குருவும் சீடரும்

0
833 views

Article by  Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy of Kanchi.

ஸ்வாமி தேசிகன் தான் அனுக்ரஹித்த பல க்ரந்தங்களில் சில பதங்களை அநேக இடங்களில்  விசேஷம் தோற்ற ஸாதிப்பது என ஸ்வீகரித்தார்.

1.இந்த க்ரமத்தில்  ஸ்வாமி தேசிகன் ஸந்நித்தாம்– ஸமீபத்திலாகட்டும் என பிராட்டி விஷயமாக கல்யாணானாமவிகலநிதிஃ காபி காருண்யஸீமா, நித்யாமோதா நிகமவசஸாம் மௌலிமந்தாரமாலா. ஸம்பத்திவ்யா மதுவிஜயினஸ்ஸந்நிதத்தாம் ஸதா மே  ஸைஷா தேவீ ஸகலபுவநப்ரார்த்தனா காமதேனுஃ என்றும்

நம்மத்திகிரித்திருமால் விஷயமாக ஸ்ரீவரதராஜபஞ்சாசத்தில்-

வ்யாதன்வானா தருணதுளஸீதாமபிஃ ஸ்வாமபிக்யாம்
மாதங்காத்ரௌ மரகதருசிம் புஷ்ணதீ மாநஸே நஃ
போகைச்வர்யப்ரியஸஹசரைஃ காபி லக்ஷ்மீ கடாக்ஷைஃ
பூயஸ்ச்யாமா புவஜநநீ தேவதா ஸந்நிதத்தாம். என்றும் ஸமானமாக ஸாதித்தார்

ஸ்வாமிதேசிகனுக்கு ப்ரியமானவர்கள்  தைவதமான தம்பதிகளே,திருமகளும், திருவிடம் மோஹம் கொண்ட மாலும்- நம்மத்திகிரித்திருமால், இவர்கள் விஷயகமான ஸ்தோத்ரத்தில் இவர்கள்  தன் ஸமீபத்தில் இருக்கட்டும் என ப்ரார்த்திக்கிறார்,ஆனபடியாலேயே காஞ்சீபுரத்தில்இன்றளவும்  இவர்கள் ஸ்வாமியை தமக்கு மிக அருகாமையில் எழுந்ருளச்செய்கிறார்கள், குருவான இவர் தமது தெய்வம் தமக்கு ஸமீபத்திலிருக்க வேண்டி  ப்ரார்த்திக்க இவரது சீடரான குமாரவரதாசார்ய ஸ்வாமி  குரவே தைவதாய ச என தமக்கு குருவான ஸ்வாமி தேசிகனே  தனக்கு தெய்வம் என ஸாதித்தபடியால்  இவர் தமது தெய்வம் தமக்கு ஸமீப்த்தில் இருக்கட்டும் என, ஸ்ரீமான் வேங்கடநாதார்யஃ கவிதார்கிககேஸரீ வேதாந்தாசார்யவர்யோ மே ஸந்நிதத்தாம் ஸதா ஹ்ருதி  என ப்ரார்தித்தார் போலும்.  ஸ்வாமி தேசிகன் தனது ஆசார்யன் ஸ்ரீஅப்பிள்ளார் விஷயகமாக  யஸ்மாதஸ்மாபிரேதத் யதிபதிகதிதப்ராக்தந…..ஸார்தமக்ராஹி சாஸ்த்ரம்.
 என ஸாதிக்க ஸ்ரீகுமார வரதாசார்ய ஸ்வாமீ யஸ்மாதேவ மயா ஸர்வம் சாஸ்த்ரமக்ராஹி நாந்யதஃ என ஸாதித்தார்.

2.மஹஃ- தேஜோவிசேஷம்,அதிசயமான தேஜஸ். எனும் பதத்தை ஸாதிக்கும் ஸ்தலங்கள்-
1.ஹயவதநமீடீமஹி மஹஃ– அஞ்ஞானமாகிற இருட்டை போக்கடிக்க தேஜோவிசேஷம் ஆவச்யகமாகும்.  ஆக இங்கு ப்ரயோகித்தார்.
2.ஏகம் வேகவதீமத்யே ஹஸ்திசைலேச த்ருச்யதே
உபாயபலபாவேன ஸ்வயம் வ்யக்தம் பரம் மஹஃ
மஹஃ–ஜ்யோதிஷாம் ஜ்யோதி ஃ என உபநிஷத்துகளால் போற்றப்பட்ட ஸ்ரீவிளக்கொளி பெருமாள் தேஜஸ்- வேகவதியின் நடுவில் உபாயமாகவும், ஹஸ்திசைலத்தில் பலரூபமாவும் காணப்படுகிறது.

3.கிமபி ரங்கதுர்யம் மஹஃ.
ப்ரசிஷ்யரான ப்ரதிவாதிபயங்கரம் ஸ்ரீஅண்ணன் ஸ்வாமி  ஸப்ததிரத்னமாலிகையில்
ஜீவநம் ஜகதாம் ஜீயாத் கிமப்யபகதஸ்ப்ருஹம்.
ஸ்வதந்த்ரம் ஸர்வதந்த்ரேஷு வேங்கடேசாஹ்வயம் மஹஃ என ஸாதித்தார். ஸ்வாமி தேசிகன் ஸ்ரீஹயக்ரீவன் விஷயமாக த்யானச்லோகரூபத்தில்
 வ்யாக்யாமுத்ராம் கரஸரஸிஜைஃபுஸ்தகம் சங்கசக்ரே
பிப்ரத் பிந்நஸ்படிகருசிரே புண்டரீகே நிஷண்ணஃ
அம்லாநஸ்ரீரம்ருதவிசதைரம்சுபிஃ ப்லாவயந்மாம்
ஆவிர்பூயாத் அநகமஹிமா மாநஸே வாகதீசஃ என்றும்
கோதாபிராட்டி விஷயமாக  சதமகமணிநீளா…………விலஸது ஹ்ருதி கோதா விஷ்ணுசித்தாத்மஜா நஃ என்றும் ஸாதிக்க

ப்ரசிஷ்யரான ப்ரதிவாதிபயங்கரம் ஸ்ரீஅண்ணன் ஸ்வாமி  ஸப்ததிரத்னமாலிகையில்
 ஸசங்கசக்ரலாஞ்சனஸ்ஸதூர்தவபுண்ட்ரமண்டிதஃ
ஸகணடலக்நஸத்துளஸ்யநர்கபத்மமாலிகஃ
ஸிதாநதரீயஸூத்தரீய யஞ்ஞஸூத்ரசோபிதஃ
மமாவிரஸ்து மாநஸே குஸ்ஸ வேங்கடேச்வரஃ.
இவைகள் மூலம் நமக்கு உபதேசிப்பது யஸ்யதேவே பக்திஃ  ததா குரௌ என சாஸ்த்ரம் வகுத்தரீதியில்  சிஷ்யர்களுக்கு ஆசார்யரிடம்  தேவதாவிச்வாசமாவச்யகம் என.  ஆக நாமும் போற்றுவோம்

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here