பதினொன்றாம் பத்து ஏழாம் திருமொழி

0
991 views

மையார் கடலும் மணிவரையும் மா முகிலும்
கொய்யார் குவளையும் காயாவும் போன்று இருண்ட
மெய்யானை மெய்யமலையானைச் சங்கேந்தும்
கையானை கைதொழாக் கையல்லகண்டாமே – திருமங்கையாழ்வார்

பதவுரை

மையார் கடலும் கருங்கடலையும்
மணிவரையும் நீலமணிமயமான மலையையும்
மா முகிலும் காளமேகத்தையும்
கொய் ஆர் குவளையும் பறிக்கவேணுமென்று விரும்பத்தக்க நீலோற்பலத்தையும்
காயாவும் காயாம்பூவையும்
போன்று ஒத்து
இருண்ட கறுத்த
மெய்யானை திருமேனியையுடையவனும்
மெய்ய மலையானை திருமெய்யமலையில்கோயில் கொண்டிருப்பவனும்
சங்கு ஏந்தும் கையானை திருச்சங்கை ஏந்திக்கொண்டிருக்கின்ற திருக்கையையுடையனுமான பெருமானை
தொழா அஞ்சலி பண்ணாத
கை கைகளானவை
கை அல்ல கைகளேயல்ல
கண்டாம் (இதனை நாம் நன்கு) அறிவோம்.


ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

விளக்க உரை***- ஸர்சேச்வரனைத் தொழாத கைகள் கையல்ல, உலக்கையே என்றதாயிற்று. கைதொழாக் கையல்ல-தொழாக்கை கையல்ல என்று அந்வயிப்பது. கையல்ல, உலக்கையே.

English Translation
The Lord has a dark hue like the deep ocean, the gem mountain, the laden cloud, the blue lotus and the kaya flower. He bears a conch in his hand, and resides in Tirumeyyam. Those who do not fold their hands in worship hae no hands, We know it.

source:

dravidaveda.org

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here