An Article on Vaikasi Brahmothsavam in Kanchipuram

0
2,344 views

Kanchi Thiruther evening5

This article is written by Sri ‘U.Ve’ ‘Perumal Koil’ ‘Koti Kannikadhana’ Dr.Sadagopa Thathacharyar Swamy

 வையமெல்லாம் புகழும் ஸ்ரீவரதனின் வைசாகப்ரம்ஹோத்ஸவத்தை ஸேவித்த ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம் உண்டாகியிருக்கும்.ஸ்வாமி தேசிகனின் அனுபவம்,

Bagavathas enjoy our beloved Lord in many ways dear to their hearts! Each such joy known as ‘Anubhavam’ is unique and lets enjoy such anubhavam of Sri Aacharya Simhar!

“அனுதினம் அநிமேஷைர்லோசநைர்நிர்விசேயம்” –, வாஹனங்களில் அத்புதமான ஸேவை ஸாதிக்கும் தேவரீரை ப்ரதிதினம் இமைகொட்டாமல் ஸேவிக்கவேணுமென ப்ரார்த்திக்கிறார். “வாஸஸ்தலீ ரங்கபுரீ” என குமாரவரதாசார்யஸ்வாமி ஸாதித்தக்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் ஸ்ரீரங்கத்தில் அநேககாலம் எழுந்தருளியிருப்பினும் அவருக்கு ஸ்ரீவரதனின் வைசாகோத்ஸவம் மனதிலிருந்து நீங்கவில்லை போலும்,“கரிகிரிபதேர்வாஹவேகாவதூதான்” என ஹம்ஸஸந்தேசத்திலும், “ஆனை பரி தேரின் மேல் அழகர் வந்தார்” என திருச்சின்னமாலையிலும் அனுபவித்தார்.இவ்விதம்  வேறு எந்த திவ்யதேசத்திலும் வாஹன உத்ஸவத்தை அனுபவித்ததாக ச்லோகங்களில்லை எனலாம்.

Srimadh Kumara Desikacharyar enjoys our Swamy’s divine stay at Sri Rangam. Our Swamy pleads at the Lotus Feet of the Lord of Kanchipuram that, He should be always in His Sannidhi enjoying His divine beauty, not leaving a single glimpse of it! Though our Swamy stayed, regulated and governed Sri Rangam Temple, He had a very special loving place for Kanchipuram and enjoys the beauty of our Lord adorning various Divine-Vahanas during the most celebrated Vaikasi Brahmothsavam.

ஸ்வாமியின் ப்ரார்த்தனையால் இன்றளவும் வைசாகோத்ஸவம் வையமெல்லாம் புகழும்படி அண்மையில் நடந்து முடிந்தது.இதை ஸேவித்த தாஸனுக்கு கிடைத்த அனுபவம், இது ஸ்ரீதேவப்பெருமாளின் உத்ஸவமில்லை, ஸ்ரீதேசிகனின் உத்ஸவமேயாகும் எனத் தோன்றியது. அதை ஸஹ்ருதயர்களும் அனுபவிக்க சிறிது விண்ணப்பிக்கிறேன்.

Any humble Bagavatha, who enjoys Vaikasi Brahmosthsavam would infer that, this Festival is mostly celebrated to enjoy the Divine Beauty of our Lord with respect to Swamy Sri Desikan. Its only for the purpose of Swamy after His Thiruvavadharam, the Lord enjoys this Uthsavam!

வேதத்தில் “அந்தஃப்ரவிஷ்டச்சாஸ்தா ஜநாநாம் ஸர்வாத்மா” என ஓதியபடி எல்லா ஆத்மாக்களுக்கும் ஆத்மாவாக இருப்பவர் எம்பெருமானே ஆவார். ஆயினும் அவர் கீதையில் ஸாதிப்பது “க்ஞானீ து ஆத்மைவ மே மதம்”க்ஞானியானவன் எனக்கு ஆத்மா என. இங்கு க்ஞானீ என்பதின் விவரணத்தை கீதாபாஷ்யத்தில் ,”ததாயத்ததாரணோஹமிதி மந்யே, கஸ்மாதேவம்,யஸ்மாதயம் மயா விநா ஆத்மதாரணாஸம்பாவநயா மாமேவாநுத்தமம் ப்ராப்யமாஸ்திதஃ, அதஸ்தேந விநா மமாப்யாத்மதாரணம் ந ஸம்பவதி. ததோ மமாத்மா ஹி ஸஃ,” என கானலாம். க்ஞானியானவன் என்னை விட்டு ஆத்மதாரணம் முடியாது என நினைத்து என்னையே  அடைபவன்,ஆதலால் எனக்கும் அவனை விட்டு ஆத்மதாரணம் ஸம்பவியாது.ஆதலால் அவன் எனக்கு ஆத்மா என.

