கவியும் கவிதார்கிகஸிம்ஹமும்

Date:

Share post:

This article is written by Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy of Kanchi

தாஸஸ்ய விண்ணப்பம். அனுதிநம் பத்திரிக்கையில் ஸ்ரீமதுபயவே, பண்டிதராஜ  தி தி. தாதாசார்ய ஸ்வாமியின் ஸ்ரீ தேசிக காளிதாஸ ஸம்வாதம் எனும் தலைப்பில் வெளிவந்த வ்யாசத்தில், ஸ்ரீதாதாசார்யஸ்வாமி, காளிதாஸனின் கருத்துகளையும் ரஸங்களையும் அறிந்து அதற்கு அடையாளமாக காளிதாஸன் ப்ரயோகித்த சொற்களையும் கருத்துகளையும் ஆங்காங்கே அமைத்துப் பல காவ்யங்களை இயற்றினார் ஸ்வாமி தேசிகன் என்பதை மிகவும் ரஸமாக காண்பித்தார்.

இதை வாசித்த தாஸன், ஆசார்யானுக்ரஹத்தால் தோன்றியதை “கவியும் கவிதார்கிகஸிம்ஹமும்” என்கிற தலைப்பில் விஞ்ஞாபிக்கிறேன்.

ஸ்ரீகாளிதாஸன் இயற்றிய ரகுவம்ச காவ்யம் மிகவும், ப்ரஸித்தம், அதில் இரண்டாவது ஸர்கத்தில் நந்தினி எனும் பசுவை உபசரிக்க,பசுவை  தொடர்ந்து அரசனான திலீபன் கானகம் செல்லும் ஸமயத்தி்ல் நந்தினியானது எதிர்பாராதவிதமாக ஓர் ஸிம்ஹத்தின் பிடியில் அகப்பட்டுவிட அதை மீட்க அரசன் ப்ரயத்னம் செய்தும் பயனில்லாமல் போக, அரசன் ஸிம்ஹத்திடம் வேண்டுவது, பக்ஷ்யார்தமாக தன்னை ஸ்வீகரித்து அந்த பசுவை உபத்ரவியாமல் விட வேணுமென.அந்த ஸமயத்தி்ல் ஸிம்ஹம் கூறும் வாக்யம்,

ஏகாதபத்ரம் ஜகதஃ ப்ரபுத்வம் நவம் வயஃகாந்தமிதம் வபுஸ்ச.  அல்பஸ்ய ஹேதோர்பஹு ஹாதுமிச்சந் விசாரமூடஃப்ரதிபாஸி மே த்வம்

பசுவை காப்பது என்பதான ஓர் சிறிய காரணத்துக்காக லோகத்துக்கு அதிபதியாய், அதை ப்ரகாசப்படுத்தும்  விதமாக அமைந்த வெண் குடையையும், அழகானதும், இளம் வயதுள்ள இந்த சரீரத்தையும், விடுவது என்பதை விரும்புகிற  நீ செய்வதறியாதமூடனாக எனக்கு விளங்குகிறாய் ,சிறியதுக்காக மிக பெரியதை விடுகிறாய்  என பரிஹஸித்ததாக குறிப்பிட்ட கருத்தை ஸ்வாமி தேசிகன் சரணாகதிதீபிகையில் குறப்பிடுகிறார் எனலாம். முன் ச்லோகத்தில், “கூடம் நிரூபய குணேதரதாரதம்யம்,”என்னை ரக்ஷிப்பதில் லாபத்தை,ரக்ஷியாமலிருப்பதில் நஷ்டத்தையும் நன்கு ஆலோசித்து செயல்படவும் என ஸாதித்தார்,எம்பெருமான் வினவுகிறார், உன்னை ரக்ஷியாமல் போனால்  எனக்கு என்ன நஷ்டம் வரும் என, ஸ்வாமி  தேசிகன் அடுத்த ச்லோகத்தில்  பதிலளிக்கிறார்,

ஸ்வாமீ, தயாஜலநிதிஃ மதுரஃ க்ஷமாவான்,  சீலாதிகஃ ச்ரிதவசஃ சுசிஃஅத்யுதாரஃ .

ஏதாநி ஹாதுமநகோ ந கிலார்ஹஸி த்வம்  விக்யாதிமந்தி பிருதாநி மயா ஸஹைவ, ஸ்வாமியென்றும்,தயாஸாகரம்,மதுரமானவர்,பொறுமையுள்ளவர்,அதிகம்சீலமுள்ளவர்,ஆச்ரதர்களுக்குவசமானவர்,சுத்தமானவர், மிகவும் உதாரமானவர் ,என்பதாக ப்ரஸித்தமாக நிறைய பிருதங்களை பெற்றிருக்கிறீர். இவைகள் அனைத்தும் என்னையும் சேர்த்தே பெற்றதாகும், என்னை நீக்கி அல்ல.நான் பாபம் செய்தவன் என்கிற ஓர் காரணத்தால் என்னை  ரக்ஷியாமல் போனால் முன்பு ஸம்பாதித்த இவைகள் அனைத்தும் நஷ்டமாகும், சிறியதுக்காக பெரியதை விட தேவரீர் தகுந்தவரல்ல  என ஞாபகப்படுத்துகிறாரோ என தோன்றும்.

