள். அருமையான பாராயணம் 10 நாளும். மாலைகள், லைட், மைக் ஏற்பாடுகள் அற்புதம் பெருமாள் இரவு முழுவதும் தேசிகன் சந்நிதியில் எழுந்தருளி இருந்தார். .ஸ்ரீராஜகோபாலன் பார்த்துப் பார்த்துச் செய்த உபசாரங்களோ சொல்லி முடியாது. அருமையோ அருமை” எங்களைப்போல் சிறிய அளவிலே கொண்டாடுபவர்களுக்கு இது இன்னும் நிறையப் பண்ணவேண்டும் என்ற ஆசையை உண்டாக்குகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here