Felicitation Dr.NSR Swami At Navalapakkam

1
1,484 views

At Navalpakkam on 9 Dec 2012 Felicitation to Chevalier Awardee Dr.N S R Swami will be conducted. Below are the details.

For related information please click here

Courtesy: Sri Veera Raghavan Swami

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. தைத்திரீய உபநிஷத்து ஆசார்யதேவோ பவ தேவதையைப்போல் ஆசார்யனை பூஜிக்கவேணுமென உபதேசித்தது. இதையே வேதமார்கத்தில் தன்னை சிக்ஷிதபுத்தியாக கூறும் ஸ்வாமி தேசிகனும் ஆசார்யஃ அப்ரத்யுபகரணதியா தேவவத் ஸ்யாதுபாஸ்யஃ என ஸாதித்தார்.இதை ப்ரமாணமாக கொண்டே ஸ்வாமி தேசிகனை தேவதைக்கு ஸமமாக உபாஸித்த ஸ்ரீதொட்டயாசார்ய ஸ்வாமி, புராணத்தில்
    தஸ்ய யக்ஞவராஹஸ்ய விஷ்ணோரமிததேஜஸஃ
    ப்ரணாமம் யேபி குர்வந்தி தேஷாமபி நமோ நமஃ
    எம்பெருமானுக்கு நமஸ்காராதிகளை செய்யும் அடியார்களுக்கு- பாகவதர்களுக்கு நமஸ்காரம் என்று உள்ளதை, ஸ்வாமி தேசிகன் விஷயமாக தாம் ஸாதித்த ஸ்ரீவேதாந்ததேசிகவைபவப்ரகாசிகையில்

    तत्प्रेयस्या सर्वतन्त्रेषु दाक्ष्यं दत्तं यस्मै प्रीत्या देशिकाय।
    तस्मै भक्त्या कुर्वते ये तु सेवां तद्दासानां दास्यमभ्यर्थयेहम्।।

    தத்ப்ரேயஸ்யா ஸர்வதந்த்ரேஷு தாக்ஷ்யம்
    தத்தம் யஸ்மை ப்ரீத்யா தேசிகாய.
    தஸ்மை பக்த்யா குர்வதே யே து ஸேவாம்
    தத்தாஸாநாம் தாஸ்யமப்யர்தயேஹம்.

    பெரியபெருமாளுக்கு மிகவும் ப்ரியமானவளான பெரியபிராட்டியார் ப்ரீதியுடன் ஸர்வதந்த்ரஸ்வதந்த்ரர் என விருதை ஸ்வாமி தேசிகனுக்கு அளித்தார்,இவ்விதம் உயர்ந்தவரான தேசிகனுக்கு யாதொருபேர்கள் பக்தியுடன் ஸேவை செய்கிறார்களோ அந்த தேசிகனடியார்களுக்கு தாஸ்யத்தை ப்ரார்த்திக்கிறேன் என ஸாதித்தார். இதை ப்ராமாணமாக ஸ்வீகரித்து சென்ற வருடம் ,ஸ்வாமிதேசிகனுக்கு அநேகம் கைங்கர்யங்களை செய்தும், அநேகக்ரந்தநிர்மானம் அநேகேஷாம் ச ப்ரபோதனம் என்கிற ரீதியில் முன்னூறுக்குமதிகமாக க்ரந்தங்களை லோகோபகாரமாக மின் நூலாக ப்ரகாசனம் செய்த ஸ்ரீமான் உ வே, உப்பிலியப்பன் கோவில் வரதாசார்ய சடகோபன் ஸ்வாமி ஸ்ரீதூப்புலில் ஸ்வாமி ஸமக்ஷத்தில் ஸ்ரீமத்வேதாந்ததேசிகபதாம்புஜஸேவாரஸிகர் என ஸ்ரீதேசிகனடியார்களால் கௌரவிக்கப்பட்டார்.
    இந்த க்ரமத்தில் இவ்வருடம் ஸ்வாமிதேசிகனுக்கும், ஸ்வாமியின் ஸம்ப்ரதாயத்துக்கும் மஹோன்னதமான கைங்கர்யத்தை செய்தவரை பண்டிதச்ரேஷ்டரை ஸ்வாமி ஸந்நிதியில் கௌரவிக்கவேணுமென ஸ்ரீதேசிகனடியார்களின் எண்ணம்.

