என்னை நெகிழ்க்கிலும் என்னுடை

0
799 views

என்னை நெகிழ்க்கிலும் என்னுடை நன்னெஞ்சந்
தன்னை, அகல்விக்கத் தானும்கில்லானினி,
பின்னை நெடும்பணைத் தோள்மகிழ் பீடுடை,
முன்னை யமரர் முழுமுத லானே.

Meaning:

The Lord is first cause of the ancient celestials. He enjoys the embrace of Nappinnai’s bamboo-like arms. Even if he desires to forsake me now, my heart is so good, he has not the power to leave and go.

ஸ்ரீ காஞ்சி பிரதிவாதி பயங்கரம் அண்ணங்கராசாரியார் எழுதிய விளக்க உரை

அகடிதகடநாஸமர்த்தனான எம்பெருமான்றன்னாலும் இனியொரு நாளும் வேறுபடுத்தவொண்ணாதபடி எனது நெஞ்சே அங்கே ஆழங்காற்பட்டு விட்டதென்கிறார். இதற்கு முன்புள்ள காலமெல்லாம் நான் அவனைவிட்டு நெகிழ்ந்தவனேயாகிலும் இனி அங்ஙனம் ஒருநாளும் நெகிழமாட்டேன்; எம்பெருமான் தனது ஸ்வாததந்திரியத்தினாலே ஒருகால் என்னை நெகிழவிட்டாலும் விடக்கூடும். தன் பக்கலிலேயே ஊன்றிக்கிடக்கின்ற எனது நெஞ்சை ஒருவகையாலும் அப்புறப்படுத்த அவன்றன்னாலுமாகாது.

அவனோ ஸர்வசக்தன்; நினைத்தபடி எதையும் செய்து நிறைவேற்றவல்லவன்; அவனுக்கு ஆகாததும் ஒன்றுண்டோ என்னில்; (தானம் கில்லான்.) அப்படிப்பட்ட அபாரசக்திவாய்ந்த பகவானும் இவ்விஷயத்தில் அஸமர்த்தனேயான.

அங்ஙனம் சொல்லலாமோ? இதுவரையில் உம்மை மாறி மாறிப் பலபிறப்பும் பிறக்கச் செய்யவில்லையா? உமது நெஞ்சை இதர விஷயங்களிலே அகன்று போகச்செய்யவில்லையா எனில்; இதுவரையில் செய்தது உண்மையே, இனி அங்ஙனஞ் செய்ய அவனாலுமாகாது. இவ்வளவு உறுதியாகச் சொல்லுவதற்கு நிதானம் ஏதென்னில்; (பின்னை தேடும்பணைத்தோள் இத்யாதி.) நப்பின்னைப் பிராட்டியைப் புருஷகாரமாகக் கொண்டு பற்றினேனாதலால் இனி ஒருநாளும் அகல்விக்க ப்ரஸக்தியில்லை என்பது பரம தாற்பரியம். நித்யஸூரிகளை விட்டாலன்றோ என்னைவிடுவது என்பதும் உட்கருத்தாகும்.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here