Our Lord reveals the greatness of a Bagavatha, that He is always residing in His heart! The Beloved Lord is the ‘Athman’ for all the Chiths and in Srimadh Bagavad Gita, He praises a Bagavatha, that Bagavatha is His Athman! How a Bagavatha could never leave the company of our beloved Lord, even the Lord could never stay without the Bagavatha!

இந்த க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் தான் க்ஞானீ, ஸ்வாமி தேசிகன் நம்மத்திகிரித்திருமால் விஷயத்தில்  வாஹன உத்ஸவத்தை குறிப்பிடும்“துரக விஹகராஜ ஸ்யந்தநாந்தோளிகாதிஷு” என்பதான ச்லோகத்துக்கு அடுத்த ச்லோகத்தில் ஸாதிப்பது,

“நிரந்தரம் நிர்விசதஸ்த்வதீயம்   அஸ்ப்ருஷ்யசிந்தாபதம் ஆபிரூப்யம்

ஸத்யம் சபே வாரணசைலநாத வைகுண்டவாஸேபி நமேபிலாஷஃ. “

உன்னுடைய ஸேவையை விட்டு எனக்கு ஸ்ரீவைகுண்டத்திலும் ஸத்யமாக ஆசையில்லை என்பதால் ஸ்ரீவரதனை விட்டு ஆத்மதாரணம் இல்லை என்பதாகிறது. ஆனபடியால் இவரை விட்டு ஸ்ரீதேவப்பெருமாளுக்கும் ஆத்மதாரணமில்லை என்பதால் ஸ்ரீதேசிகனுடன் சேர்ந்தே உத்ஸவத்தை கண்டருள்கிறார்,

Our Swamy enjoys our Lord in every verse of Him! The Divine Love between our Swamy and our Beloved Lord is a feast for all Bagavathas to enjoy and Cherish! If our Lord is always inseparable from a Devoted Bagavatha, then its upto the knowledge of readers, to understand how much He would love the Divine Company of our Aacharya Simhar who always loves Him as Srimadh Vedantha Desika Nayagi with all Azhwars and Aacharyas residing at His Lotus Heart!

Our Swamy always pleads at our Most merciful Lord to bestow His Divine service upon Him, so that He would leave even Sri Vaikunda patham to be at the disposal of our beloved Lord of Athigiri!. Hence, the Lover and the Loved are always in unison and They enjoy this Vaikasi Brahmosthavam together!

ப்ரதிதினமும் ஸ்வாமிதேசிகன் ஸந்நிதியிலிருந்தே வாஹனங்களில் புறப்பாடு கண்டருள்கிறார். ஸ்வாமி வாஹனத்தில் எழுந்தருள்வதில்லை ஸந்நிதியில் எழுந்தருளியுள்ளார்,ஆயினும்“த்வா ஸுபர்ணா ஸயுஜா ஸகாயா ஸமாநம் வ்ருக்ஷம் பரிஷஸ்வஜாதே. தயோரந்யஃ பிப்பலம் ஸ்வாது அத்தி அநச்நன் அந்யோ அபிசாகசீதி.”நன்பர்களான இரு பக்ஷிகள் ஒரு மரத்தில் வஸித்தும், ஒரு பக்ஷி பலத்தை அனுபவிப்பதும், மற்றது பலத்தை புஜியாமலே  ப்ரகாசிப்பது என்பதாக ஜீவாத்மா பரமாத்மா விஷயத்தில் ஸாதித்த ப்ரகாரம் இங்கு  ஆத்மாவான ஸ்வாமி தேசிகன் வாஹனத்தில் எழுந்தருளாமல், எழுந்தருளும் எம்பெருமானை அனுபவித்தே ப்ரகாசிக்கிறார்.

