vaikunda Ekadesi-01

1
1,380 views

SrI:

Dear All,

Please note these are originally posted by Thiru Murali Battar
வைகுண்ட ஏகாதசி.. 01.

ஸ்ரீஸ்ரீ கிருஷ்ண ப்ரேமி அண்ணா அவர்கள் ஏகாதசி விரதத்தினைப் பற்றி பல புராணங்கள், சாஸ்திரங்களிலிருந்து தமது “ஸ்ரீபாகவத தர்ம சாஸ்திரம்“  என்னும் நூலில் விரிவாகக் கூறியுள்ளார்.  அவரது திருவடிகளை மனதினால் வணங்கி,  வைகுண்ட ஏகாதசி சம்பந்தமான சில செய்திகளைக் காண்போம்.

மார்கழி மாதத்தில் வரும் ஏகாதசியில் விரதமிருந்து, துவாதசியில் கேசவனை ஆராதித்தால் அஸ்வமேத யாகம் செய்த பலன் கிடைக்கும்.  பிரும்மஹத்தி தோஷம் கூட விலகும்  – பாத்ம புராணம்-

இப்போது ஏகாதசி நிர்ணயம் பற்றிய சர்ச்சைகள் பல ஏற்படுகின்றன.  இந்த ஏகாதசி நிர்ணயம் பற்றி சில வரிகள்..!

கங்காஜலம் பவித்ரமாயினும், கள்ளு கலந்துவிட்டால் அசுத்தமே.  பஞ்சகவ்யம் பவித்ரமாயினும் நாய் முகர்ந்தால் அசுத்தமே.  அதுபோன்று இரண்டு பக்ஷங்களிலும் வரும் ஏகாதசியில் தசமி கலந்தால் அதை விட்டுவிடவேண்டும்.  தசமி கலந்த ஏகாதசி அஸூர ப்ரீதி  – ப்ருஹன் நாராயணீயம் –

தசமி கலந்த ஏகாதசி அசுரர்களுக்கு ஆயுளும் பலமும் தரும்.  இந்த ஏகாதசி விரதம் பகவானுக்குப் பிடிக்காது.  – பாத்ம புராணம்-

தசமி ஒரு வினாடி இருந்தாலும், அந்த ஏகாதசி ஆகாது.  பல கேடுகளை விளைவிக்கும் – ப்ரம்ம வைவர்த்தம்-

உதயத்திற்கு முன்பே தசமி வேதையிருந்தாலும் ஏகாதசியினை விட்டு விட வேண்டும் -கருட புராணம்-

ஆக எக்காரணம் கொண்டும் ஏகாதசியன்று தசமி திதி கலக்கக்கூடாது.  சூர்யோதயத்திற்கு முன்பு வரும் பிரும்ஹமுகூர்த்த காலத்தில் தசமியிருந்தாலும் கூடாது.  (சூர்யோதயம் முன்பு நான்கு நாழிகைகள் (ஒரு நாழிகை என்பது 24 நிமிடங்கள்) பிரும்ஹமுகூர்த்தக் காலம்).

தொடர்வோம் –

to be continued…

Courtesy- Saranya Vs

Print Friendly, PDF & Email

1 COMMENT

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here