    ஸ்ரீவைஷ்ணவஸம்ப்ரதாயத்தில் ஆசார்யஸார்வபௌமராக திகழும் ஸ்வாமி தேசிகனின் அவதார மஹோத்ஸவத்தை வையமெல்லாம் அவரவர்களின் சக்திக்கு தக்கப்படி அடியார்கள் கொண்டாடினார்கள்.
    இந்த க்ரமத்தில் ப்ரதி வருடம் போல் இவ்வருடம் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமி தேசிகன் உத்ஸவமும் , உத்ஸவத்தில் ப்ரதி தினம் உபந்யாஸமும் நன்கு நடைபெற்றது. இவ்வருடம் ஸ்வாமி விஷயமான புஸ்தக ப்ரகாசனமும் நடைபெறவேணுமென ஸங்கல்பித்து ஸ்வாமியின் வைபவப்ரகாசிகையின் ப்ரகாசநத்தை நம் மூலம் செய்ய ஸ்வாமி ஸங்கல்ப்பித்தார் போலும் என ஸ்மரித்து ஸ்வாமிக்கு தாஸனின் க்ருதக்ஞதையை மானஸிகமாக ஸமர்பித்து புஸ்தகப்ரகாசநத்துக்கு வேண்டிய ப்ரயத்நங்களை செய்து வந்தேன்.
    24-9.12. திங்கள்கிழமை ஸ்ரீமதுபயவே நாவல்பாக்கம் சடகோப ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமியின் உபந்யாசம் நடைபெற்றது. ஸ்ரீதாதாசார்யஸ்வாமி, தத்வமுக்தாகலாப ச்லோகங்களை வ்யாக்யானித்து ஸ்ரீதேசிகன் ஸாக்ஷாத் திருவேங்கடமுடையானின் அவதாரமென்பதை மிகவும் விசதமாக ப்ரமாணத்துடன் உபந்யஸித்தார்.பிறகு அவரது திருக்கரங்களால் ஸ்ரீமத்வேதாந்த தேசிகவைபவப்ரகாசிகை எனும் க்ரந்தத்தை ப்ரகாசனம் செய்து அப்புத்தகத்தின் பெருமையையும் பரக்க உபந்யஸித்தார். ஸ்ரீவைபவப்ரகாசிகையை அனுக்ரஹித்தவர் ஸ்ரீதொட்டயாசார்ய ஸ்வாமி, அவர் ஸ்வாமி தேசிகனின் சததூஷணிக்ரந்தத்துக்கு சண்டமாருதம் எனும் வ்யாக்யானத்தை ஸாதித்தார். அதுபோல் ஸ்ரீமதுபயவே நாவல்பாக்கம் சடகோப ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமி சததூஷணிக்ரந்தத்துக்கு ஸரளமாக வ்யாக்யானம் ஸாதிதத்வர்.ஆனபடியால் ஸ்ரீமஹாசார்யரின் ஸாம்யம் உள்ளதால் இவரது திருக்கரங்ரங்களால் ஸ்ரீவைபவப்ரகாசிகையை ப்ரகாசனம் செய்வது உபபன்னமாகும் என்பதை விண்ணப்பித்தேன். பிறகு ஸ்ரீஸ்வாமி தேசிகனின் திருவடியில் நின்றும் ஸ்வர்ணகடகம் மற்றும் உடுத்து களைந்த சால்வை,மாலை முதலியவைகள் ஸ்ரீமதுபயவே நாவல்பாக்கம் சடகோப ராமானுஜ தாதாசார்ய ஸ்வாமிக்கு பஹுமானமாக ஸமர்பிக்கப்பட்டன.
    .

    ஸ்வாமி தேசிகன் பாரொன்றச்சொன்ன பழமொழியில் ஓன்றான தத்வமுக்தாகலாபத்தின் கடைசி ச்லோகத்தின் முன்பான ச்லோகத்தில் “சுஷ்கோபந்ய்ஸசிக்ஷா படிமகுடரடத்வைரிவித்வத்கரோடீ குட்டாகக்ரீடமஷ்டாபதகடகமஸௌ வாமபாதே பிபர்து “ என ஸாதித்த க்ரமத்தில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பாக ஸ்வர்ணத்தாலான கடகத்தை ஸ்ரீபேரருளாளன் ஸந்நிதியில் நம்மத்திகிர்த்திருமாலின் பஹுமானமாக, வாமபாணௌ என சிறிய மாற்றத்துடன் அஞ்ஜலி ஹஸ்தத்துடன் எழுந்தருளிய ஸ்வாமி தேசிகனின் இடது திருக்கையில் ஸ்ரீதேசிகதாஸனால் ஸமர்ப்பிக்கப்பட்டதை எல்லோருமறிவார்கள, .
    இதுபோல் மிகவும் கடினமானதும் ஸ்வாமி தேசிகனால் அனுக்ரஹிக்கப்பட்டதும் கொண்டாடப்பட்டதுமான சததூஷனி க்ரந்தத்துக்கு லோகோபகாரமாக மிகவும் ஸரளமாக வ்யாக்யாநத்தை அனுக்ரஹித்த
    ஸ்ரீமதுபயவே திருமலை சதுர்வேத சதக்ரது நாவல்பாக்கம் சடகோப ராமானுஜதாதாசார்ய ஸ்வாமிக்கும் ஸ்வர்ணத்தில் சிறிய கடகத்தை ஸ்வாமிதேசிகனின் ஸம்மாநமாக செய்து ஸ்ரீதாதாசார்யஸ்வாமியை ஸ்வாமி ஸந்நிதியில் கௌரவிக்க வேணுமென ஸ்ரீஸ்வாமியின் அனுக்ரஹத்தால் உதித்த எண்ணம். இதை ஸ்ரீதேசிகனடியார்களிடம் விண்ணப்பித்தோம். அந்த ஸமயத்தில் பூர்ணமனதுடன் ஆமோதித்து 16000 த்ரவ்ய ஸஹாயம் செய்தவர் ஸ்ரீமதுபயவே நாவல்பாக்கம் ஸ்ரீசக்ரபாணி ஸ்வாமி,அவருக்கு க்ருதஞதையை தெரிவிப்பதின் மூலம் தன்யர்களாகிறோம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here