மாககவி சிசுபாலவதமெனும் காவ்யத்தில்  ஸ்ரீநாரதமுனிவர் மூலமாக  ஸ்ரீக்ருஷ்ணனுக்கு ராவணனின் பராக்ரமத்தை குறிப்பிடும்  ஸமயத்தில் ,

ஸமுக்ஷிபன் யஃப்ருதிவீப்ருதாம் வரம் வரப்ரதாநஸ்ய சகார சூலிநஃ த்ரஸத்துஷாராத்ரிஸுதா ஸஸம்ப்ரமஸ்வயம் க்ரஹாச்லேஷஸுகேந நிஷ்க்ரயம்.

சிவன் ராவணனுக்கு வரம் கொடுத்தார். உடன் தனது பலத்தை பரீக்ஷிக்க ராவணன் கைலாயமலையை தூக்கினான்.அந்த ஸமயத்தில் மலையின் அசைவினால் பயந்த பார்வதி,தானே சென்று சிவனின் கழுத்தை கட்டித்தழுவினாள்.அவளின்  ஆச்லேஷம்-ஆலிங்கனத்தால் சிவனுக்கு ஸுகம் கிடைத்தது.தனக்கு வரம் கொடுத்த சிவனுக்கு பார்வதியின் ஆலிங்கனத்தால் ஸுகத்தை கொடுத்து ப்ரத்யுபகாரத்தை செய்தான் என.

ஸ்வாமி சரணாகதிதீபிகையில் ஸாதிக்கிறார்.

“தத்வாவபோதசமிதப்ரதிகூலவ்ருத்திம் கைங்க்ரயலப்தகரணத்ரயஸாமரஸ்யம். க்ருத்வாத்வதந்யவிமுகம்க்ருபயா ஸ்வயம் மாம் ஸ்பாதிம் த்ருசோஃ ப்ரதிவபஸ்வ ஜகஜ்ஜநந்யாஃ.”

தத்வத்தை அறிவதால் ப்ரதிகூலமான நடத்தையை விட்டவனாய்,கைங்கர்யம் கிடைத்தமையால் மூன்றுகரணத்துக்கும் ஓற்றுமையை பெற்றவனாய்,உன்னை தவிர்த்து மற்றதெய்வங்களை தொழாதவனாக என்னை செய்தாயானால் ப்ரதிபலனாக பெரியபிராட்டியின் கடைக்கண் பார்வையை பெறுவாய் என,ஆக என்னை காப்பாற்றினால் உனக்கும் பலனுண்டு என்பதாக. இதை கேட்டு  ஓன்றே புகலென்று உணர்நதவர் காட்ட திருவருளால் அன்றே அடைக்கலம் கொள்கிறான் நம்மத்திகிரித்திருமால்.இதன் பயனாக மஹாநவமியன்று ஸ்வாமி தேசிகன் திருநக்ஷத்ரம் ஸம்பவித்தால்  ஸ்வாமியை அனுக்ரஹிக்க பிராட்டி எம்பெருமானுடன் மிக நெருக்கமாக ஸமானமாக பீடத்தில் எழுந்தருள்கிறாள்.கடைக்கண் பார்வையை பெறுவாய் என்று கூறினாலும் கிடைத்தது அதைவிட பெரிதாக- மிக நெருக்கமாக அமர்வது என்பது. இதனால் ஸ்வாமி தேசிகனும்  வரப்ரதானஸ்ய சகார சக்ரிணஃ- திகிரியை அணியாக தரி்க்கின்ற திருமாலுக்கு தன்னுடைய திருநக்ஷத்ரவ்யாஜத்தில் ப்ரத்யுபகாரத்தை செய்தாரோ என தோன்றுகிறது.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Rapathu Utsavam In Sri Adhikesava Perumal Temple At Mylapore: Day-5 to 9

22 January 2022, Plava varusha, Thai-09, Saturday ; Rapathu Adhyayana utsavam commenced in Sri Mayuravalli samedha Sri Adhikesava Perumal...

Rapathu utsavam In Sri Veeraraghavaswami Temple At Tiruvallur: Day-5 to 9

22 January 2022, Plava varusha, Thai-09, Saturday ; Rapathu utsavam was commenced in a very grand manner in Sri...

Rapathu Utsavam In Sri Amaruviappan Temple At Therezhundur: Day-9

22 January 2022, Plava varusha, Thai-09, Saturday ; Adhyayana utsavam is being celebrated in a very grand manner in...

Rapathu Utsavam In Sri Damodara perumal temple At Villivakkam: Day-8,9

21 January 2022, Plava varusha, Thai-08, Friday ; Adhyayana utsavam commenced in a very grand manner in Sri Sowmya...