கரிசைலக்ருஷ்ணமேகஃ காங்க்ஷிதவர்ஷீ – Anustaanakulam Utsavam at Kanchi

Date:

Share post:

This article is written by Sri Satagopa Thatachar Swami of Kanchi.  4th of January 2013 being Anustanakulam Utsavam at Kanchi.
அநேககோடிஜன்மங்களில் செய்த ஸத்கர்மாவின் பயனாய் இந்த ஜன்மத்தி்ல் ஸதாசார்யகடாக்ஷமும், ஸதாசார்யதிருவடிஸம்பந்தமும் கிடைத்தது, அதடியாக கடந்த சிலதினங்களுக்கு முன்பாக ஸ்ரீமான் ரகுவீரதயாளஸ்வாமியின் உபகாரத்தால் அநேக ஆசார்யர்களின் சரித்ரங்களை வாசிக்கமுடிந்தது, அவைகளில் ஒன்றாக ஸ்ரீமதுபயவே, காஞ்சி தண்டிரி பட்டப்பாஸ்வாமியின் சரித்ரத்தையும் வாசிக்கஅவகாசம் கிடைத்தது..ஸ்வாமியின் ஆசார்யபக்தி மிகவும் உயர்ந்தது  என்றும் ஸ்வாமிதேசிகனின் ஸுபாஷிதநீவீ க்ரந்தத்தின்  ஹ்ருத்யார்த்ததீபிகை எனும் வ்யாக்யானம் ஸுப்ரஸித்தம் என தெளிந்தன.இந்த க்ரந்தத்தில்  ஒரு ச்லோகத்துக்கு அநேகம் பொருள் கூறியுள்ளார்,மிகவும் ரஸனீயமாக ஒரு ச்லோகம் வருமாறு
ஸத்பதம் சாதயந் மித்ரமபிவ்யாளஸ்தமோமயஃ
அதீதபர்வா ஜகதாமத்ருச்யஃ ஸஹஸா பவேத்.
 இதுக்கு இருபதுவிதமாக பொருள் கூறியுள்ளார்.
இத்தம் விம்சதிரர்த்தா உக்தாஃ பத்யஸ்ய சாஸ்ய ஹ்ருத்யஸ்ய.
ஏவம்ப்ராயா ஞேயா பஹுதா ஹி புதாளிபிர்யதா ஸ்வமதி ,என
 இந்த க்ரமத்தில் ஸ்வாமியின் ஸ்ரீஸூக்திக்கு பொருள் கூற சக்தியற்றவனாய் நம்மத்திகிரித்திருமால் கண்டருளும் அனுஷ்டானகுள உத்ஸவத்தை அநேகவிதமாக அனுபவிக்க எம்பெருமான் அனுக்ரஹித்த சக்தியால் சிறிது விண்ணப்பம் செய்கிறேன்.
1.மயர்வறமதிநலம் பெற்ற ஆழ்வார்கள் பொதுவாக மங்களாசாஸனம் செய்தபடியால் அவர்கள் திரு அத்யயன உத்ஸவத்தில் பேரருளாளனின் ஸந்நிதிக்கு  எழுந்தருளி  அருளிச்செயலை ஸேவித்து மரியாதையை பெற்று செல்கிறார்கள்.
( சிலர் ஸ்ரீபேரருளாளன் ஆழ்வார்களின் பாடலை பெறவில்லை. நம்மாழ்வார் அயர்வருமமரர்கள் அதிபதி என ஸாதிப்பதும்  ஸ்ரீதேவாதிராஜனை குறித்தல்ல, ஸ்வாமி தேசிகனே  முஹ்யந்தி அபங்குரதியோ முநிஸார்வபௌமாஃ ஆழ்வார்கள் வரதனின்  அழகை கண்டு மோஹித்தார்கள்  என்பதால்  ஸ்வாமிதேசிகன் ஸாதித்த ப்ரதமசதகே வீக்ஷ்ய வரதம் என்னுமிடத்திலும்  வரதம் என்பதின் பொருள் வரதனல்ல, பலப்ரதம்-பலத்தை கொடுப்பவன் என்றே கூறவேணும் என்பர்.)
ஸ்வாமிதேசிகனோவெனில் ஸ்ரீபேரருளாளன் விஷயமாக ஆறு ப்ரபந்தத்தை அனுக்ரஹித்தபடியால்  அதை ஸ்வாமி திருவாக்கால் திருச்செவிஸாய்த்து ஸ்வாமியை அனுக்ரஹிக்க எம்பெருமான் தானே ஸ்ரீதூப்புலுக்கு  எழுந்தருள  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
2.துரகவிஹகராஜஸ்யந்தனாந்தோளிகாதிஷு ஆனை பரி தேரின்மேல் அழகர் வந்தார் என அனுபவித்தபடி அவ்வுத்ஸவங்களில் ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருள்வது போல்  தாவன்னசேத் த்வமுபகச்சஸி சார்ங்கதன்வா என ஸாதித்தபடியால் சார்ங்கமெனும் தனுஸ்ஸுடன் ஸேவைஸாதிக்க   ஸ்ரீதூப்புலுக்கு  எழுந்தருள  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது
