Melpathi Sri Vijayaraghava Perumal Sannadhi Punarutharana Kaingarya Appeal

4
1,505 views

melpathi-vijayaraghava-perumal-temple-kaingarya-appeal

Melpathi Sri Vijayaraghava Perumal Sannadhi committee and Melpathi Villagers have planned to do the temple renovation of Sri Vijayaraghava Perumal Sannadhi at Melpathi,Vandavasi Vattam, Thiruvannamalai. This temple was constructed around 400 year before and in time due to improper maintenance and lack of fund the structure all got dilapidated. They need  funds to complete the renovation and to do Samprokshanam in grand manner. So the temple committee request astikas to contribute yathasakthi sambhavanai as per their wish to complete the renovation.

மேல்பாதி ஸ்ரீ மரகதவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஸன்னிதி புனருத்தாரண கைங்கர்ய விண்ணப்பம்.

தொண்டை மண்டலமான காஞ்சிக்கு தெற்கே அமைந்திருக்கும் சுகக்ஷேத்திரமான வந்தவாசியிலிருந்து சேத்துப்பட்டு செல்லும் வழியில் அமைந்துள்ளது மேல்பாதி என்னும் கிராமம். மேற்படி கிராமத்தில் 108 திவ்யதேசங்களில் ஒன்றான திருப்புட்குழியில் எழுந்தருளியிருக்கும் நாயகனாம் ஸ்ரீ விஜயராகவ பெருமாளுக்கு 400 வருடங்களுக்கு முன்பிருந்த பெரியோர்களால் ஸன்னிதி கட்டப்பட்டு நித்ய திருவாராதனங்களும் உத்ஸவாதிகளும் விசேஷமாக நடைபெற்று வந்துள்ளது. எனினும் காலப்போக்கில் அவ்வூரில் இருந்த பெரியோர்கள் நகரத்தை நோக்கிச் சென்றுவிட்டதால் போதிய பராமரிப்பின்றி பெருமாள் ஸன்னிதியானது சிதிலமடைந்துவிட்டது. சமீபத்தில் இந்த ஸன்னிதியை புனருத்தாரணம் செய்ய விரும்பி கிராம பொதுமக்களும் இவ்வூரைச் சேர்ந்த ஸ்ரீவைஷ்ணவர்களும் இணைந்து ஸ்ரீ விஜயராகவப் பெருமாள் ஆலயத் திருப்பணி டிரஸ்ட் என்னும் அறக்கட்டளையத் தொடங்கியுள்ளனர். இந்த அமைப்பின் மூலமாக தற்போது ஸன்னிதியில் பாலாலயம் செய்யப்பட்டு புனருத்தாரண பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. எனினும் போதிய நிதி ஆதாரங்கள் இல்லாத காரணத்தினால் மேற்படி கைங்கர்யம் தொடர்ந்து நடைபெற்று ஸம்ப்ரோக்ஷணம் விரைந்து நடக்க ஆஸ்திகர்கள் தங்களால் இயன்ற அளவு பொருளுதவி செய்து ஸ்ரீ மரகதவல்லி நாயிகா ஸமேத ஸ்ரீ விஜயராகவ பெருமாளின் க்ருபா கடாக்ஷத்திற்கு பாத்திரராகும்படி ப்ரார்த்திக்கிறோம்.

நன்கொடை அளிக்க விரும்புவோர் கீழ்கண்ட வங்கி கணக்கில் செலுத்தலாம்.

A/C.No. 1183155000190310
IFSC Code: KVBL0001183 (KVB, Vandavasi Branch)
MICR Code: 605053010

தொடர்புக்கு: ஸ்ரீ. சந்தான ஐயங்கார் – 9444404899

melpathi-vijayaraghava-perumal-temple-kaingarya-appeal-1

 

Print Friendly, PDF & Email

4 COMMENTS

  1. sir I donated for the above requested . However there has been no response from the person whose number is mentioned above on the receipt or even what is being done on this.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here