Lokanayaki Thayar Sametha Thadalan Serthi Sevai, Sirkazhi

0
3,555 views

 

தாயார் ராப்பத்து 5 ஆம் நாள் (January 20, 2012) பெருமாள் தாயார் சேர்த்தி நடக்கிறது. அன்று காலையில் தாடாளன் பனி போர்வையுடன் கைத்தலத்தில் தாயார் சன்னதிக்கு எழுண்டருளுகிறான். தாயார் சன்னதியில் பெருமாளுக்கும் தாயாருக்கும் அலங்கார திருமஞ்சனம் நடக்கிறது.

மாலை தாயாரும் பெருமாளும் அவர்கள் ச்வருபத்தில் இருந்து மாற்றி சாத்துபடி கண்டருளுகிரார்கள். தாயார் சங்கு சக்ரதாரியாக நான்கு கரம்களுடன் பெருமாள் திருவாபரணங்கள் சாற்றிக்கொண்டு காட்சி கொடுக்கிறாள். பெருமாள் தாயாருடைய திருவாபரணங்கள் அனைத்தையும் சாற்றிகொள்கிறார்.

   

பெருமாள் தாயார் ச்வருபத்தில் வீதி புறப்பாடு கண்டு அருளிகிறார்

கோயிலுக்குள் வந்தவுடன் தாயார் பெருமாள் அதே கோலத்துடன் பிரஹாரம் வலம் வந்து பின் மாலை மாற்றுதல் நடக்கிறது.

தாயார் சன்னதியில் திவ்ய தம்பதிகள் வந்தவுடன் இந்த சாற்றுப்படி களைந்து அவர்கள் ச்வருபத்க்கு சாற்றுப்படி நடக்கிறது. பின் திருவாய்மொழி கோஷ்டி நடக்கிறது. பெருமாள் படி அமுத செய்தபின் பனி போர்வை சாற்றி ஆழ்வார் தாயார் பெருமாள் அவர்கள் ஆஸ்தானம் திரும்புகிறார்கள்.

இந்த சேவை வருஷம் ஒரே முறை 1 மணி நேர காலத்திற்கு நடக்கிறது.

Courtesy: Sri Ravi Parthasarathy Swami

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here