Periya Thirumozhi – Thirumangaialwar

2
1,056 views

ஆங்கு மாவலி வேள்வியி லிரந்துசென் றகலிட மளந்து ஆயர்,

பூங்கொ டிக்கின விடைபொரு தவனிடம் பொன்மலர் திகழ்,வேங்கை

கோங்கு செண்பகக் கொம்பினில் குதிகொடு குரக்கினம் இரைத்தோடி

தேன்க லந்தண் பலங்கனி நுகர்த்தரு திருவயிந் திரபுரமே. – பெரிய திருமொழி

பதவுரை

மாவலி வேள்வியில் சென்று இரந்து

மஹாபலியின் யாக பூமியிலே        (மாணியுருவாகிச்) சென்று (மூவடிமண்) யாசித்துப் பெற்று
ஆங்கு

அவ்விடத்திலேயே
அகல் இடம் அளந்து

பரந்த உலகம் முழுவதையும் அளந்து கொணடவனும்
ஆயர் பூங்கொடிக்கு

அழகிய இடைப்பெண்ணான நப்பின்னைப் பிராட்டிக்காக
இனம் விடை

ஓரினமான ஏழு ரிஷபங்களையும்
பொருதவன் இடம்

போர்செய்து முடித்த பெருமானுறையும் இடமாவது;
குரங்கு இனம்

குரங்குகளின் கூட்டமானது,
பொன்மலர்திகழ்

பொன்னிறமான மலர்கள் விளங்காநின்ற
வேங்கை கோங்கு செண்பகம் கொம்பினில்

வேங்கைமரம், கோங்குமரம்,            செண்பக மரம் என்பனவற்றின்  கொம்புகளிலே
குதிகொடு இரைத்து ஓடி

குதித்தல் செய்துகொண்டும் பெரிய ஆரவாரங்கள்   செய்துகொண்டும் இங்குமிங்கும் ஓடிக்கொண்டும்
தேன் கலந்த தண்பலங்கனி நுகரிதரு

தேன் மிக்க சிறந்த பலாப்பழங்களை               உட்கொள்ளப்பெற்ற

திரு அயிந்திபுரம்-.

 

விளக்க உரை

***- குரங்கு+இனம், குரக்கினம்; குரங்குகளைக் கூறியது சபலரான ஸம்ஸாரிகளைக் கூறியவாறாம். நின்றவா நில்லா நெஞ்சினை யுடையராய் ஒன்றைவிட்டு ஒன்றைப் பற்றுகிற க்ஷூத்ர பலார்த்திகளான ஸம்ஸாரிகளுக்கும் வாநரங்களுக்கும் ஸாம்யம் பொருந்துமன்றோ: இப்படிப்பட்ட ஸம்ஸாரிகள் விஷய போகங்களிலே மண்டித் திரியாநிற்கச் செய்தேயும் பலங்கனி போன்ற பகவத் குணங்களையும் இடையிடையே அநுபவித்து வாழும்படியைக் கூறியவாறு.

வேங்கைமரம், கோங்குமரம், செண்பகமரம் ஆகிய இவற்றின் பூக்கள் பொன்னிறமா யிருக்குமாதலால் ‘ பொன்மலர்திகழ்’ என்றது. இம்மரங்களைச் சொன்னது (ஸ்வாபதேசத்தில்) நெஞ்சைக் கவர்கின்ற விஷயாந்திரங்களைச் சொன்னபடி, “குதிகொடு” என்றதில், குதி-முதனிலைத் தொழிற் பெயர்: “கொம்பேற்றியிருந்து குதி பயிற்றும்” என்றார்பெரியாழ்வாரும்.

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. It will be really very use full to have English translation or commentary in all Divya Prabhadam & slokas chapter for the Sri vaishnavas settled in Karnataka & other places.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here