அறிவோம் சற்றே தர்ம சாஸ்திரம் (let’s learn Dharmasastram) – 11

0
1036

Please note these are originally posted by Thiru Murali Battar who is Archakar @ Srirangam Temple. English translation by Srimathi Saranya.

தர்ப்ப பவித்ரத்தினைக் கையில் தரித்துக்கொண்டு ஆசமனம் செய்யவேக் கூடாது.

பவித்ர மோதிரம் தகப்பனார் உயிருடன் இல்லையென்றால் தரித்துக் கொள்ளலாம். தகப்பனார் இருப்பவர்கள் தர்ப்பபவித்ரம் அணியலாம். உலோகங்களாலான பவித்ரமோதிரம் அணியக்கூடாது.

மிகச் சிறப்பான பொன் பவித்ர மோதிரமானது 8 பங்கு தாம்ரமும் 12 பங்கு வெள்ளியும், 11 பங்கு தங்கமும் சேர்ந்த கலவையினால் செய்யப்பட்டிருக்க வேண்டும். இம்மாதிரியான பவித்ரமோதிரம் அதிஸ்ரேஷ்டமானது.

இதில் 31 பங்கு தங்கம் சேர்த்தால், “பிரும்மமுடி“ போட வேண்டிய அவசியமில்லை.

ஆவணி மற்றும் மாசி ஆகிய மாதங்களில் அமாவாஸையன்று க்ரஹிக்கப்பட்ட (பறிக்கப்பட்ட) தர்ப்பமானது அதிக ஸ்ரேஷ்டமானது.

தர்ப்பையினைப் பறித்து ஒருமாதம் வரையில் உபயோகிக்கலாம். அப்போதைக்கப்போது கொண்டுவருவதுதான் உத்தமம். (இப்போதெல்லாம் இது சாத்தியமில்லாது போயிற்று..!)

கீழ்கண்ட பயிர்களைத் தர்ப்பமாக பயன்படுத்தலாம். அவையாவன
1) குசம்
2) காசம் அதாவது நாணல்
3) யவை
4) அருகு
5) கோதுமை
6) வழல்
7) நெல் பயிர்
8. முஞ்சிப் புல்
9) விஸ்வாமித்ரம்
-இவைகளில் க்ரமமாக எது கிடைத்தாலும் உபயோகப்படுத்தலாம். ஒரேயொரு நிபந்தனை இவற்றை நாம் க்ரஹிக்கக்கூடிய இடம் பரிசுத்தமாகயிருக்கவேண்டும்.

இந்த ஒன்பதும் கிடைக்காவிடின்

1) வாள்கோறை
2) சிறுகோறை
3) குதிரைவாலி
இவைகளை பயன்படுத்தலாம்.

மேலும் காண்போம்…

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here