அதிதி தேவோ பவ

0
585 views

கடந்த 24.12.2012 திங்கட்கிழமை, ஸ்ரீவைகுண்ட ஏகாதசி அன்று ஸ்ரீரங்கம் ஸ்ரீரங்கநாதனின் முத்தங்கி சேவை, ஸ்வாமி ஸ்ரீ நம்பெருமாளின் ரத்னாங்கி சேவை மற்றும் பரமபத வாசல் திறப்பு நிகழ்ச்சிகளைத் தரிசிக்க வந்திருந்த நடுத்தர, பாமர, ஏழை மக்களின் பசி, தாகம், களைப்பு நீங்க, ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை (எண்.116, வடக்கு உத்தர வீதி, ஸ்ரீரங்கம்) மற்றும்  ஸ்ரீ வானமாமலை மடம் (எண்.28, கீழ சித்திரை வீதி, ஸ்ரீரங்கம்) ஆகிய இரண்டு  இடங்களிலும் “அதிதி ஸத்காரம்”,  பத்தாயிரம்(10,000) ஏழை பாமர மக்களுக்கு காலை 5 மணி முதல் மாலை 5 மணி வரை ரவை உப்புமா, நொய் பொங்கல், நொய் கதம்பம் முதலிய ஆகாரங்களை வழங்கியது.

 ஸ்ரீ ஆண்டாள், திருப்பாவையில் கூறியுள்ளது போல் ” அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்” என்றபடி ஏழை மற்றும் கிராமப் புற மக்களுக்கு வஸ்த்ர தானமும்  வழங்கப்பட்டது. (அறஞ்செய்யும் என்று ஸ்ரீ ஆண்டாள் தவிர வேறு எந்த ஆழ்வாரின் பாசுரங்களிலும் காணக் கிடைக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.) இந்த உயரிய திட்டத்தை ஆதரித்தவர்கள் அனைவருக்கும் மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறோம். ஸ்ரீரங்கத்திற்கு

வருகை தரும்ஸ்ரீவைஷ்ணவர்கள், பாகவதர்கள் அனைவருக்கும் 24 மணி நேரமும் இலவச ஆகாரம் வழங்கப்படும்.

ஆகாரத்தை ஏற்றுக் கொண்டவர்கள் கொடுக்கும் பணம், பொருள் (நன்கொடை) ஏற்கப்படமாட்டாது. அதிதிகளை ஆராதிப்பதையே புருஷார்த்தமான சேவையாகக் கருதுகிறோம். அதிதி ஸத்காரத்தை ஏற்க வாரீர்! வாரீர்! என
அன்போடு அழைக்கிறோம்.
News source and writeup:
அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண். 116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
அலைபேசி: 0-9940 294 908
ஸ்ரீ ரங்க சாயா ட்ரஸ்ட்,
அலைபேசி:  0 – 9171 425 000
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here