Every day, our beloved Lord starts His Divine-procession from the Sannidhi of our Aacharya Simhar! He graces Him completely with His presence and starts for witnessing the celebrations of His Bagavathas! As and how, the Love gets shared among the common birds in the Forest, Here the Lord who has our Swamy as His Athman adorns various Vahanas in Various Thirukolams and our Swamy enjoys them to the maximum of its pleasure!

முதல் திருநாளன்று காலை ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியிலிருந்தே த்வஜாரோஹணம் நடைபெறுகிறது, கடைசி தினம் ஸேவார்திகளுக்கு விடை ஸாதிப்பதும் ஸ்ரீஸ்வாமி ஸந்நிதியிலிருந்தே ஆகும்.

The Dwajarohanam ceremony of hoisting the Divine Flag starts from our Swamy’s Sannidhi and on the Last day of the most celebrated ‘Vaikasi Uthsavam’ ends with bidding love at our Swamy’s Sannidhi!

வேதபாராயணம் உபக்ரமிப்பதும் முடிவதும் ஸ்வாமி ஸந்நிதியிலேயே ஆகும்.

Ubhaya Vedantha Parayanas or Chanting of the Divine Verses starts and ends at our Swamy Sannidhi!

ப்ரதானமான கருடோத்ஸவம், நாச்சியார் திருக்கோலம், மற்றும் புண்யகோடிவிமான உத்ஸவங்களில் தான் ஸாத்தியுகந்த பெரிய மாலைகளை அஸாதாரணமாக ஸ்ரீதூப்புலில் ஸ்வாமி தேசிகனுக்கு அனுக்ரஹிக்கிறார்.

On all those very noted Festive Occasions of Garuda Vahana, Nachiyar Thirukolam and Punyakodi Vimana Seva, Swamy adorns the divine Garlands to His counter-half, Srimadh Vedantha Desika Nayagi at Sri Thooppul Temple!

உத்ஸவத்தில் எட்டாம் திருநாள் வேடுபறியில் திருமொழி துடக்கத்துக்காக கலியன் எம்பெருமானுடன் எழுந்தருள்கிறார். கலியனுரை குடிகொண்ட கருத்துடையோனான ஸ்வாமி தேசிகன் ஒன்பதாம் திருநாள் இரவு திருமொழி ஸேவாகாலத்தில் அன்வயிக்கிறார். இவர் எழுந்தருளியிருக்கும் பக்கத்தில் அருளிச்செயல் கோஷ்டீ நடைபெறும்.மற்றபடி எந்த ஆழ்வாராசார்யர்களும் உத்ஸவத்தில் எம்பெருமானுடன் அன்வயிப்பதில்லை.அன்று எம்பெருமானுடன் ஸ்வாமிக்கும் விசேஷ தளிகைகள் நிவேதனம் செய்யப்படுகிறது.

On the Eighth and Ninth day of the Festival, Sri Kaliyan joins Lord for special goshti and our Swamy ends the anubhavam of Sri Parakala Nayagi as Srimadh Vedantha Desika Nayagi on the Ninth day night during special Sevakalam! Only at the side of His divine presence, the ‘Ubhaya-Vedantha’ chanting ends and Swamy enjoys all the special feast offerings to our beloved Lord, along with Him, with all Azhwars and Aacharyas residing at His Lotus Heart!

உத்ஸவம் என்பது விசேஷமாக அலங்காரம் செய்து திருவீதி அலங்கரிப்பது, உபயவேதபாராயணத்தை அனுபவிப்பது, விசேஷதளிகைகளை நிவேதனம் செய்வது, வானவேடிக்கை முதலியன இவை அனைத்தும் வைசாகோத்ஸவத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு உண்டு.

So, by this our Swamy enjoys all the major parts of the Celebrations, specially a celebration which happens for the pleasure of our Swamy enjoying our Lord’s Divine Beauty! Swamy enjoys all the special Alankaras, listening to the ‘Ubhaya-Vedanthas’ special feast-offerings, crackery presentations as the one who always resides at the Lotus Heart of our Beloved Lord!

“பல்லாண்டே பல்லாண்டும் பாடுவோமே” என ஸ்ரீவைகுண்டத்திலும் பல்லாண்டு பாடுகிறார்கள் என ஸாதித்து அருளிச்செயலுக்கு ஏற்றம் கொடுத்தவர் ஸ்வாமி தேசிகனே, முன்பு கூறினபடி ஸ்வாமி க்ஞாநியாய் ஸ்ரீதேவப்பெருமாளுக்கு ஆத்மாவானபடியால் தேவப்பெருமாளை உத்தேசித்து செய்யும் அருளிச்செயல் கைங்கர்யம் ஸ்வாமி தேசிகனுக்கே சேரும் என்பதாம்.ராஜவீதியில் முடிவுபெற்ற பாகத்தை மீண்டும் ஸ்வாமி தேசிகன் ஸந்நிதியில் ஸேவித்து சாத்துமறை செய்கிறார்கள்.

