Kanchi Sri Peraurlalan Vanabojana Uthsava Vaibhavam

1
959 views

Below are few of the snaps taken during Kanchi Sri Peraurlalan Vanabojana Uthsava Vaibhavam, Thai Sravanam (the special maryadhai to Sri Desikan at Sriranga raja Street in Kanchi) & Swami Sri Thoopul Vedhantha Desikan Purappadu

Courtesy: Sri Elangadu Ranganatha Chakravarthy Swami

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. காஞ்சி வரதன் வனபோஜன உத்ஸவம், மாலுகந்தவாசிரியன்
    Share This

    * Add to Delicious
    *
    * Share on FriendFeed
    *
    * Digg
    *
    * submit to reddit
    *
    *
    *
    *

    Tags

    தாஸஸ்ய விஞ்ஞாபனம், “வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம்” என்று ஸ்வாமியை விபவத்தில் அனுபவித்தபடி, ”கன்னலில் லட்டுவத்தோடு அன்னம் சீடை கறிபடைத்து பின்னும் செவித்து “ என ஸ்வாமி தேசிகன் ஸாதித்தபடியும் அர்ச்சையில் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீதூப்புலில் இஜ்யாராதனம் செய்வதாக அமைந்த அனுஷ்டாநகுள உத்ஸவத்தை அனுபவித்தோம்,

    “ஸாயம்தந கர்ம ஸமாப்ய பச்சாத் ஸமேத்ய ச ஸ்ரீவரதாஹ்வயஸ்ய,
    ஸஹாந்தரங்கைஃ குலதைவதஸ்ய ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி,”

    “ஆசாச்யசாஸ்மை பஹுமங்களானி தைஸ்தைஃ ப்ரபந்தைஸ்ச ததீயபங்க்தீஃ.
    ஸ்துத்வைகதானம் ப்ரதிக்ருஹ்யதீர்த்தப்ரஸாதமேனம் க்ருதக்ருத்யமீடே”, என

    விபவத்தில் ஸாயம்காலத்தில் ஸந்த்யாத்யனுஷ்டானம் செய்து அந்தரங்கர்களான அடியார்களுடன் ஸ்ரீபேரருளாளனை ஸமீபத்தில் சென்று ஸேவித்து பல்லாண்டு முதலான ப்ரபந்தங்களை பாடி தீர்த்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரிக்கும் க்ருதக்ருத்யரான ஸ்வாமி தேசிகனை ஸேவிக்கிறேன் என்பதாக ஸ்ரீதேசிகதினசர்யா ஸ்தோத்ரத்தில் அனுபவித்தபடி ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்ரீதிருப்புக்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் ஸேவைஸாதிக்கும் ஸ்வாமி தேசிகன் அர்ச்சையில் ஸ்ரீ பேரருளாளனை ஸாயங்காலத்தில் மங்களாசாஸனம் செய்து பல்லாண்டுபாடி ஸ்ரீசடாரி ப்ரஸாதாதிகளை பெறுவதாக அமைந்துள்ள ஸ்ரீபேரருளாளனின் வனபோஜன உத்ஸவத்தை அனுபவிப்போம்,

