Thiruvallikeni Brahmotsavam Thiruther and Yanai Vahanam

0
1,349 views

On Day 7 (May 10, 2012) of the ongoing Brahmotsavam at  Thiruvallikeni Sri Parthasarathi Thirukkoil, Perumal had purappadu in Thiruther. Early morning Sri Parthasarathi with his consorts ascended the Thiruther. The purappadu began at around 07.30 am and concluded around 09.30 am.

இன்று ஏழாம் நாள் உத்சவம் – காலை திருத்தேர்.
தேர் என்றால் பிரம்மாண்டம் – மேலும் தேர் திருவிழா நடக்க ஊர் மக்கள் ஒன்று கூட வேண்டும்- ‘ஊர் கூடி தேர் இழுத்தல்’ என்பது மரபு. மரபு, பண்பாடு கடைபிடிக்கப்பட்டு வரும் கிராமங்களில் இன்றும், தேர் அன்று ஆண்கள் எவரும் ஊரை விட்டு போகமாட்டார்கள். அனைவரும் ஒன்று கூடி, தேர் திருவிழாவை சிறப்பிக்கச் செய்வர்.

திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி திருத்தேர் அழகானது. மிகப் பெரியது என்று சொல்லமுடியாது எனினும் அது உருண்டு ஓடி வரும் கொள்ளைகொள்ளும் அழகு பிரமிக்க வைக்கும். இதனது சக்கரங்கள், இரும்பாலானவை. மாட வீதிகள் தார் ரோடுகள் ஆனதால் சுமார் இரண்டு மணி நேரத்தில் புறப்பாடு முடிந்து விடும். ஏராளமான மக்கள் கூடி தேர் இழுப்பர். தேர் வடம் சில ஊர்களில் தாம்புக் கயிற்றினால் ஆனதாக இருக்கும்; சில இடங்களில் இரும்பு. திருவல்லிக்கேணியில் – இரும்பு.

இன்று காலை ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் வேத கோஷத்துடன் அதிகாலை 03.15 மணியளவில் திருதேருக்கு எழுந்து அருளினார். 07.31 மணிக்கு பக்தர்கள் வடம் பிடிக்க, புறப்பாடு ஆரம்பித்து 09.30 மணியளவில் தேர் நிலை திரும்பியது. இன்று சாயந்திரம் வரை பக்தர்கள், திருத்தேர் மீது ஏறி பெருமாள் சேவிக்கலாம். முன்பு திருத்தேர் முடிந்து, பெருமாள் இளைப்பாற வசந்த பங்களா எழுந்து அருளி, திருமஞ்சனம் கண்டுஅருளி வந்தார். இப்போது புறப்பாடும் திருமஞ்சனமும் நடை பெறுகிறது.

இன்றைய திருத்தேர் படங்கள் இங்கே.

On the previous day evening, Day 6 (May 9m 2012), Sri Parthasarathi Perumalhad purappadu on Yaanai (Elephant) vahanam.

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் இன்று ஆறாம் நாள். இன்று [9th May 2012] மாலை ஸ்ரீ பார்த்தசாரதி யானை வாகனத்தில் எழுந்து அருளினார். யானை வாகன புறப்பாட்டில் ‘ஏசல்”, “ஒய்யாளி” என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு. துளசிங்க பெருமாள் கோவில் தெருவில், ஸ்ரீ பாதம்தாங்கிகள் மூன்று தடவை வேகமாக முன்னும், பின்னும் ஏளப்பண்ணும் வைபவம் இது. முதல் இரண்டு தடவைகள் சிறிது தூரம் ஏளப் பண்ணிய பின்னர், மூன்றாவது தடவை, முழு தெருவும் வேகமாக எழுந்து அருள்வார். திரும்பும் போது, மிக துரித நடையிலும், அழகாகவும் ஏளப்பண்ணுவர்கள். ஒரு மிக பெரிய யானை ஒன்று வேகமாக நடந்து வருவதை போன்றே இது காணப்படும். இந்நிகழ்ச்சியை சேவிக்க நூற்றுக்கணக்கான மக்கள் திரள்வதும் ஒரு விசேஷம்.

யானை வாகனத்தின் மீது வெள்ளை அங்கி அணிந்து பட்டரும் பெருமாளுடன் அமர்ந்து சாமரம் வீசி வருவது தனி அழகு!

இன்று கோஷ்டியில் – பெரிய திருவந்தாதி, பெருமாள் திருமொழி, திருமாலை, திருப்பள்ளியெழுச்சி, அமலனிதிபிரான், கண்ணிநுண் சிறுத்தாம்பு – சேவிக்கபெற்று முதலாயிரம் சாற்றுமுறை ஆகிறது. யானை வாகன கோஷ்டிக்கு, திருமலையில் இருந்து “இளைய கேள்வியப்பன் ஜீயர் சுவாமி” எழுந்து அருளினார்.

பொழுது போக்க பல வாய்ப்புக்கள் உள்ள இந்நநாளில் திருவல்லிக்கேணி சிறுவர்கள் பெருமாள் சேவிக்க அணி திரள்கின்றனர். பிரம்மோத்சவ புறப்பாட்டின் போது, பெருமாளுக்கு பின்பு சிறுவர்கள் தாங்கள் செய்த வாகனத்துடன், ‘ சிறிய பெருமாள் ‘ ஏளப்பண்ணுவார்கள். அதீத முயற்சி எடுத்து, பெரிய பெருமாளைப் போலவே, இந்த ‘ குட்டி பெருமாள்களும் ‘ சௌந்தர்யத்துடன் விளங்குவர். இங்கே ‘சிறுவர்கள் பண்ணிய யானை வாகனத்தையும், அந்த யானை மீது, அமர்ந்து இருந்த பட்டரையும் காணலாம்.

For earlier days’ utsavams, please visit http://anudinam.org/2012/05/09/thiruvallikeni-sri-parthasarathi-thirukkoil-brahmotsavam-day-5-and-6/

Courtesy: Sri S. Sampathkumar

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here