Ayppasi Aayilyam Sri Thiruputkuzhi Swamy Thirunakshathram

0
842 views

Today, 7th of November –  Aippasi Aslesham (Ayilyam)  is the Thirunakshatram of the great Acharyan – Sri Thirupputkuzhi Swami.

இந்த ஸ்வாமி ஸ்ரீமத் நாதமுனிகள் திருவம்சத்தில் 21வது தலைமுறையில் அவதரித்து, ஜகதாசார்யரான ஸ்ரீஉபய பஞ்சமதபஞ்ஜன தாத தேசிகன் ஸ்வீகார குமாரராகவும் உள்ள உபய லக்ஷ்மீ குமார தாத தேசிகன் திருவம்சத்தில் திருப்புட்குழி எம்பெருமான் கைங்கர்ய பரம்பரையில் ஸ்ரீவேங்கடதேசிகன் குமாரராக ஸ்வபானு ஸம்வத்ஸரம் ஐப்பசி மாதம் ஆச்லேஷா நக்ஷத்திரத்தில் அரசாணிபாலை அஸ்தோகாத்வரி ஸ்வாமி திருமாளிகையில் அவதாரம்.

Swamy’s Thanian reads as follows:
ஸ்ரீமத்வேதவதம்ஸதேசிக யதிக்ஷ்மாப்ருத் சடார்யாத்மகம்
ஸ்ரீஸ்ரீவாஸமுநீந்த்ரதேசிகமணேஃ ப்ராப்தாகமாந்தத்வயம்.
தத்கல்யாணகடாக்ஷகேளிநிலயம் ஸ்ரீக்ருஷ்ணஸத்தேசிகம்
ஸ்ரீசைலாந்வயஸிந்துகௌஸ்துபநிபம் ஸேவேய வித்வந்மணிம்.
 யதாகாலத்தில் தம் பிதாவினிடத்தில் ப்ரம்ஹோபதேசம் யஜுர்வேதாத்யயனம் ஆழ்வார்கள் அருளிச்செயல்கள் அனைத்தும் பெற்றார். தம் பெரிய தகப்பனாரான கோபால தாததேசிகனிடம் பஞ்சஸம்ஸ்காரமும் ஸ்ரீமத் ராமாயண உபதேசமும் ஸ்ரீராமஷடக்ஷர மந்த்ரோபதேசமும் பெற்றார். பிறகு வெங்கடாசாரியார் ஸ்வாமியிடம் ந்யாய சாஸ்திரமும், ஜடபுலூர் சிங்கராச்சாரியரிடம் வியாகரண சாஸ்திரமும், தம் பெரிய தகப்பனாரிடம் மீமாம்ஸா சாஸ்திரமும் அப்யஸித்தார். அரசாணிபாலை ஸ்ரீஸ்வாமி குமாரத்தி பெருந்தேவி அம்மங்காரை பாணிக்ரஹணம் பண்ணிக் கொண்டார். பிறகு உபய ஸ்ரீநிவாஸ மஹா தேசிகனிடத்தில் உபயவேதாந்த காலக்ஷேபமும் இருபது திருநக்ஷத்திரத்திற்குள் பூர்த்தி செய்து ஸ்ரீபேரருளாளன் விஷ்வக்ஸேன கைங்கர்யத்தையும் அங்கீகரித்தார். பிறகு ப்ரதிஸம்வத்ஸரம் ஸ்ரீபெரும்பூதூர் எம்பெருமானார் ஸந்நிதியிலும், ஆழ்வார் கோஷ்டியிலும், வேதபாராயணம் கோஷ்டியிலும் துரந்தரராக ஏள்ளியும், அங்கே ஸந்நிதி களில் கைசிகபுராணம் முதலிய கைங்கர்யங்களைச் செய்து கொண்டும் பிரதிதினமும் பேரருளாளன் பெருந்தேவித் தாயாரை மங்களாசாஸனம் செய்துகொண்டும் அனேக சிஷ்ய வர்க்கங்களுக்கு உபய வேதாந்த காலக்ஷேப ப்ரவசநம் செய்துகொண்டும் ஸ்ரீபேரருளாளனின் ஸந்நிதி வீதியில் பூர்விகாள் திருமாளிகையில் ஏள்ளியிருந்து மத்தியான்னம் ராத்திரி காலங்களில் தர்க்கம், வ்யாகரணம், மீமாம்ஸை முதலான ஸாமாந்ய சாஸ்திர ப்ரவசநமும் செய்துகொண்டும் ஸதா வித்யா ப்ரவசநம் போலவே தர்க்க வேதாந்த மீமாம்ஸா க்ரந்த நிர்மாணங்களும் செய்து கொண்டு எழுந்தருளியிருந்தார்..