    ஸ்ரீதேவாதிராஜனின் அஷ்டோத்தர சதநாமாவளியில் அநேகமண்டப ஆஸ்தான நித்யோத்ஸவ தோஷிதர் என்றும் ஒரு திருநாமம் உள்ளது, அதன்படி வருடத்தில் அவருக்கு அநேக உத்ஸவம் நடைபெறுகிறது, அதில் ஒன்று வனபோஜன உத்ஸவமாகும், வேதம் கூறுகிறது “ச்ரோணா நக்ஷத்ரம் விஷ்ணுர்தேவதா”, ச்ரவண நக்ஷத்ரம் எம்பெருமானுடய நக்ஷத்ரம் என, ஆக மிகவும் உயர்ந்தது, மேலும் ஸ்வாமி தேசிகனின் அவதாரத்தாலும் பெருமை கூடிய இந்நக்ஷத்ரத்திலேயே ஸ்ரீதேவாதிராஜன் அநேக விசேஷ உத்ஸவத்தை கண்டருள்கிறார் எனலாம், வைகாசி சிரவணம் தீர்த்தவாரி அதையே ப்ரதானமாக வைத்து உயர்ந்ததான கருடஸேவையும் நிர்ணயிக்கப்படுகிறது. பங்குனி ச்ரவணம் பல்லவ உதஸவம் கடைசி நாள், அதையே ப்ரதானமாக வைத்து உத்ஸவம் உபக்ரமிக்கப்படுகிறது, ஆனி ச்ரவணம் ஜ்யேஷ்டாபிஷேகம், தை ச்ரவணம் வனபோஜன உத்ஸவம், இன்றையதினம் காலை திருவாராதனம் முடிந்து ஸ்ரீபெருமாள் நாச்சிமார்களுடன் காலையில் ஆரண்யக பாராயணத்துடன் மாடவீதிவழியாக புறப்பாடு கண்டருளி பாலாற்றில் நிவேதனம் திருமஞ்சனம் மீண்டும் நிவேதனம் கண்டருளி ஸன்னிதிக்கு திரும்பும் ஸமயத்தில் அஸ்தமித்துவிடும், வநபோஜனத்தில் பாலாற்றில் நிவேதனகாலத்தில் ஸ்வாமி தேசிகன் தன்னுடன் கலந்து கொள்ள வில்லையென வருத்தமாகலாம் ஸ்ரீபேரருளாளன் புஷ்பசெடிகளுடன் கூடிய சிறிய வனம்போல காட்சியளிக்கிற ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் மண்கப்படியில் ஸ்ரீஸ்வாமியுடன் நிவேதனத்தை கண்டருள்கிறான் போலும், அல்லது ஸ்ரீஸ்வாமி 750 க்கு மேல் திருநக்ஷத்ரமாகி அர்ச்சா நிலையில் உள்ளபடியால் ஸ்ரீ ஸ்வாமியால் ஸாயம்காலத்தில் ஸந்த்யாத்யனுஷ்டானம் செய்து அந்தரங்கர்களான அடியார்களுடன் ஸ்ரீபேரருளாளனை ஸமீபத்தில் சென்று ஸேவித்து பல்லாண்டு முதலான ப்ரபந்தங்களை பாடி தீர்த்தப்ரஸாதாதிகளை ஸ்வீகரிக்க அசக்தமான நிலையில் ஸ்ரீ பேரருளாளனே ஸ்ரீ ஸ்வாமி ஸந்நிதிக்கே எழுந்தருளி பல்லாண்டு முதலிய நித்யானுஸந்தாநத்தை திருச்செவி ஸாய்த்து நிவேதனாதிகளை கண்டருளி ஸ்ரீசடாரி ப்ரஸாதாதிகளை ஸ்வாமிக்கு அனுக்ரஹித்து செல்கிறாறோ என தோன்றுகிறது,

    ஸ்ரீபேரருளாளன் உத்ஸவம் கண்டளும் திநத்தில் மாலையில் நித்யானுஸந்தாநம் நடைபெறாது, “ஸ்துத்வைகதானம் ப்ரதிக்ருஹ்யதீர்த்தப்ரஸாதமேனம்” – என்றுள்ளதால் எனலாம் இன்றைய தினம் மாலையானபடியால் நித்யானுஸநதாநத்துடன் திருவாராதநம் நடைபெறுகிறது,

    “ஸாயம் ,,,,,,,,,,ஸமீபமாராத் ப்ரணதம் ஸ்மராமி” என்றுள்ளதால் எனலாம் சீவரோத்ஸவத்தில் திரும்புகாலில் பகலில் க்ஷ ஸந்நிதி வாசல் வழியாக எழுந்தருளும் ஸமயத்தில் ஸந்நிதி வாயிலிலிருந்தே ஸ்ரீசடாரி அனுக்ரஹிப்பதும், வநபோஜனத்தன்று ஸந்நிதிக்குள்ளாக எழுந்தருளி ஸ்ரீசடாரி அனுக்ரஹிப்பதும், மேலும் தினைத்தளவும் திருமகளை விடாதவராயினும் சீவரோத்ஸவத்தில் நாச்சிமார்களுடன் எழுந்தருள்வதில்லை பிராட்டியின் பாதுகையுடன் எழுந்தருள்வார், ஆக அன்று இஜ்யாகாலத்தில் எழுந்தருளினாலும் வந்தே யஜந்தம் வரதம் ஸதாரம் என்கிற கணக்கில் ஸந்நிதி உள்ளே எழுந்தருளி இஜ்யாராதனம் நடைபெறுவதில்லை ஸதாரம் பிராட்டியோடு கூடிய என்ற விசேஷணம் பொருந்தாது அல்லவா, ஆக பிராட்டிகளுடன் இஜ்யாராதநத்தை ஸ்ரீதூப்புலில் அனுஷ்டாநகுள உத்ஸவத்தன்றும் மாலை திருவாராதநத்தை நித்யானுஸந்தாநத்துடன் ஸ்ரீரங்கராஜவீதியில் ஸ்வாமி ஸந்நிதியிலும் கண்டருள்கிறார் எனலாம்படி அமைந்தது ரஸனீயம்,