(இவ்வுத்ஸவத்தில் மாத்ரம் எம்பெருமான் சார்ங்த்துடன் ஸேவை ஸாதிப்பது விசேஷம்)
3.வந்தே தம் யமினாம்  என்று துடங்கி கரிசைலக்ருஷ்ணமேகஃ காங்க்ஷிதவர்ஷீ  என அன்று எம்பெருமானாரை காப்பாற்றிய வ்ருத்தாந்தத்தை ஸ்மரித்தபடியால் ஸ்மரித்தவரை  அனுக்ரஹிக்க வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
4.,தத்வடீகையில் மங்களச்லோகமாக ஸ ஜயதி யதிராஜமுனிஃ கருணாஜலதிஃ க்ஷமாபரிஷ்காரஃ,கரிசைலக்ருஷ்ணமேகஃ காங்க்ஷிதவர்ஷீ என யதிராஜனை ஸ்ரீதேவாதிராஜனை மங்களாசாஸனம் செய்தபடியால்  இருவருமாக  எழுந்தருளி அனுக்ரஹிக்க வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
5.ஸ்ரீபாஷ்யகாரரின் முதல் ஆஞ்ஞையான ஸ்ரீபாஷ்யத்தை வாசித்துப்ரவர்த்திப்பித்தல் என்பதை ரக்ஷணம் செய்து த்ரிம்சத்வாரம் ச்ராவித சாரீரகபாஷ்யஃ என தன்னை பெருமையாக கூறும் ஸ்வாமி தேசிகன் யதிராஜனுக்கு  ப்ரியதமராகிறார். அவரை அனுக்ரஹிக்க வேதாந்தவேத்யனான ஸ்ரீபேரருளாளனுடன்  எழுந்தருள ஒரு  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
6.ஸ்ரீவைணவதிநசர்யையில்
 வருவதொருறவெனவளரிளவரசென மருவுநன்மகனென வனமதகரியென
வருவிலைமணியென அடியவரடைபவர் அருகணையிறைவனை யருகணையுடனே. பாகவதர்கள் திருவாராதனம் செய்யும் ஸமயத்தில் ஸ்ரீபேரருளாளனை தம் வீட்டிற்கு அருமையாய்  வந்த ஒரு பந்துவாக நினைத்து,இளவரசனாக மகிழ்ந்து, அருமைபுத்ரனாக ,உயர்ந்த ரத்னமாக பாவித்து    ஸகலஉபசாரங்களுடன் ப்ரஸாதம் முதலியவற்றை நிவேதனம் செய்வர், இவ்விதம் செய்வதே இஜ்யை எனப்படும் என்பதாக ஸாதித்தார்.ஸ்வயமாசரதே யஸ்மாத் ஸ ஆசார்ய உச்யதே, தாம் உபதேசித்தபடி ஆசரிப்பதால் ஆசார்யனாகிறான்  என்பதால் தாம் உபதேசித்தபடி அனுஷ்டித்து காண்பிக்க  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் அமைந்ததாகும்.
 இன்று ஸ்வாமி தேசிகன், ஸ்ரீபேரருளாளன் எழுந்தருளும்  ஸமயத்தில் வாசலில் காத்து  நின்று  ஸ்வாகதம் கூறி உள்ளே அழைத்து வலதுபாகத்தில்  தாம் இருந்து அர்க்ய பாத்யாசமனீயாதி உபசாரத்துடன் நிவேதனத்தை செய்து பகவன்னிவேதிதமானதை ஆசார்யரான எம்பெருமானாருக்கும் நிவேதனம் செய்து தாமும் ஸ்வீகரித்து அங்கு  குழுமியுள்ள அடியார்களுக்கும் விநியோகித்து எம்பெருமானை ப்ரதக்ஷிணம் செய்து அவரை  விஷ்வக்ஸேனோ யதிபதிரபூத் வேத்ரஸாரஸ்த்ரிதண்டஃ எம்பெருமானாரே விஷ்வக்ஸேனராக வந்தார் வேத்ரஸாரம் த்ரிதண்டமாக   ஆச்சுது என்பதாக ஸாதித்தப்ரகாரம் விஷ்வக்ஸேனரிடம் ஒப்படைக்கும் க்ரமத்தில் எம்பெருமானாரிடம்  ஒப்படைத்துவிடுகிறார், ஆக இது ஒரு பூர்ணமான இஜ்யாராதனமாகும் ஸ்ரீபேரருளாளன் ஸந்நிதியில் ஆழ்வாராசார்யர்கள் திருநக்ஷத்ரகாலங்களில் எம்பெருமானுக்கு இடதுபக்கத்தில் எழுந்தருளியிருப்பார்கள். இங்கு ஸ்வாமி தேசிகன் ஆராதகரானபடியால் ஆராதகர்கள் வலது புறத்தில்  இருக்கவேணுமென்பதையும் சிக்ஷிபப்தாக  வலது பக்கத்தில் எழுந்தருளியிருப்பார்..