Swamy is known for His Love for Sri Azhwar Sri Sookthis! Sri Swamy praises that, even at ‘Paramapadham’ all enjoy the sweetness of ‘Thirupallandu’ the divine composition of Swamy Sri Periyazhwar!

 As our Swamy throughout His life enjoyed the majesty and divine beauty of Sri Azhwar Sri Sookthis and was showing His complete attention in the propagation and celebration of the values and joy as propounded by Sri Azhwars and Swamy Sri Emberumanar, all the ‘Divya Prabandha’ adhyapakam submitted at the Lotus Feet of our Beloved Lord gets offered only to His ‘Srimadh Vedantha Desika Nayagi’! So, as this tradition goes, all the Sathumurais of the Divine 4000 as chanted across the Raaja-Veedhi of Kanchipuram happen only at our Swamy Sannidhi!

இந்த க்ரமத்தில் காலவேளைகளில் திருவந்தாதிகளின் சாத்துமறை, இரவு காலங்கங்களில் பெரியாழ்வார் திருமொழி, நாச்சியார் திருமொழி சாத்துமறை ஸ்ரீதேசிகன் ஸந்நிதியில் நடைபெறுகிறது.விசாகத்தன்று காலை வ்யுத்க்ரமமாகவும்  திருவிருத்தம் சாத்துமறை  நடைபெறும்,காரணம் ஸ்வாமி தேசிகனை “கலிவைரி சடாரிவசோரஸிகர்” என ஸ்ரீஸ்வாமியின் ப்ரசிஷ்யரான ப்ரதிவாதிபயங்கரம் அண்ணன், சடாரியின்,கலியனின் ஸ்ரீஸூக்திகளில் மிக்க ஆதரம் கொண்டவர் என அனுவிப்பதால், ஒன்பதாம் திருநாள் இரவு ஸ்ரீதூப்புலில் திருமொழி ஸேவாகாலத்தில் அன்வயித்தபடியால் கலியனின் ஸ்ரீஸூக்திகளில் அன்வயித்தபடி நம்மாழ்வார் ஸ்ரீஸூக்தியில் அன்வயம் விடுபடாமலிருக்க இங்கு திருவிருத்தம் சாத்துமறையை செய்கிறார்கள்.

So all the verses submitted in the morning Thiruvandhadhis in particular, the Thirumozhis in the night happen at Sri Swamy Sannidhi! As enjoyed by Sri Prathivaathi Bayankaram anna upon His Master-Aacharya Swamy Srimadh Desikan, our Swamy is the embodiment of the verses of both Sri Parakala-Sri Parangusa Nayakis! The tradition of celebrating Thiruvirutham at Swamy sannidhi on the morning of the birth star of Sri Azhwar on ‘Vaikasi-Visaka’ day signifies this relation and this sweetness ends with Swamy enjoying Sri Parakala’s Sri Sookthis at Sri Thooppul temple on the ninth day night!