    மற்ற பல திவ்யதேசங்களில் புறப்பாட்டில் அருளிச்செயல் உபக்ரமத்தில் கோஷ்டிக்கு ஸ்ரீசடாரி ப்ரஸாதித்து உபக்ரமிப்பது வழக்கம், வேதபாராயணத்துக்கு முடிவில்தான் உண்டு, ஆயினும் ஸ்ரீபேரருளாளன் புறப்பாடுகள்தோறும் கோயிலில் எழுந்தருளியுள்ள ஸ்ரீஸ்வாமிக்கு முதன் முதலாக ஸ்ரீசடாரி ப்ரஸாதித்த உடன் வேத பாராயணம் உபக்ரமிப்பது என்பது வழக்கம்,

    சித்தரபௌர்ணமி தினம் மற்றும் வைசாக உத்ஸவத்தில், அனுஷ்டாநகுள உத்ஸவத்தில் ஸ்ரீதூப்புலில் ஸ்வாமிக்கு, ஸ்ரீசடாரி மரியாதை நடைபெற்றுவருகிறது, சீவரோத்ஸவத்தன்றும், வனபோஜன உத்ஸவத்திலும் ஸ்ரீரங்கதாஜவீதியில் ஸ்ரீதிருப்புக்குழி ஸ்வாமி ஆச்ரமத்தில் எழுந்தருளி உள்ள ஸ்வாமி தேசிகனுக்கு மாலையுடன் ஸ்ரீசடாரியை அனுக்ரஹிக்கிறார் இவ்விதமாக ஸ்வாமி தேசிகன் எழுந்தருளியுள்ள இடங்களை தேடித்தேடி சென்று அனுக்ரஹிப்பதை கண்டால் மாலுகந்தவாசிரியன் என ஸ்வாமி தேசிகன் நம்மாழ்வாரை குறிப்பிட்டாலும் நம்மத்திகிரித்திருமால் உகந்தவாசிரியன் நம் வேதாந்தவாசிரியனே என தோன்றும்,

    இப்படியிருக்க சில நித்யஸம்ஸாரிகள்

    “முன்னோர் மொழிந்த முறைதப்பாமல் கேட்டு பின்னும் தாமதனை பேசாதே. தன்னெஞ்சில் தோன்றியதே சொல்லி இது சுத்த உபதேசவர வார்த்தையென்பர், மூர்க்கராவார்.” (உ,,,, மாலை) என்பதை ஸ்வாமி விஷயம் என கூவி வருகிறார்கள், தன்னெஞ்சில் தோன்றியதை சொல்பவர் ஸ்வாமி என அவர்களின் அட்டஹாசம், இது என்ன கொடுமை, இவர்கள் ஸ்வாமி க்ரந்தத்தை பாராதவர்கள் என்பது திண்ணம், ஸ்வாமி ஸாதிப்பதோ, “யதிபதிஹ்ருதயாரூடம், தத்வக்தா வாஜிவக்த்ரஃ” என்று ஸம்ஸ்க்ருதத்தில் ஸாதித்ததை ஸம்ஸ்க்ருத ஸந்யாசிகள் அறியமாட்டார்கள் என்ற திருவுள்ளத்திலேயே தமிழிலும் ஸாதித்தது- “வெள்ளைப்பரிமுகர் தேசிகராய் விரகால் அடியோம் உள்ளத்து எழுதியது ஓலையிலிட்டநம் யாமிதெற்க்கென்” என, ஆக இப்படி இவர் ஸாதித்தது தன்னெஞ்சில் தோன்றியதானால் இந்த தூஷணம் ஸ்ரீ ஹயக்ரீவனுக்கேயாகும், இவர்களை குறித்தேயாகும் நடக்கவிருப்பதையறிந்த ஸ்ரீ ப்ரதிவாதி பயங்கரம் அண்ணன் ஸ்வாமி “குரௌ வாதிஹம்ஸாம்புதாசார்ய சிஷ்யே ஜநா பக்திஹீநா”ஃ யதீந்த்ரரான ஸ்ரீபாஷ்யகாரருக்கு அப்ரியர்களாவர் , ஸ்ரீபாஷ்யகாரருக்கு அப்ரியர்கள் எம்பெருமானின் க்ருபைக்கு பாத்ரமல்லாதவராகிறார்கள், அப்படிப்பட்டவர்களுக்கு மோக்ஷம் என்ற வார்த்தைக்கே இடமில்லை என ஸாதித்தது,

