பெரிய திருமொழி – 3

0
1,006 views
Periyathirumozhi 1.1.3

பெரிய திருமொழி முதற்பத்து முதல் திருமொழி

Periyathirumozhi 1.1.3
சேமமே வேண்டி நன்மையையே அபேக்ஷித்திருந்தும் (அதற்கு உறுப்பாக வினை செய்யாமல்)
தீ வினை பெருக்கி துஷ்கருமங்களை அதிகமாகச் செய்து
தெரிவைமார் உருவமே மருவி ஸ்திரீகளுடைய வடிவழகையே பேணி
கழிந்த அந்நாள்கள் கீழே கழிந்த நாள்களானவை
ஊமனார் கண்ட கனவிலும் பழுது ஆய் ஒழிந்தன ஊமை கண்ட கனவிலுங் காட்டில் வீணாகக் கழிந்து போயின;
காமனார் தாதை மன்மதனுக்குப் பிதாவும்
நம்முடை அடிகள் நமக்கு ஸ்வாமியும்
தம் அடைந்தார் மனத்து இருப்பார் தம்மைப் பற்றினவர்களுடைய நெஞ்சில் நீங்காதிருப்பவருமான பெருமாளுடைய
நாமம் திருநாமமாகிய
நாராயணா என்னும் நாமம் நாராயண நாமத்தை
நான் உய்ய நான் உஜ்ஜீவிக்கும்படியாக
நான் கண்டு கொண்டேன் நான் காணப் பெற்றேன்.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

பகவத் விஷயரனுபவத்தாலே மிகவும் இனிதாகச் சொல்லவேண்டிய காலமெல்லாம் பாழாய்க் கழிந்தனவே என்கிற அனுதாபமே மீண்டும் மேலிட்டு உள்ளடங்காத துக்கந் தோன்றப் பேசுகிறார். ‘நமக்கு ஒர்வராலும் ஒருவிதமான துன்பமும் நேரிடக்கூடாது, இன்பமே பெருக வேண்டும்; க்ஷேமமாக நாம் வாழவேண்டும்’ என்கிற அபேக்ஷை மாத்திரம் பரிபூர்ணமாயிருந்தது; அவ் அபெக்ஷைக்குத் தக்கபடி நல்ல காரியங்களைச் செய்தாலன்றோ அப்படியே க்ஷேமமாக வாழலாகும்; அப்படியிருக்க, க்ஷேமத்தை விரும்புதல் மாத்திரஞ் செய்து நல்ல காரியமொன்றுஞ் செய்யாதொழிந்தேன்; அவ்வளவேயோ? பல கெட்ட காரியங்களையும் ஏராளமாகச் செய்து தீர்த்தேன்; ஸ்திரீகளுடைய வடிவழகிலே ஈடுபட்டுச் செய்யாத பாவமில்லை. இப்படி பாவமே செய்து பாவியான எனக்குத் கழிந்த நாள்கள் அந்தோ! வீணாகக் கழிந்தன. ஊமை கனாக்கண்டால் அதை ஒருவரிடத்தும் வாய் விட்டுச் சொல்லிக்கொண்டு ஆனந்திக்க முடியாது; ஆகவே ஊமை கண்ட கனாக்கள் பழுதேயாம்; ஊமையர்க்கு வாய்விட்டுச் சொல்லிக்கொள்ள முடியாமற் போனாலும் தம் நெஞ்சினுள்லேயாகிளும் நினைந்திருந்து மகிழக்கூடும். அப்படி நினைத்துத் தமக்குள்ளேயே மகிழக்கூடிய விஷயமும் ஒன்றில்லமையாலே ஊமனார் கண்ட கனவிலுங் காட்டில் வியர்த்தமாகவே என் நாள்கள் கழிந்து போயினவென்கிறார்.

ஆக முன்னடிகளாலே இழந்த நாளைக்கு அனுதபித்து, இன்று பெற்ற பேற்றின் கனத்தை நினைத்து மகிழ்ந்து பேசுகிறார் பின்னடிகளில்.

அழகிற் சிறந்த மன்மதனுக்கும் ஜநகனாகயாலே, அதி ஸுந்தரனாய், ஸர்வ ஸ்வமியாகயாலே, ப்ராப்தசேஷியாய், ஒருகால் தன்னை பணிந்தவர்களுடைய நெஞ்சை விட்டுப் பிரியாதவனாகாயாலே, ஸுலபனாயுமுள்ள எம்பெருமானுடைய திருநாமமாகிய ஸ்ரீமந்நாராயண மகாமந்த்ரத்தை இன்று நான் லபிக்கப்பெற்றேனாகையால் இனி எனக்கொரு குறையுமில்லை என்றாராயிற்று.

English Translation

Father-of-Kama, our Lord the great one, — lives in the heart of devotees. I found his Mantra, path of redemption, Narayana is the good name. Seeking my well-being, through countless misdeeds, I sought the shapely women then. Lost are the good days, spent in this manner, more useless than dreams-of-dumb-ones.

Source:
http://dravidaveda.org/

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here