Kanchi Devaperumal Sannidhi Bharani Deepam

3
1,710 views

On November 27, 2012, Bharani Deepam was celebrated at Kanchipuram Devaperumal thirukkoil. The following are some of the photographs taken yesterday…

Courtesy: Sri Kesavabashyam

Print Friendly, PDF & Email

3 COMMENTS

  1. அருள்வரதர் நின்ற பெருமையை ஸ்வாமி தேசிகன் போற்றியுள்ளபடி இஹ்கு அனுபவிக்கலாம். தன்யவாதங்கள். இவ்வுத்ஸவத்தின் வைபவத்தை குறிப்பிட்டிருக்காலமே.

  2. Kanchi Devaperumal Sannidhi Bharani Deepam

    தாஸஸ்ய விண்ணப்பம்.
    “திருமகளைப்பெற்று என் நெஞ்சம் கோயில்கொண்ட பேரருளாளன் என்னும் வியப்பால் விருதூதும்படி கரைபுரண்ட கருணைக்கடல்” என ஸ்வாமி தேசிகனால் கொண்டாடப்பட்ட ஸ்ரீதேவாதிராஜனின் அஷ்டோத்ரசதநாமத்தில் “அநேகமண்டப ஆஸ்தான நித்யோத்ஸவ தோஷிதர்” என்பதான திருநாமம் ஸுப்ரஸித்தம். இதன்படி எம்பெருமான் வருடத்தில் அநேக உத்ஸவங்களை கண்டருள்கிறார். இந்த க்ரமத்தில் கார்திகை மாதம் பரணி தீபத்தன்று மூலவருக்கு தைலகாப்பு ஸமர்பிப்பது வழக்கம், பிறகு வைகுண்டஏகாதசி வரையில் மூலவருக்கு திருமஞ்சனம் கிடையாது. தைலகாப்பு ஸமயத்தில் ஸ்ரீதாததேசிகன் சாத்துமறை ஸம்பவித்தால் அதை தவிர்த்து உத்ஸவருக்கும் பொதுவாக திருமஞ்சநம் இராது. பரணிதீபத்தன்று ஸாயம் மூலவருக்கு தைலகாப்பு ஸமர்ப்பிப்பிக்கும் முன்பாக உத்ஸவருக்கு திருமஞ்ஜநம் கச்சிவாய்த்தான் மண்டபத்தின் முன்பாக நடைபெறும். பிறகு மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் நிவேதனம் ஆஸ்தானம் நடைபெறும்..
    கச்சிவாய்த்தான் மண்டபத்தின் விசேஷம் வருமாறு,
    இந்த மண்டபத்தில் திருக்கச்சிநம்பிகளிடம் எம்பெருமான் “ அஹமேவ பரம் தத்வம் “என்பது முதலான ஆறு வார்தைகளை அனுக்ரஹித்தார் என்பது ப்ரஸித்தம், இதை நினைவு கூறும் வகையில் இம்மண்டபத்தின் மேல் ஸ்வர்ணத்தில் எம்பெருமான், திருக்கச்சிநம்பி, ஸ்ரீராமானுஜரின் திருமேனி பதித்த ஸ்வர்ணத்திலான தகடை ஸேவிக்கலாம்.மேலும் இந்த மண்டபம் முன்பாக ,முன்பு ஸ்ரீநடாதூர் அம்மாள் காலக்ஷேபம் ஸாதித்தார், இந்த இடத்துக்கு ஸ்ரீஅம்மாள் காலக்ஷேபகோஷ்டீ என பெயர். இவ்விடத்தில் தான் ஸ்வாமி தேசிகன் பால்யத்தில் தனது அம்மானான ஸ்ரீஅப்பிள்ளாருடன் சென்று ஸ்ரீஅம்மாளின்
    ப்ரதிஷ்டாபிதவேதாந்தஃ ப்ரதிக்ஷிப்தபஹிர்மதஃ
    பூயாஃ த்ரைவித்யமாந்யஸ்தவம் பூரிகல்யாமபாஜனம்
    என்பதான அனுக்ரஹத்தை பெற்றார். இதையே ஸ்வாமி குமாரர் ஸ்ரீநயிநராசார்யர்
    “யோ பால்யே வரதார்யஸ்ய ப்ராசார்யஸ்ய பராம் தயாம், அவாப்ய, “என ஸாதித்தார்.இதை ஸ்மரிக்கும் வகையில் இங்கு ஸ்ரீஅம்மாள் முதலான ஆசார்யர்களின் திருமேனிகளை வர்ணரூபத்தில் வரைந்துள்ளார்கள்.
    ஸ்வாமி தேசிகன் உத்தமமான புரட்டாசி திருவோணத்தன்று இங்கு எழுந்தருளி அநேக ஸம்ப்ரதாய ச்லோகங்களால் மங்களாசாஸநம் செய்த பிறகே கர்பக்ருஹத்தில் ஸ்ரீபேரருளாளனை மங்களாசாஸநம் செய்வது வழக்கம். எம்பெருமானை மங்களாசாஸநம் செய்த பிறகு இந்த கச்சிவாயத்தான் மண்டபத்தில் ஸ்வாமி தேசிகன் எழுந்தருளி எம்பெருமானுக்கு ஸமர்பபித்த ப்ரஸாதங்களை நிவேதனம் செய்வதும் பிறகு அதை ஸ்தோத்ரானுஸந்தனம் செய்யும் அடியார்களுக்கு விநியோகிப்பது என்பதும் வழக்கம்.