    ஆக மூர்க்கராவார். என்பது ஸ்வாமியை குறிக்குமானால் அது பூர்வபக்ஷமாகும், அதன் ஸமாதானமாக ஸித்தாந்தமாகும் சாத்துமறையில் குரௌ வாதிஹம்ஸாம்புதாசார்ய சிஷ்யே ஜநா பக்திஹீநாஃ என்ற ச்லோகானுஸந்தானம்,

    இவ்விதம் உயர்ந்த இம்மஹோத்ஸவம் இவ்வருடம் தை ச்ரவணத்தன்று 9-2-13, ஸ்வாமி தேசிகன்,

    “ஸ்ரீரங்கத்விரதவ்ருஷாத்ரிபூர்வகேஷு ஸ்தாநேஷு ஸ்திரவிபவா பவத்ஸபர்யா.
    ஆகல்பம் வரத விதூத வைரிபக்ஷா பூயஸ்யா பவதனுகம்பயைவ பூயாத்”

    ஸ்ரீரங்காதி க்ஷேத்ரங்களில் உன்னுடையதான கைங்கர்யம் மற்றும் உத்ஸவாதிகள் எதிரிகளின்

    இடையூறு இல்லாமல் உன்னுடைய அனுக்ரஹத்தால் ஆசந்த்ரார்கம் நடைபெற வேணுமென ப்ரார்த்தித்தபடி நடைபெற்றது.அவ்வமயம் அடியார்கள் குழாங்களாக வந்திருந்து ஸ்வாமி தேசிகனுடன், அடியார்களும் எம்பெருமானுக்கு பல்லாண்டு பாடி தீர்தப்ரசாதாதிகளை பெற்று க்ருதக்ருத்யர்களானார்கள்.
    ப்ரதி மாதம் நடைபெறும் ச்ரவண உத்ஸவம் கண்டருள இரவு ஸ்ரீதூப்புலிலிருந்து ஸ்வாமி தேசிகன்,ஸ்ரீபேரருளாளன் ஸந்நிதிவீதிக்கு எழுந்தருள அங்கு நம்மத்திகிரித்திருமால், ஸ்வாமிக்கு ஸேவை ஸாதித்து அந்த ஆநந்தத்துடன் ச்வேதாதபத்ரதிகந்தராளன் என்ற திருநாமத்தை (திக்குகளை வ்யாபிக்கிற மிகப்பெரியதான இரண்டு வெண்குடை கீழ் எழுந்தருள்பவர்) மெய்ப்பித்து எழுந்தருள்வதை “அனுதினமநிமேஷைர்லோசனைர் நிர்விசேயம்” என்ற ஸ்வாமி தேசிகன் ப்ரார்த்தனையை அனுஸரித்து அனுதினம்- ப்ரதிதினம் சித்ரரூபமாக ப்ரகாசனம் செய்து நேரில் வந்து ஸேவிக்கமுடியாத அடியவர்களுக்கு நேரில் ஸேவிப்பது போல் செய்த அனுதினம் நிறுவனத்தார்,மற்றும் அவர்களின் ஸஹகாரிகளுக்கு அநேக தந்யவாதங்கள்.ஹஸ்திகிரீசனை அனுதினம் நேரடியாக ஸேவிக்க அசக்தர்கள் அனுதிநம் வலையதளம் மூலமாவது ஸேித்தனுபவிக்க
    “அனுதினமநிமேஷைர்லோசனைர் நிர்விசேயம்” என்றே ப்ரார்த்திப்போம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here