Thirunakshatram Celebrations at SriThoopul

0
277
Veda Goshty at ThoopulThere has been a series of Thirunakshatram celebrations last week, that of Vilakolipurumal, Swami Ramanuja and Srimath Appularat at Thoopul in Kanchipuram, The events took place for 8 days. Here is a write up from Dr. U. Ve. Satakopa Tatachar Swami

தாஸஸ்ய விஞ்ஞாபநம், எல்லா இடத்திலும் ஸ்ரீபாஷ்யகாரர் திருநக்ஷத்ர மஹோத்ஸவம் நடைபெற்று வருகிறது..ஸ்ரீதூப்புலில் மாத்ரம் ஸ்ரீவிளக்கொளிப்பெருமாள், ஸ்ரீபாஷ்யகாரர், ஸ்ரீஅப்பிள்ளார், என மூவரின் திருநக்ஷத்ரத்தை வருடம்தோறும் கொண்டாடி வருகிறோம்.

சித்திரை ரேவதீ ஸ்ரீவிளக்கொளிப்பெருமாள்   அவதார தினம், நமது ஸம்ப்ரதாயத்தில் எம்பெருமான் முதல் ஆசார்யன், ஸ்வாமி தேசிகன், சரணாகதி தீபிகையில்  “ஆத்யம் குரும் குருபரம்பரயாதிகம்யம்”,என்றனுபவித்துள்ளார். எம்பெருமானார் ஆசார்யஹாரத்தின் நடுவில் நாயகமணியாக திகழ்பவர், ஸ்வாமி தேசிகனால்  “யதிராஜேந நிபத்தநாயகஸ்ரீஃ “என்று கொண்டாடப்பட்டவர். இவர் திருநக்ஷத்ரம் 

சித்திரையில்  திருவாதிரை, இன்றையதினமே ஸ்வாமி தேசிகனின் மாதுலரும்  ஸாக்ஷாதாசார்யனுமான கிடாம்பி  ஆத்ரேயராமாநுஜரின் திருநக்ஷத்ரமுமாகும்,

“நமோ ராமாநுஜார்யாய வேதாந்தார்த்தப்ரதாயநே,  ஆத்ரேய பத்மநாபார்யஸுதாய குணசாலினே,” என்பதாக இவரின் தனியனை அனுஸந்தித்து வருகிறோம். மேலும்  இவர் தனியனாக ஸ்வாமி தேசிகன் ஸாதித்த  தனியன், “யஸ்மாதஸ்மாபிரேதத் யதபதிகதிதப்ராக்தன ப்ரக்ரியோத்யத் “ என்பது ப்ரஸித்தமாகவுள்ளது, ஸ்வாமி தேசிகன் அநேக இடங்களில்  தனது ஆசார்யனை குறிப்பிட்டுள்ளார்

அதிகரணஸாராவளியில்

1,”ஸ்ரீமத்ப்யாம் ஸ்யாதஸாவித்யநுபதி வரதாசார்ய ராமாநுஜாப்யாம்,”என்று இரண்டாவது ச்லோகம் உள்ளது,

2,”அச்ரௌஷம் சேஷகல்பாதஹமபி விதுஷோ வாதிஹம்ஸாம்புவாஹாத்,” சேஷகல்பாத் என்று  அப்பிள்ளாரை  ஸாக்ஷாத் ஸ்ரீபாஷ்யகாரருக்கு ஸமமாககொண்டாடியுள்ளார்,

3, கடைசி ச்லோகத்தில்  “தத்வக்தா வாஜிவக்த்ரஸ்ஸஹ மம குருபிர்வாதிஹமஸாம்புவாஹைஃ “என ஸ்ரீஹயக்ரீவனே எனது குருவான அப்பிள்ளாரோடு கூட இந்த அதிகரணஸாராவளிக்ரந்தத்தை சொன்னவர் என ஸாத்விகத்யாகபூர்கமாக தலைக்கட்டுகிறார்.

4  ,தத்வமுக்தாகலாபத்தில்  “ச்ருத்வா ராமாநுஜார்யாத் ஸதஸதபி” என்பதாக ஸாதித்துள்ளார்,

5,”வெள்ளை பரிமுகர் தேசிகராய்”  என்பதால்  அப்பிள்ளாரை ஸ்ரீஹயக்ரீவனின் அவதாரமாக அனுபவித்தாரெனலாம், ஸ்ரீஹயக்ரீவன் ஆசார்யனாக  உருவம் கொண்டு  நம் உள்ளத்தில்  எழுதியது,