    ஸ்ரீகூரத்தாழ்வான் ஸாதிக்கிறார், சாஸ்தர்த்தில் கூறப்பட்டதை ப்ரத்யக்ஷமாக காண்பிப்பது இந்த ஹஸ்திகிரி, ஆனபடியால் இம்மலையையே ஆச்ரயிக்கிறேன் என. இங்கும் ஒரு சாஸ்த்ர விஷயம் உள்ளது, அதை அடியார்கள் ரஸிக்கும்படி விண்ணப்பிக்கிறேன்,
    அதாவது “ஸோச்னுதே ஸர்வான் காமான் ஸஹ, ப்ரஹ்மணா விபச்சிதா” என்பதான சாஸ்த்ரத்தை ஸ்வாமி தேசிகன் “ போகமாத்ரே ஸாம்யம் பஜந்தி பரமம் பவதா விமுக்தாஃ “என முக்தர்கள் போகத்தில் மட்டும் எம்பெருமானுடன் ஸாம்யத்தை அடைகிறார்கள் என ஸாதித்தார். இதை ப்ரத்யக்ஷமாக காண்பிக்கவே வருடத்தில் கார்திகை மாதம் பரணிதீபத்தன்று ஒரு நாள் மட்டும் ஸ்ரீபேரருளாளன் இம்மண்டபத்தில் எழுந்தருளி திருவாராதனம் மற்றும் நிவேதனம் கண்டருள்வதை போல் முக்தரான ஸ்வாமி தேசிகனும் வருடத்தில் ஒரு நாள் இம்மண்டபத்தில் எழுந்தருளி நிவேதனம் கண்டருளி அதை அடியார்களுக்கு விநியோகிப்பது என்பதான ஸாம்யத்தை காணலாம். இவ்விடத்தில் எம்பெருமானையும், ஸ்வாமி தேசிகனையும் தவிர்த்து வேறொருவருக்கும் ப்ரவேசிக்க அவகாசமில்லை.
    ஆனபடியால் இவ்விடத்துக்கு ஆசார்யர்களான, திருக்கச்சி நம்பி, எம்பெருமானார், ஸ்ரீஅம்மாள், ஆத்சேய ராமானுஜர், ச்ருதப்ரகாசிகாசார்யர், ஸ்வாமி தேசிகன் என அநேக ஆசார்யர்களின் ஸம்பந்தம் உள்ளது.. இவ்விசேஷங்களை ஸ்மரித்தாலும் நமது பாபம் தொலைந்து போகும். இதனை நேரில் சென்று அனுபவிக்க முடியாத நமக்கு ,இவ்விஷயங்களையும் ஸ்மரித்து ஸ்வாமி தேசிகன் “இருபரிதியெந்த மகுடமும் எழின்மதி திகழ்ந்த வதநமும் “என்பதாக உபக்ரமித்து “அருள் வரதர் நின்ற பெருமையே” என அனுபவித்த ப்ரகாரம் ஸ்ரீபேரருளாளன் ஸேவை ஸாதிப்பதை எல்லோரும் அறியும் வண்ணம் ப்ரகாசனம் செய்த அநுதினம் நிறுவனத்தின் தொண்டு மேன்மேலும் வளர ப்ரார்த்திப்போம்.
    நமக்கு எம்பெருமானின் ஸ்மரணத்தை அனுதினம் உண்டாக்க வேணும் என்ற உயர்ந்த எண்ணத்துடன் அநுதினம் என மிகவும் ஆச்சர்யமான பெயரை கொடுத்துள்ளார். ஸ்வாமி தேசிகன் ஸ்ரீதேவாதிராஜனை மங்களாசாஸனம் செய்யும் ஸமயத்தில், “ஹஸ்திசைலேச்வரம் த்வாம் அனுதினமநிமேஷைர் லோசனைர் நிர்விசேயம்” என எம்பெருமானின் திருமேனி அழகை தினப்படி இடைவிடாமல் இமைகொட்டாமல் ஸேவிக்கக் கடவேன் என ப்ரார்தித்தார். நமக்கும் அவ்விதம் எம்பெருமானை ஸேவிக்க அவாவுண்டு, ஆயினும் அதுக்கு சக்தியில்லாமல் பெருமாளை விட்டு விலகிச்சென்ற நமக்கு அனுதினம் நிறுவன தலைவர் , அனுதிநமும் பெருமாளை சாயாரூபத்திலாவது ஸேவிக்கச்செய்து மஹோபகாரத்தை செய்து வருகிறார். மிக உயர்ந்த இந்த தொண்டில் இவ்வுத்ஸவத்தின் சிறப்பை சிறிது விண்ணப்பித்தேன்.
    சாயாரூபத்திலும் எம்பெருமானின் திவ்யஸௌந்தர்யம் கண் இமைக்காமல் ஸேவிக்கும்படி அமைந்துள்ளது.நேரில் ஸேவிக்க வேண்டி ப்ரார்த்தித்தது பொய்த்தாலும் “அனுதிநம்” பத்ரிக்கையையாவது நாம் அனுதிநம் அனுபவிக்க “அனுதினமநிமேஷைர் லோசனைர் நிர்விசேயம்”, (அனுதினம் என்ற பத்ரிகையை கண் இமைக்காமல் காண்போம்) என்றே இனி நாம் ப்ரார்த்திப்போம்.
    ந தைவம் தேசிகாத்பரம்,

