Thirunaraiyur Kal Garuda Sevai on December 20, 2012

0
1,328 views

நாச்சியார்கோவில் ஸ்ரீ வஞ்சுளவல்லி தாயார் ஸமேத ஸ்ரீநிவாஸ பெருமாள் கோவிலில் கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியதால், நாளை உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை நடக்கிறது. கும்பகோணம் அருகே உள்ள நாச்சியார்கோவிலில் வஞ்சுளவல்லி சமேத ஸ்ரீநிவாஸ பெருமாள்கோவில் உள்ளது. புகழ்பெற்ற, 108 வைணவ தலங்களில், 20வது தலமாகவும், சோழநாட்டு திருப்பதிகள் நாற்பதில், 14வது தலமாகவும் விளங்குகிறது. மணிமுத்தா நதி தீரத்தில் மாதவம் புரிந்த மேதாவி மகரிஷியின் பிரார்த்தனையை நிறைவேற்ற, அவருக்கு சிறு கன்னியாக வந்து அவதரித்த வஞ்சுளவல்லி தாயாரை, மானிட உருவத்தில் வந்து மனம்கொண்ட சீனிவாசபெருமாள் அதே கோலத்தில் காட்சியளிக்கும் தலமாக உள்ளது. இங்கு ஆண்டுதோறும் முக்கோடி தெப்பத்திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இவ்வாண்டும் கொடியேற்றத்துடன் முக்கோடி தெப்பத்திருவிழா துவங்கியது. முன்னதாக பெருமாள் தாயார் சிறப்பு புஷ்பலங்காரத்தில் கொடி மரம் முன்பாக எழுந்தருளினர். பின் கொடிமரத்திற்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து கொடியேற்றுவிழா நடந்தது. நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர். விழாவின் முக்கிய நிகழ்வான உலக பிரசித்திபெற்ற கல்கருடசேவை நிகழ்ச்சி நாளை நடக்கிறது. ஆண்டுக்கு, இரண்டு முறை மட்டுமே பங்குனி மற்றும் மார்கழி மாதத்தில் நடைபெறும் கல்கருடசேவை உலக பிரசித்தி பெற்றது. மூலவராகவும், உற்சவராகவும் அமைந்துள்ள கருடபகவான், நாளை சிறப்பு புஷ்பலங்காரத்தில் 4, 8, 16, 32, 64 பேர் படிப்படியாக உயர்ந்து தூக்கி, வாகன மண்டபம் எழுந்தருளும் நிகழ்ச்சி, பக்தர்கள் வெள்ளத்தில் கருடபகவான் நீந்தி வருவது போல் கண்கொள்ளாக்காட்சியாக அமைந்திருக்கும். 25-ஆம் தேதி தெப்போத்ஸவம் நடக்கிறது.

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here