7.நம்மத்திகிரித்திருமால் அர்திதார்தபரிதானதீக்ஷிதன், வேண்டித்தெல்லாம் தரும் வள்ளல், ஆயினும் ஸ்வாமிதேசிகனின் ஒரு மநோரதத்தை அவருடய விபவகாலத்தில்  நடத்திகொடுக்கமுடியவில்லையே என ஒரு குறை, அதாவது ஸ்வாமிக்கு ஸ்ரீபாஷ்யகாரரின் ஸாக்ஷாத்சிஷ்யனாக இருந்து ஸ்ரீபாஷ்யகாரர் திருமுகத்தில் நின்றும் காலக்ஷேபம் செய்ய  பாக்யமில்லையே என வருத்தம் தோன்றியதுபோல் ஸங்கல்பஸூர்யோதயத்தில்  தன்னை சிஷ்யனாக பாவித்த ஸ்வாமி தனது ஆசார்யனுக்கு த்ரிதண்டத்தை கொடுத்து அவரை உபவீதிநமூர்த்வபுண்ச்ரவந்தம் —- சிகயா சேகரிணம் பதிம் யதீநாம்  என ஸ்ரீபாஷ்யகாரராக பரிசயப்படுத்துகிறார், இக்குறையை அர்சையில்  நிவ்ருத்தி செய்து ஆஸநத்தில் ஸ்ரீபாஷ்யகாரரும் அவருக்கு அபிமுகமாக ஸ்வாமிதேசிகனும் வீற்றிருக்க இங்கு ஸ்ரீபேரருளாளனின் முன்பாக காலக்ஷேபம் ஸாதிப்பதின்பொருட்டு வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
8.ஸ்ரீபேரருளாளன் வேதாந்தவேத்யனும் ப்ரவர்தகனுமாவார், ஸ்ரீபாஷ்யகாரர் தர்சனஸ்தாபகராவார், ஸ்வாமிதேசிகன் சததூஷணீ முதலான க்ரந்ங்களால் தர்சனத்தை ஸ்மரக்ஷித்தவராவார், இம்மூவரையும் ஒருங்கே ஸேவிக்க ஒரு  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
9.ஆசார்யபங்க்தியில் –ஆசார்யர்களாகிறஹாரத்தில் யதிராஜேன நிபத்தநாயகஸ்ரீஃ  என நடுநாயகமாக திகழ்பவர் ஸ்ரீபாஷ்யகாரர்,ஒருமுனையில் ஸ்ரீபேரருளாளன் மறுமுனையில் ஸ்வாமிதேசிகன் , ஆக முக்கோணவடிவில் ஆசார்யபங்க்தியை காண்பிக்கும் வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
10. மார்கழிமாதத்தில்  ப்ரபாதகாலத்தில் -தனுர்மாஸாராதனத்தில் ஸ்நாநாஸநத்துடன் திருவாராதனம் செய்வது ,இஜ்யாராதநத்தில்  ஸ்நாநாஸநம் நீங்கலாக மற்ற ஆஸநங்களுடன் உபசாரத்துடன் திருவாராதனம் செய்வது என ஸம்ப்ரதாயம்,இதை அடியார்களுக்கு காண்பிக்க வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது, அநேகமாக இவ்வுத்ஸவம் மார்கழிமாதத்தில் நடைபெறும்.  வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம்- இஜ்யாகாலத்தில் பிராட்டியுடன் கூடிய வரதனை பூஜிக்கும் ஸ்வாமிதேசிகனை ஸேவிப்பதாக ஸ்ரீகுமாரவரதாசார்யர் அனுபவித்தபடியாக  ஸ்ரீதூப்புலில்  இன்று நடைபெறுவது இஜ்யாராதனமானபடியால் ஸ்நாநாஸநமில்லாமல் மற்ற உபசாரங்கள் ஸமர்ப்பிக்கப்படுகின்றன.