  3. ஸ்ரீமதே ராமானுஜாய நம :
    ஸ்ரீமத் வரவரமுநயே நம :

    அடியேன்

    பரணி தீபம் எல்லா ஸ்ரீ வைஷ்ணவ ஆலயங்களிலும் விசேஷமாக அனுசரிக்கப்படும் நாளாகும். ஆனால் அன்றைய தினம் பெருமாளுக்கு திருமஞ்சனம் அனுஷ்டிக்கப்படுவதில்லை. மறுநாள் திருக்கார்த்திகை அன்று பௌர்ணமியும் சேர்ந்து வருவதால் அன்று தான் திருமஞ்சனம். அனால் காஞ்சியில் பரணி தீபம் அன்று தான் பெருமாளுக்கு திருமஞ்சனம். மூலவருக்கு தைல காப்பு ஆனபின்பும் உற்சவர் அருளாளன் அவர் திருக்கச்சி நம்பிகளுடன் வார்த்தை பேசின கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். இது என்ன புதுக்கதை பௌர்ணமி அன்று திருமஞ்சனம் கண்டருளாமல் அதற்கு முன்னாளில் திருமஞ்சனம் என்ற ஐயம் அனைவருக்கும் எழும். இந்தக்கதை புதுக்கதை அல்ல மிகப்பழைய வரலாற்று நிகழ்வு.

    பேரருளாளனுக்கு திருவாலவட்டம் கைங்கர்யம் செய்து வந்த நம்பிகள் அவருடன் வார்த்தை பேசும் மாபெரும் பேற்றை பெற்றார். நம் சம்பிரதாயத்தில் எந்த ஒரு ஆழ்வாருக்கோ ஆசார்யனுக்கோ கிடைக்காத ஒரு மாபெரும் பேறு இது. யாதொருவருக்கும் ஸ்வப்னத்திலோ அல்லது அர்ச்சக ஆவேசத்திலோ ஏன் அசிரிரியாகவோ கூட பேசியிருக்கலாம், ஆனால் நேரடியாக பேசியது நம் நம்பிகளோடு மட்டும் தானே. அந்த நம்பிகள் ஒரு நாள் தேவாதிராஜனிடம் தமக்கு மோக்ஷம் அருளுமாறு பிரார்த்திக்க வரதனோ “வீசியதிற்கும் பேசியதிற்கும் சரியாகி விட்டது போம்” என்றான். ஆதாவது உம் கைங்கர்யத்திற்கு பிரதியுபகாரமாக நாம் உம்மிடம் வார்த்தை பேசியாகி விட்டது, மோக்ஷ உபாயம் எம்மால் ஆகாது என்று நம்பிகள் பிரார்த்தனையை புரந்தள்ளினான்.

