ஸ்ரீரங்கம் அதிதி ஸத்காரம் – நடைபெற இருக்கும் செயல்பாடுகள்

3
2,664 views

ஜனவரி 2013 (01 முதல் 31 வரை) – மாத செயல்பாடுகள்

1) சுமார் 1400 ஸ்ரீவைஷ்ணவ பாகவதர்களுக்கு அதிதி ஸத்காரம் நடத்தப்பட்டது (இருவேளை இலவச போஜனம், டீ, காபி, பால் உள்பட)

2) ஏழை ப்ராஹ்மண ஸ்த்ரீ புருஷர்களுக்கு இலவச புடவைகள் வேஷ்டிகள் 100 நபர்களுக்கு வழங்கப்பட்டன.

3) கல்வி உதவிக்காக நான்கு ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி (தலா ரூ.500/- வீதம்) வழங்கப்பட்டது.

4) பாடசாலையில் படிக்கும் 8 வித்யார்த்திகளுக்கு தீர்த்த பாத்ரம் வழங்கப்பட்டது.

5) 14-01-2013, தைப்பொங்கல் அன்று சுமார் 2000 ஸேவார்த்திகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

6) காரடையான் நோன்பை முன்னிட்டு சுமார் 3000 ஸுமங்கலி ஸ்த்ரீகளுக்குத் திருமாங்கல்ய சரடும் நோன்பு சரடும் வழங்கப்பட்டன.

நடைபெற இருக்கும் செயல்பாடுகள்

1) வருகிற 26-03-2013 (பங்குனி உத்ரம்) மற்றும் 27-03-2013 (கோ ரதம்) ஆகிய இருதினங்களில் ஸ்ரீரங்கத்திற்கு சுமார் 20,000 யாத்ரிகர்கள் அரங்கனை தரிசிக்க வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. தொடர்ந்து இந்த இருதினங்களிலும் காலை 10 மணி முதல் இரவு 10 மணி வரை நாளொன்றுக்கு சுமார் 5000 யாத்ரிகர்களுக்கு அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இத்திட்டத்தில் நீங்களும் பங்கு பெறலாம்.

2) பங்குனி உத்ர ஸேர்த்தி ஸேவையை தரிசிக்க வரும் பக்தர்களுக்கு அதிதி ஸத்காரத்திற்கு வரும்பொழுது பெருமாள் தாயார் ஸேர்த்தி ஸேவையின் போது கண்டருளப் பண்ணப்பட்ட ப்ரஸாதங்கள் வழங்கப்படும்.

3) பங்குனி உத்ர தினத்தன்று, இரவு பகல் என்று பாராமல் அயராது கைங்கர்யம் செய்யும் கைங்கர்யபரர்களுக்கும் திருக்கோயில் ஊழியர்களுக்கும் ஸ்வாமி ஸ்ரீ தேசிகன் திருமாளிகையில் ஸம்பாவனை வழங்கப்பட உள்ளது (கடந்த 26-01-2013, தைத்தேர் அன்றும் அனைத்து ஊழியர்களுக்கும் ஸம்பாவனை வழங்கப்பட்டது)

4) பங்குனி உத்ரத்தன்று கத்யத்ரயம் ஸேவிக்க அனைவரையும் வரவேற்கிறோம்.

தொடர்புக்கு

அதிதி ஸத்காரம்,
ஸ்ரீமத் ஸ்ரீ வேதாந்த தேசிகன் திருமாளிகை,
எண். 116, வடக்கு உத்தர வீதி,
ஸ்ரீரங்கம்.
அலைபேசி: 0-9940 294 908

Print Friendly, PDF & Email

3 COMMENTS

    • Swamin,

      You may contact them with the below details

      Athithi Satkaram,
      Srimad Sri Vedantha Desikan Thirumaligai,
      No. 116, Vadakku Uththara Street,
      Srirangam
      Mobile: 0-9940 294 908

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here