Kumbabishekam at Keezhkatalai Sri Lakshmi Narayana Perumal Temple

0
4,281 views

Kumbabishekam at Keezhkatalai Sri Lakshmi Narayana Perumal Temple (Near Nanganallur, Chennai) is scheduled to take place on the 12th of May 2013. Details of the events at the temple can read from the invitation below.

 

Here is writeup by Sri Murali Battar of Srirangam:

சென்னையினைப் பொறுத்தவரை அங்கு வேறிடங்களிலிருந்து புலம் பெயர்ந்து குடியேறியவர்கள்தாம் அநேகம்..! ஆனால் அங்கேயே தலைமுறை தலைமுறையாக வசித்து அரங்கனிடத்து அன்பு கொண்டு, பஜனை மடங்கள் தோற்றுவித்து அரங்கனை ஆடிப்பாடி மகிழ்ந்து கொண்டாடியவர்களும் பலர் இருக்கின்றனர் என்பதனையறிந்து மிகவே மகிழ்ந்தேன்..!

அம்மாதிரியுள்ள பஜனை மடங்களில் ஒன்றுதான் இந்த கீழக்கட்டளைக் கோவில்…! இப்போது பிரம்மாண்டமாக கட்டிமுடிக்கப்பட்டுள்ளது…! ஸ்ரீலக்ஷ்மீ நாராயணப்பெருமாள் நல்ல ஆகிருதியுடன் அனைவரையும் அபேக்ஷிக்கின்றார். நங்கநல்லுார் மற்றும் அதன் அருகில் உள்ள கீழக்கட்டளையின் இந்த கோவிலையும் சேர்த்தால் மொத்தம் 142 கோவில்கள் ஆகின்றனவாம்..! ஆச்சா்யமாகயிருந்தது..!

இங்குள்ள மக்கள் இந்த கோவிலுக்காக அல்லும் பகலும் அயராது உழைத்தவண்ணம் உள்ளனர்.

நிகழும் மே 10ம் தேதி வெள்ளிக்கிழமை (10.05.2013) அன்று மாலை யாகசாலைக் கார்யங்கள் ஆரம்பிக்கப்பட உள்ளன. 12.05.2013 அன்று காலை சம்ப்ரோக்ஷணம். ஸ்ரீரங்கத்திலிருந்து அடியேனும், திரு ஸ்ரீகண்ணா பட்டர் (எ) குடியா பட்டரும், திருச்சானுாரிலிருந்து
ஸ்ரீ மணிவண்ணன் பட்டரும், தென்திருப்பேரையிலிருந்து ஸ்ரீ ஜவஹர் பட்டரும் இந்த பிரதிஷ்டா கைங்கர்யத்தினை ஏற்றுச் செய்ய உள்ளோம். உங்கள் அனைவரையும் அவசியம் எதிர்பார்க்கி்ன்றோம். தவறாது வாங்களேன்..!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here