    நம்பிகள் இதுவும் அவனது லீலை என்று அவனிடம் உம்மால் எமக்கு மோக்ஷம் தர இயலாவிடில் எமக்கு உபாயம் யாதென்று வினவ. அதாவது மோக்ஷகர்தாவன சாக்ஷாத் நாராயணனே மோக்ஷம் கொடுக்க இயலாது என்றால் அதற்கு அருகதயானவர் யார் என்று தேவபெருமாளிடன் பிரார்த்தித்தார். அதற்கு பெருமாளும் மோக்ஷத்திற்கு ஒரே உபாயம் ஆசார்யனே என்றும் ஆசார்யனை சரணடைந்தால் மட்டுமே மோக்ஷம் கிட்டும் என்று அருளி, திருக்கோஷ்டியூர் நம்பிகளை சரணடைய உய்த்தார். அவ்வாறு திருக்கச்சி நம்பிகளும் திருக்கோஷ்டியூர் சென்று திருக்கோஷ்டியூர் நம்பிகளை தன்னுடைய ஆசார்யானாக அடைந்து ஒரு கார்த்திகை சுக்ல சதுர்தசி அன்று திருநாடு அலங்கரித்தார். மறுநாள் கார்த்திகை பௌர்ணமி ஆதாலால் அன்றைய தினம் பரணி தீபம்.

    நம்பிகள் திருநாடு அலங்கரித்ததை அறிந்த தேவராஜன் உடனே அர்ச்சகர்கள் மேல் ஆவேசமாய் வந்து தனக்கு உடனே கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் பண்ணும்படி ஆணையிட்டான். அவ்வாறே அர்ச்சகர்களும் பரணி தீபம் அன்று பெருமாளுக்கு திருமஞ்சனம் செய்வித்தார்கள். கச்சி வாய்த்தான் மண்டபம் தான் பெருமாளும் நம்பிகளும் வார்த்தை பேசின இடம். இங்கு தான் நித்யமும் நம்பிகள் பெருமாளுக்கு திருவாலவட்டம் கைங்கர்யம் பண்ணிக்கொண்டு வந்தார். நம்பிகள் முக்தியடைந்தவுடன் பெருமாள் அந்த இடத்திலேயே தனக்கு திருமஞ்சனம் பண்ணவேண்டும் என்று நியமித்து அதே போல் ஒவ்வொரு வருடமும் நம்பிகளின் திருவத்யான தினத்தில் தனக்கு கச்சி வாய்த்தான் மண்டபத்தில் திருமஞ்சனம் கண்டருளுகிறார். அதே போல் மறுநாள் பௌர்ணமி அன்று திருமஞ்சனம் கிடையாது இதுவும் ஒரு விசேஷம்.

    இன்றைய தினமும் காஞ்சியில் அத்திகிரி மலையில் வைய மாளிகை பிரகாரத்திலே தென்கிழக்கு மூலையில் கச்சி வாய்த்தான் மண்டபத்தின்மேல் நம்பிகள் பெருமாளுடன் உரையாடும் தங்கத்தகடு வேய்ந்த சிற்பத்தை காணலாம்.

    ஸ்ரீமத் காஞ்சிமுநிம் வந்தே கமலபதிநந்தனம் |
    வரதாங்க்ரிசதா சங்க ரசாயன பராயணம் ||

    தேவராஜ தயாபாத்ரம் ஸ்ரீகாஞ்சிபூர்ணம் உத்தமம் |
    ராமானுஜ முநேர்ஹ்மான்யம் வந்தேஹம் சஜ்ஜனாச்ரயம் ||

    திருக்கச்சி நம்பிகள் திருவடிகளே சரணம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here