அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 5

0
799

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

6 வயதிற்குட்பட்டவர்களை, சண்டாளன், ரஜஸ்வலை (Mensus ladies) இவர்கள் தொட்டாலும் அசுத்தி கிடையாது. உபநயனத்திற்கு முன்னும் கிடையாது.

உபநயனம் எப்போது செய்ய வேண்டும்..?

கர்ப்பத்திலிருக்கும் காலத்தினையும் கணக்கில் கொண்டு எட்டாவது வயதில் பிராம்மணர்கள் உபநயனம் செய்யவேண்டும்.

16 வயது வரையில் ஒருவரது காலம் கௌணகரலம் என்று பெயர். எட்டாவது வயதிற்கு மேல் பண்ணுவதாகயிருந்தால் பிராயசித்தம் செய்தே செய்யவேண்டும். (உபநயனத்திற்கு முன் சேது ஸ்நானம் நல்லது.)

16 வயதிற்கு மேல் ஒருவனுக்கு உபநயனமாகுமாயின் அவன் வேதம் பயிலுதற்கும், வைதீக கர்மாக்களுக்கும், தானம் முதலான காரியங்கள் செய்வதற்குமுண்டான தகுதிகளை இழக்கின்றான்.

உபநயனம் செய்யக்கூடிய காலங்கள்:

வஸந்தகாலம் சிறந்தது.

தை, மாசி, பங்குனி மாதங்கள் நல்லது.

ஜ்யேஷ்ட மாதத்தில் மூத்த புத்திரனுக்குக் கூடாது.

தேய்பிறை சந்திரனது காலம் நல்லதல்ல.

ருக்வேதத்திற்கு பிரஹஸ்பதியும் அதாவது வியாழனும், யஸூர் வேதத்திற்கு சுக்கிரனும் (வெள்ளி), சாமவேதத்திற்கு அங்காரகன் (செவ்வாய்) அதர்வண வேதத்திற்கு புதனும் (புதன்) ஈஸ்வரர்கள் ஆவார்கள். இவர்கள் சாகாதீசர்கள் எனப்படுவர். அந்தந்த வேதக்காரர்கள் அவரவர்களுக்குரிய தினத்தில் உபநயனம் செய்வது மிக சிறந்தது. அதிலும் அவரவர்கள் சாகாதிபன் வலுத்து கேந்திரத்தில் இருக்கும் போது அதாவது லக்னத்திற்கு 1, 4, 7, 10-இல் இருக்கும் போது செய்வாராகில் மிக மிகச் சிறந்தது.

மேலும் காண்போம்…

A child within 6 years even if touches a lady having her periods,an outcaste person is not considered unclean.Even before upanayanam its not considered

when to perform upnayanam..?

Counting from preganancy at age of 8 Bhramins should perform upnayanam till 16 years it is known as GouNakaralam. After 8 years one must do prAyascchittam befor upnayanam(it’s good to do sethu snanam)

After 16 years if one does upnayanam he loses his rights to read vedam,vaidiga karmagal,gifts

when can one do upnayanam:

in tamil month of thai, masi, panguni is good

spring season is very good

in jheshta month for the eldest son it shouldn’t be performed.

the period moon is waning is not good

for rigveda brahaspathi (thursday),yajur veda -sukran(friday), for sama vedam angarakan (tuesday),for atharva vedam Budhan (wednesday) are respective Gods, they are called sagadergal. It is considered very auspicious to perform on the respective days for respective veda followers.To add it is considered more better if it is done when they are at 1,4,7,10 from Lagnam.

to be contd..!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here