  பிறகு ஸ்ரீதூப்புல் வேதாந்த தேசிகனுக்கும் தீபப்ரகாச எம்பெருமானுக்கும் வார்ஷிக விசேஷ உத்ஸவங்களும் ஸந்நிதி ஜீரணோத்தாரணமும் செய்து வைத்தார். ஸ்ரீ தூப்புல் வேதாந்த தேசிகனுக்கு ஸ்ரீ பேரருளாளன் ஸந்நிதியில் மங்களாசாஸனமும் வெகு விமர்சையாக செய்வித்தருளினார்.
ஸ்ரீஸ்வாமி அருளிச் செய்த க்ரந்தங்கள்
வ்யாகரண விஷயம்:  (1) ணத்வ சந்த்ரிகை (2) பரமுக சபேடிகா.
மீமாம்ஸா விஷயம்:    பாட்ட ஸங்கரஹ டிப்பணீ
வேதாந்தம்: (1) ரத்நபேடிகா (2) ப்ரம்ஹ சப்தார்த்த விசார: (3) ஸந்யாய பரிசுத்தி                             (4) வித்வஜ்ஜநவிநோதிநீ
ஸம்ப்ரதாயம்: துரர்த்த தூரீகரணம்
ந்யாய க்ரந்தங்கள் : ப்ரதிபந்தகத்வ விசார:, குவலயோல்லாஸ:, சதகோடி கண்டன க்ரந்த:, சதகோடி முண்டன க்ரந்த: முதலியன.
Thanks to : ஸம்பத்குமார தாதாசாரியர் ஸ்வாமி
Write up by Sri Satagopa thathachar swami:
நாளை ஐப்பசி ஆச்லேஷம், ஸ்ரீமதுபயவேதாந்தேத்யாதி பிருதாலங்க்ருதரான திருப்புக்குழி ஸ்ரீக்ருஷ்ணதாதயார்ய ஸ்வாமியின் அவதார தினம்,ஸ்வாமியை ஸ்மரித்தஸமயத்தில் ஸ்ரீஸ்வாமியை குறித்து  எழுதிய வ்யாசம் கிடைத்தது, அதை வாசித்தவுடன்  இம்மஹானின் திருநக்ஷத்ரத்தை நாடெங்கும் கொண்டாடுவது பொருத்தமாகும் என்றும் ஸ்ரீஸ்வாமி எல்லோருக்கும் ப்ராதஸ்மரணீயர் என்றும் தோன்றியபடியால்  அந்த வ்யாசத்தை எல்லோரும் வாசிக்கும்படி இத்துடன் இணைத்துள்ளேன்,ஸ்வாமி அநேக க்ரந்கங்களை அனுக்ரஹித்துள்ளார், அவைகளில் ரத்னபேடிகா என்கிற ஸ்வாமி தேசிகனின் ந்யாயஸித்தாஞ்சன க்ரந்தத்தின் வ்யாக்யானம் மிகவும் உயர்ந்ததாகும், இந்த ஸ்வாமியை குறித்து ஸ்ரீமதபிநவதேசிகர் என ஸுப்ரஸித்தரான உத்தமூர் ஸ்வாமி ஸாதிப்பது-
 சதுச்சாஸ்த்ர ப்ரவசன ப்ரதிதாஃ,ப்ரௌடதர்கசாஸ்த்ர நவீநப்ரஸ்தாந பரிசயாதிசயப்ரபாந்வித நைசித்யநிர்மலபுத்திநிஷ்பாத்மாந நிகிலசாஸ்த்ரார்தபரிஷ்கரணாஃ என,
ஸ்ரீதிருப்புகுழிஸ்வாமியின் ஆசார்யர், இவருக்கு வித்வன்மணி என்பதான பிருதை அனுக்ரஹித்து இந்த விசேஷணத்துடன் கூடியதாய் இவருக்கு தனியன் செய்ய தனது சிஷ்யரை நியமித்ததால்
 என ஸ்வாமியின் தனியன் அமைந்தது என்பர்.