11. இன்றையதினம் ஸ்ரீராமானுஜரின் இரண்டாவது அவதாரதினம்,சத்ருக்களின் உபத்ரவத்தில் நின்றும் மீண்டு வந்த திநமானபடியால் ஸுதிநமும்.ஸ்ரீபேரருளாளனும் ஸ்ரீபாஷ்யகாரரும்  இல்லாமல் போனால்  தர்சனமெங்கே ஜீவிக்கும். இதை கொண்டாட  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
12. இராமானுஜநூற்றந்தாதியை நாலாயிரத்தில் சேர்தத்து கணக்கிட்டவர் ஸ்வாமி தேசிகனே ஆவார்,சிலர் ஆழ்வார்கள்  ஸ்ரீபேரருளாளனை பாடவில்லை என்று கூறினாலும் நாலாயிரத்தில் பாசுரமில்லை என கூறமுடியாது அமுதனாரின் ஆண்டுகள் நாள் திங்களாய்,,,,,,,காண்தகுதோளன்னல்  என பாசுரம் உள்ளபடியால், இதை திருச்செவி ஸாத்தியவுடன் இருவருமாக ஸ்வாமியை அனுக்ரஹிக்க புறப்பாடு கண்டருள்வதில்   
13,ஸ்ரீப்ரதிவாதிபயங்கரம் அண்ணன் ஸ்வாமி ஸாதிப்பது
ஸ்ரீமத்யதீந்த்ரப்ரியவேங்கடேசகுர்வங்க்ர்யுபாயா வயமேவதன்யாஃ
ஸ்ரீபாஷ்யகாரருக்கு மிகவும் ப்ரியமானவர் ஸ்வாமி தேசிகன் என, ஆனபடியாலேயே இந்த ஸந்நிதியில் ஸ்ரீபாஷ்யகாரரின் ப்ரஸாதத்தை –மாலையை மற்ற யாருக்கும் பஹுமானமாக  மரியாதை செய்வது கிடையாது, ஆழ்வானுக்குப்போலும் கிடையாது, எம்பெருமானிடத்தில் நின்றும்  தனக்கு கிடைத்த ப்ரஸாதத்தை தனக்கு மிகவும் ப்ரியரான ஸ்வாமியை பஹுமானித்து அனுக்ரஹம்  செய்யும்  வ்யாஜமாக அனுஷ்டானகுள உத்ஸவம் நடைபெறுகிறது,
இவ்வருடம் அனுஷ்டானகுள உத்ஸவம்  4.1. 13.அன்று நடைபெற உள்ளது. அன்று கரிசைலக்ருஷ்ணமேகமான எம்பெருமான்- அருள் வரதன் ,எம்பெருமானார் ஸமர்பித்த தீர்தத்தை பருகி காங்க்ஷ்தவர்ஷியாய் வேண்டித்தெல்லாம் தரும் வள்ளலாய் நம் ஆரணதேசிகனை  அனுக்ரஹிக்க ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருளும் இந்த ஸுதிநத்தில்  அடியார்கள் கூட்டம் கூட்டமாக வந்திருந்து தீர்தப்ரஸாதாதிகளை பெற்று கண்டோம் கண்டோம் கண்ணுக்கினியன கண்டோம் என பாடி க்ருதார்த்தர்களாகவேணும்.

 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Thayar Adhyayana Utsavam At Nagai Perumal Temple: Day-2

28 January 2022, Plava varusha, Thai-15, Friday ; Thayar Adhyayana utsavam commenced on 27 January 2022, in Sri Soundararaja...

Thai Brahmotsavam In Sri Veeraraghavaswami Temple At Tiruvallur: Day-2

28 January 2022, Plava varusha, Thai-15, Friday ; Thai Brahmotsavam commenced on 27 January 2022 with Dwajarohanam in Sri...

Thotta Utsavam In Sri Damodara Perumal Temple At Villivakkam

28 January 2022, Plava varusha, Thai-15, Friday ; Thirumanjanam was performed in Sri Amirthavalli thayar Samedha Sri SowmyaDamodara perumal...

Thai Sukravara Thirumanjanam At Nallur Perumal Temple

28 January 2022, Plava varusha, Thai-15, Friday ; Thirumanjanam was performed in Sri Sundaravalli thayar Samedha Sri Sundaravaradaraja perumal...