6. ஸ்ரீமத் ஸாரத்தில் ப்ரதாந ப்ரதிதந்த்ராதிகாரத்தில்  மூலமந்த்ரத்தில் த்ருதீயபதத்தில் சதுர்த்தீ வேற்றுமையின் பொருள்  உறைக்குமிடத்தில்

“சேஷியுகந்த கைங்கர்யத்தை இளையபெருமாளுடயவும்,  இவருடய அவதாரவிசேஷமான திருவடிநிலையாழ்வாருடயவும் ப்ரவ்ருத்தி நிவ்ருத்திகளிலே தெளிவது, இது திருமந்த்ரார்த்தானுஸந்தாநத்துக்கு குறிப்பாக அப்புள்ளார் செய்த விரகு,”( விரகு- உதாஹரணம்)

7 ந்யாயஸித்தாஞ்சன க்ரந்தத்தில் “லப்தார்த்தோ வரதார்யபாதரஸிகாத்ராமானுஜாசார்யதஃ” என்று ஆசார்ய ப்ராசார்ய ஸ்மரணத்தை காணலாம்

இப்படியாக இன்னும் பல காணலாம்,இப்படி ஸ்வாமி தேசிகனால் கொண்டாடப்பட்ட ஸ்ரீஅப்புள்ளார் பர்யந்தமாக மூவரின் திருநக்ஷத்ரத்தை உத்தேசித்து  ரேவதீ முதல் திருவாதிரைவரையில் ஒரு ஸப்தாஹம் வேத ப்ரபந்த க்ரந்த பாராயணம் நடத்திவருகிறோம்,மேலும் இங்கு ஸ்ரீஅப்புள்ளார் திருநக்ஷத்ரம் நடத்த  காரணம் ,ஸ்வாமி தேசிகன் காலக்ஷேபம் செய்த ஸ்தலம் ஸ்ரீதூப்புல், இங்கு ஸ்வாமி தேசிகன்  தனது  விபவகாலத்தில்  ஸ்வாசார்யதிருநக்ஷத்ரத்தை விமர்சையாக நடத்தியிருப்பார்.மேலும் இங்கு ஸ்வாமியின் நித்யபடி திருவாராதநம் முதலியன விபவத்தில் உஞ்சவ்ருத்திமூலம் நடைபெற்றது போல்   இன்றும்   ஆஸ்திக சிஷ்யர்களின் உபயமாக நடைபெறுவதால்,விபவத்தில்  போல் ஸ்ரீ தேவாதிராஜன்  மங்களாசாஸனம் முதலியன நடைபெறுவதாலும், ஸ்வாமியின் அர்ச்சா திருமேனி காம்பீர்யத்தாலும் , ராவணன், சிசுபாலன் பரம்பரையில் ஜனித்த சில அஸூயுக்கள் அவமரியாதை செய்வதாலும்,  ஸ்வாமிதேசிகன் இங்கு இன்றளவும் விபவத்திலேயே எழுந்தருளியுள்ளதாக தாஸர்கள் எண்ணுவதால் ஸ்வாமியின் விபவகாலத்தில் தாஸர்களுக்கு ஜன்மம்  கிடைக்கவில்லையே என்ற  குறையில்லை,  ஆக ஸ்ரீதேசிகன் இங்கு இன்றளவும் ஸ்வாசார்யதிருநக்ஷத்ரத்தை விமர்சையாக நடத்துவதாகவும் அதில் தாஸர்களுக்கு  அன்வயம் கிடைக்க பாக்யம் பெற்றுள்ளதாகவும எண்ணி கைங்கர்யம் செய்யப்படுகிறது,

.கீதாபாஷ்யத்தில்  “அஹோ மஹதிதம்   வைஷம்யம், யத் ஏகஸ்மிந்நேவ கர்மணி  வர்த்தமாநாஸ்ஸங்கல்பமாத்ர பேதேந கேசிதல்ப பல பாகிநஃ-கேசிதநந்த பலபாகிநஃ-“கர்மஸ்வரூபம் ஸமானமானாலும் ஸங்கல்பத்தில் மாற்றத்தால் பலத்திலும் மாற்றமுண்டு என்பதால் நம்முடய ஸங்கல்பம்  ஸ்ரீ்அப்புள்ளார் திருநக்ஷத்ரமென்பதால் ஸ்வாமி தேசிகன் திருவுள்ளம் உகக்கும்,( பாகவதரான) ஸ்வாமி தேசிகன் திருவுள்ளமுகந்தால்  எம்பெருமானின் திருவுள்ளமுமுகக்குமென்பதும் ஸ்ரீமத்ஸாரத்தில் திருவடிநிலையாழ்வாரின் நிவ்ருத்தியில் பாகவதரான பரதாழ்வானின் திருவுள்ளமுகப்பால் எம்பெருமான் திருவுள்ளமுகந்ததை காணலாம்,

மேலும் நமக்கு ப்ரதானம் ஸ்வாமிதேசிகன்,  அவனுகந்த கைஙகர்யம், அவருடய ஆசார்யதிருநக்ஷத்ரத்தை விர்சையாக நடத்துவதாகும்,

,இந்தக்ரமத்தில்  இவ்வருடம் சித்திரை 7முதல் நாளது வெள்ளி வரையில் வேத ப்ரபந்த க்ரந்த பாராயணம் நடைபெற்று வெள்ளிகாலை சாத்துமறையுடன் பூர்த்தியாகிறது..