ஸ்ரீதிருப்புகுழிஸ்வாமி அநுக்ரஹித்த க்ரந்தங்களை ஸ்ரீமதுபயவேதாந்தேத்யாதி பிருதாலங்க்ருதரான காஞ்சீ பட்டப்பா ஸ்வாமி என ஸுப்ரஸித்தாரானவர்
யைச்ச ப்ரணீதாஃ என  உபக்ரமித்து
ந்யாயசாஸ்த்ரப்ரபந்தாஃ-1,ப்ரதிபந்தகத்வவிசார,2ப்ரமாத்வசிஹ்நகுவலயோல்லாச,3அதஹேத்வாபாஸாஃ இத்யாதிவாக்யார்தவிசார,4ஸர்வாம்சே ப்ரமாத்வ விசார,5யத்ரூபவிசார,6அவச்சேதகதாஸர,7வாதகல்பக,8விசிஷ்டத்வயாகடிதத்வானுமித்யவ்ருத்திவிசார,9 ந ச விசார,10ஏதேநேத்யாதி கல்பத்வயவிசார,11விசேஷணத்ரயவைய்யர்த்யவிசார,12,அத்ரவதந்தீத்யாதி நிஷ்க்ருஷ்டகல்பவிசார13,ஸ்வலக்ஷணத்வயவிசார,14ஸித்தாந்தலக்ஷணோபாதிகட்டவிசார,15ஸம்சயபக்ஷதாவிசார,16பஞ்சமவிஷயதாவிசார,17ஸாதாரணலக்ஷணவிசார,18சதகோடிகண்டன,19சதகோடிமண்டனவாவதூககுதூஹலஸத்ப்ரதிபக்ஷவிசார,20பாதவிசார,21ராஜபுருஷவாதவிசார,22ஜாதிசக்திவிசார,23,யத்ஸம்சயவ்யதிரேகநிச்சயௌ இத்யாதி அனுமான விசார24,அனுகமாவளீப்ரப்ருதயஃ
வ்யாகரணசாஸ்த்ரக்ரந்தாஃ-
1,ணத்வசந்த்ரிகா,2பரமுகசபேடிகாப்ரமுகாஃ
மீமாம்ஸாக்ரந்தாச்ச-
1,பாட்டஸார,2,பாட்டதீபிகாடிப்பணீ ப்ரப்ருதயஃ
வேதாந்தசாஸ்த்ரக்ரந்தாச்ச-
1ந்யாயபரிசுத்திவ்யாக்யானபூத ஸந்யாயதீபிகா, 2ரத்னபேடிகா,3ப்ரஹ்மசப்தார்தவிசார,4வித்வத்ஜநவிநோதிநீ,5,ப்ரத்யக்த்வாதிஸ்வயம்ப்ரகாசத்வவிசார,6அருணாதிகரணவிசார,7,ப்ரதீதாப்ரதீதவாக்யவ்யாக்யான,8அநேநஜீவேநேதி ச்ருத்யர்தவிசார,9அகிலசப்தார்தவிசார,10ஆப்ரயாணோபாஸநாவர்தனவிசார,
11அனுவர்தமாநத்வானுமானோபாதிவிசார,12,அபர்யவஸாநவ்ருத்தி விசார,
13,ஸ்த்யத்வாதிஸ்வரூபநிரூபகத்வ விசார,
14,,க்வாசித்கச்ருதப்ரகாசிகாபங்க்த்யர்தவிசாராதயஃ
தர்மசாஸ்த்ரக்ரந்தாச்ச-1,தர்மநிர்ணய,2,துர்வ்ருத்ததிக்ருதி,3வைஷ்ணவத்வநிரூபண,4ஸந்மார்ககண்டகோத்தார,5தத்ஸங்க்ரஹ,6,தட்டிப்பணீ,7,தர்சச்ராத்தஸஞ்சிகா,8,தத்ஸமர்தன,
9,பதி,பிராத்ரு,ஸ்வஸ்ருபுத்ரகர்த்ருத்வபௌர்வாபர்யவிசார,10ஏகதினச்ராத்தத்வயநிஷேதவிசார,11ப்ரதமோபார்மதோஷதாரதம்யநிரூபண,12,பகவதாராதனப்ரயோக,13,ப்ரபத்திப்ரயோகப்ரப்ருதயஃ விசித்ரஜைத்ரத்வஜாயந்தே என ஸங்க்ரஹித்தார்
(24+2+2+14+13=55)
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here