Kanchi Sri Varadhan Thenneri theppothsavam Part – 2

1
901 views

Below are few of the snaps taken during Kanchi Sri Varadhan theppothsavam (purappadu) at Thenneri on 19th and 20th feb 2013.

Courtesy: Sri Elangadu Ranganatha Chakravarthy Swami

Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. .ஸ்ரீஸ்வாமி தேசிகன் நமது ஆசார்யர்கள் விஷயமாக ஸ்தோத்ரங்களை அனுக்ரஹித்தும், அவர்களை ஸ்மரித்தும் அநேகம் க்ரந்தங்களை ஸாதித்துள்ளார்.ஆயினும் ஸ்ரீதேவாதிராஜனுடன் நேரில் வார்தையாடி நம் தர்சநஸ்தாபகரான ஸ்ரீபாஷ்யகாரருக்கு “அஹமேவ பரம் தத்வம்” என்பது முதலான ஆறுவார்தைகளை பெற்றுத் தந்த திருக்கச்சிநம்பி விஷயமாக ஏதும் ஸாதிக்கவில்லையே என நினைத்தஸமயத்தில் ஹம்ஸ்ஸந்தேசத்தில் ஸாதித்ததாக தோன்றியதை அனுபவிக்கலாம்.
    மத்வாஸக்தம் ஸரஸிஜமிவ ஸ்வின்னமாலம்பமானஃ
    தேவ்யா ஹஸ்தம் ததிதரகரந்யஸ்தலீலாரவிந்தஃ
    தேவஃ ஸ்ரீமான் ஸ யதி விஹரேத் ஸ்வைரமாரமபூமௌ
    வ்யக்தோ வாலவ்யஜனவபுஷா வீஜயேஸ்தம் த்வமேவ.
    ஹம்ஸமே,ஸ்ரீதேவாதிராஜன் பெரியபிராட்டியின் திருக்கரங்களை பற்றியவராய் தோட்டத்தில் விஹரிக்கும் காலத்தில் நீ உன்னுடய இறகுகளால் ஆலவட்ட கைங்கர்யம் செய்வாயாக. என ஹம்ஸத்திடம் கூறுவதாக அமைத்தார். இங்கு மறைமுகமாக திருக்கச்சிநம்பியை ஸ்மரிக்கிறார் எனலாம். அவர் அவதரித்தது மாசியில் ம்ருகசிரம், அநேகமாக அதன் பிறகான உத்ரம் ஹஸ்தம் நாளில் தவன உத்ஸவம் வரும் , இவ்வுத்ஸவத்தில் திவ்யதம்பதிகள் பத்தி உலாவருதல் முக்யமான அம்சம்,இதை இந்த ச்லோகத்தால் மங்களாசாஸனம் செய்கிறார் என பெரியோர்கள் கூறுவர்.
    மேல் வரும் ச்லோகங்களில் “சேஷபீடம் பஜேதாஃ, யஸமிந்நஸ்மத்குலதநதயா திவ்யஸாகேதபாஜஃ,ஸ்தாநம் பவ்யம்” ,சேஷபீடத்தை அடையக்கடவாய்,வரும் காலத்தில் எந்த இடம் நமது குலதநமான ஸ்ரீரங்கநாதனுக்கு வாஸஸ்தானமாக அமையஉள்ளதோ என ஸாதித்தார். இங்கு ஸ்ரீரங்கநாதனை மங்களாசாஸனம் செய்ய திருவுள்ளத்துடன் துடங்கி ஹம்ஸ்ஸந்தேசகாலத்தில் ஸ்ரீரங்கத்தில் பெருமாள் இல்லாததால் “பவ்யம்” வரப்போகிறது என ப்ரயோகித்தது ரஸனீயம்.
    அதே க்ரமத்தில் இங்கும் மாசிமாததில் கண்டருளும் உத்ஸவத்தில் விசிறி கைங்கர்யத்தை செய்யும்படி ப்ரார்த்திக்கிறபடியால் இனி கலியுகத்தில் மாசிமாதத்தில் அவதரிக்கப்போகிறவரான திருக்கச்சிநம்பி, இந்த உயர்ந்த திரு ஆலவட்டகைங்கர்யத்தை செய்ய உள்ளார் என்று ஸூசகமாய் ஸ்ரீநம்பியை ஸ்மரித்தார் எனலாம்,காரணம்,மற்ற எம்பெருமான் விஷயத்தில் விசிறி கைங்கர்யத்தை கூறாததும்,ஸ்ரீஹஸ்திகிரியில் கூறாமல் தோட்டத்தில் பிராட்டியுடன் கூடி எழுந்தருளும் ஸமயத்தில் கூறியபடியால் க்ஷெ உத்ஸவம் மாசிமாதமானபடியால் திருக்கச்சிநம்பிக்கே அஸாதாரணமான கைங்கர்யமானபடியாலும் எல்லாம் ஸமன்வயமாகிறது.மேலும் நமது ஸம்ப்ரதாயத்தில் ஆசார்யர்களை ஹம்ஸமாக உத்ப்ரேக்ஷிப்பதால் திருக்கச்சிநம்பியாகிற ஹம்ஸத்தை ஹம்ஸ்ஸந்தேசத்தில் ஸ்மரித்தார் என்பதால் சாத்துமறையில் ஸ்ரீதேவராஜாஷ்டகத்துடன் இந்த ச்லோகத்தையும் அனுஸந்தித்தவர்கள் தன்யர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here