தர்சனஸ்தாபகரான ஸ்ரீபாஷ்யகாரர் அனுக்ரஹித்த க்ரந்தங்கள்

1, வேதார்த்தஸங்க்ரஹம், 2,ஸ்ரீபாஷ்யம், 3 வேதாந்ஸாரம்  4,வேதாந்ததீபம்,

5, ஸ்ரீமத்கீதாபாஷ்யம், 6, 7.8.கத்யத்ரயம், 9, நித்யக்ரந்தம்  என  ஒன்பதாகும்., இவற்றுள் , வேதார்த்தஸங்க்ரஹத்தில் “ச்ருதிந்யாயாபேதம்  ஜகதி விததம் மோஹநமிதம் தமோ யேநாபாஸ்தம்  ஸ ஹி விஜயதே யாமுநமுனிஃ”  என்பதாக  ஸ்ரீஆளவந்தாரை  ஸ்மரிக்கிறார்,ஸ்ரீபாஷ்யாதி த்ரயத்தில் பகவானை ஸ்மரித்து வேதாந்ததீபத்தில் “ப்ரணம்ய சிரஸாசார்யாந்” என்பதாக பொதுவாக

ஆசார்யர்களை ஸ்மரிக்கிறார், ஸ்ரீமத்கீதாபாஷ்யத்தில்  “யத்பதாம்போருஹத்யாந வித்வஸ்தாசேஷகல்மஷஃ, வஸ்துதாமுபயாதோஹம் யாமுநேயம் நமாமி தம்” என்பதாக ஸ்ரீஆளவந்தாரை மட்டும்  நமஸ்கரிக்கிறார். ஸ்ரீஆளவந்தார்  இவருக்கு ப்ராசார்யராவார்,  ஸ்வாசார்யனை நமஸ்கரியாமல்

ப்ராசார்யனை  ஸ்மரிப்பது சரியாகுமா என்பதாக வினவி  ப்ராசாரயனை ஸ்மரித்தாலும்  ஆசார்யனுக்கும்  திருவுள்ளம் உகக்குமென்பதாக ஸமாதானம் காண்கிறது, ஆனால் ஸ்வாமி தேசிகன்  அநேகமாக ஸ்வாசார்ய நமஸ்காரத்துடனே ப்ராசார்யனையும் ஸ்மரிக்கிறார், இதை முன்பு அனுபவித்தோம், இந்த க்ரமத்தில்

யஸ்மாதஸ்மாபிரேதத் யதிபதி கதித ப்ராக்தந ப்ரகரியோத்யத்

கர்மப்ரஹ்மாவமர்சப்ரபவ பஹுபலம் ஸார்த்தமக்ராஹி சாஸ்த்ரம்.

தம் விஷ்வக்பேதவித்யாஸ்திதிபதவிஷய ஸ்தேயபூதம் ப்ரபூதம்

வந்தேயாத்ரேயராமானுஜகுருமநகம் வாதிஹம்ஸாம்புவாஹம்.

இந்த ச்லோகத்தை ஸ்ரீஆத்ரேய ராமானுஜர் விஷயமாக ஸ்வாமி தேசிகன்

மீமாமஸா பாதுகா க்ரந்தத்தில் ஸாதித்துள்ளார், இதையே ஸ்ரீபாஷ்யகாலக்ஷேபத்தில்  தனியனாக அனுஸந்தித்து வருகிறோம்,

இதே க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் விஷயமாக ஸ்ரீகுமாரவரததேசிகன்

ஸ்ரீதேசிகமங்களத்தில் “ யஸ்மாதேவ மயா ஸர்வம் சாஸ்த்ரமக்ராஹி ந அந்யதஃ, தஸ்மை வேங்கடநாதாய மம நாதாய மங்களம். “என்று ஸாதித்தார்,

ஆக ப்ராசார்யனின் திருநக்ஷத்ரத்தை கொண்டாடினால்  ஆசார்யனின் ( தேசிகனின்)  திருவுள்ளமுகக்கும் என்பதால் .கொண்டாடப்பட்டது.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here