விடுவேனோவென் விளக்கை

0
1,008 views

விடுவேனோவென் விளக்கைஎன்னாவியை,
நடுவேவந்துய்யக் கொள்கின்றநாதனை,
தொடுவேசெய்திள ஆய்ச் சியர்க்கண்ணினுள்,
விடவேசெய்து விழிக்கும்பிரானையே.

Meaning:

The Lord who appeared before the cowherd-girls like on elf and played mischief with them, is my light and soul. Oh! How can I leave him now?

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

இதுவும் கீழ்ப்பாட்டுக்கு சேஷபூதம். திருவாய்ப்பாடியிலிடைப் பெண்கள் கண்ணபிரானைவிட்டுப் பரமபதத்தை விரும்பினால் நானும் எம்பெருமானைவிட்டுப் புறம்புபோவே னென்கிறார்.

தன் விஷயமாக விளையக்கூடிய அஜ்ஞாதாந்தகாரம் தொலையும்படி என்னை நிர்ஹேதுகமாக விஷயீகரித்துத் தன்னுடைய ஸ்வரூபரூப குண விபூதிகளை எனக்கு நன்கு விளங்கக் காட்டியளினவனும் *மாறி மாறிப் பல பிறப்பும் பிறந்து “ஆவாரார் துணையென்று அலைநீர்க்கடலுளழுந்தும் நாவாய்போல் பிறவிக்கடலுள் நின்று துளங்கிக் கிடந்த என்னைத் தானாகவேயெடுத்துக் கரைசேர்த்தவனும், இங்ஙனம் என்னைக் கரைசேர்ப்பதற்குறுப்பான அவர்ஜநீய ஸம்பந்தமுடையவனும், திருவாய்ப்பாடியில் வெண்ணெய் முதலியவற்றைக் களவுகண்டு ‘இவன் திருடினான்’ என்று முறையிட வந்த இளவாய்ச்சியர்க்கு மறுநாக்கெடுக்கவொண்ணாதபடி வேறொருவர்க்குந் தெரியாமே அவர்கள் கண்ணுள்ளே படு“படியாக ‘ஜாரசோர சிகாமணி” என்று ப்ரஸித்த மாம்படியான சேஷ்டிதங்களையும் கண்ணோட்டங்களையுஞ் செய்து அப்பெண்களை அடிமைகொண்டாற்போலே என்னை அடிமை கொண்டவனுமான பெருமானை விடுவேனோ? என்றாராயிற்று.

விடவு = விடனுடைய தன்மை; விடனென்பது வடசொல்; பெண்டிர்பால் தூர்த்தத்தனஞ் செய்பவன் விடன்; அவனது செயல், அல்லது தன்மை- விடவு.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here