ஆக ஸ்வாமி தேசிகனுக்கு புரட்டாசிமாதம் நடைபெறும் அவதார உத்ஸவம் தக்ஷிணாயன உத்ஸவம், வைசாகோத்ஸவம் உத்தராயண உத்ஸவம், இதில் உபயவேதபாரயணம், எம்பெருமானின் மாலை, பரிவட்டம்  ப்ரஸாதம் எல்லாம் ஸ்வாமிக்கு கிடைப்பதால் இந்த வைசாகோத்ஸவம் ஸ்வாமி தேசிகனின் உத்ஸவமாகும் என்பதை தத்வக்ஞானிகள் அறிவார்கள். இதை அறியாமல், கேவலம் ஸ்ரீதேவப்பெருமாளின் உத்ஸவமாக எண்ணுபவர்களை விட, ஸ்வாமி தேசிகனிடத்தில் பக்தியால் ஸ்வாமியின் உத்ஸவமாக நினைப்பவர்கள் விஷயத்தில் ஸ்ரீதேவப்பெருமாளுக்கும் ப்ரீதி அதிகமாகும், “மம மத்பக்த பக்தேஷு ப்ரீதிரப்யதிகா பவேத்” என்பதால்.  நாம் தேசிகப்ரியரானால் அதடியாக பகவத்ப்ரியராகலாம்.அதடியாக ஸ்ரீவைகுண்டத்தில் அந்தமிலாப்பேரின்பம் அடைவது திண்ணம்.மாறாக ஸ்ரீஸ்வாமியின் ப்ரசிஷ்யரான ப்ரதிவாதிபயங்கரம் அண்ணன், “குரௌ வாதிஹம்ஸாம்புதாசார்ய சிஷ்யே ஜநா பக்திஹீநாஃ—— குதோ முக்திவார்தா ஹி தாத்ருக்விதாநாம்” என ஸாதித்தபடி ஸ்ரீஸ்வாமி தேசிகனிடத்தில் த்வேஷம் கொண்டால் அந்தமிலாப்பேரின்பத்தை இழப்பது திண்ணம்.

As rightly explained, the Uthsavam which happens for Swamy on His Day of Incarnation, in the Tamil month of Purattasi is His Dakshinayana Uthsavam and this Uthsavam celebrated in Vaikasi is His Utharayana Uthsavam! In both these Festivals, all the respects, honors and joy reach our Swamy from our most beloved Lord of Athigiri! Our Lord regards those Bagavathas, dearer to His Lotus Hear, who celebrates His Vaibhavams along with the Vaibhavams of His Divine-Love!

தக்ஷிணாயன உத்ஸவத்தில்  ஸ்வாமி தேசிகன் அத்திகிரிக்கு எழுந்தருள்வார், உத்தராயண உத்ஸவத்தில் நம்மத்திகிரித்திருமால் ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருள்வார்.தக்ஷிணாயனத்தில் அபிஷேகமண்டபத்தில் பிரியாவிடை, உத்தராயணத்தில் ஸ்ரீதூப்புலில் பிரியாவிடை.தக்ஷணாயனத்தில் ஸ்வாமிக்குகோயிலில் தர்சனதாம்பூலம், உத்தராயணத்தில் ஸ்ரீதூப்புலில் பெருமாளுக்கு தர்சனதாம்பூலம்.

ஸ்ரீதேசிகனுக்கு வரதன் ஆத்மா,ஸ்ரீவரதனுக்கு ஸ்ரீதேசிகன் ஆத்மா, இதுதான் இவ்விருவருக்குமுள்ள அப்ருதக்ஸித்தஸம்பந்தம்.இது தான் நமது ஸம்ப்ரதாயம்.

வாழி  அருளாளர்— வாழி எதிராசன் வாசகத்தோர். வாழி—- அன்பு

In Dakshnayana Uthsavam Swamy arrives at Athigiri and at Utharayana Uthsavam the Most-merciful Lord arrives at Sri Thooppul! In the former ‘bidding-love’ happens at Abisheka Mandap and during latter it happens at Sri Thooppul! In the former Swamy receives the associated respects at Athigiri and in the latter our beloved Lord receives them at Sri Thooppul! Swamy resides at the Lotus Heart of our beloved Lord and He resides with all Azhwars and Aacharyas in the Lotus Heart of our Swamy! This is our Tradition and May this live long!

ஸ்வாமி தேசிகன் அநேகம் ப்ரபந்தகளை ஸாதித்துள்ளார், அதில் ஒன்றாகும் திருச்சின்னமாலை,திருச்சின்னமென்பது பெருமாள் புறப்பாட்டின் முன்பாக ஒலிக்கப்படும் புறப்பாட்டை குறிக்கும் ஓர் கருவியாகும், அநேக விசேஷவாத்யங்கள் இருக்கச்செய்தேயும் திருச்சின்னம் ஸம்பந்தமாக  திருச்சின்னமாலை என ஸாதிக்க ஓர் காரணம் புலப்படுகிறது,

Our Swamy has blessed us with thousands of Granthas! Among them ‘Thiruchinnamaalai’ composed on the Tamil Musical Instrument announcing the arrival of our Beloved Lord holds a very special position! In ‘Paadhuka Sahashram’ in 32nd verse, our Swamy praises that, the first blessed melody, which could be heard upon our Lord’s transcend is the music of His Divine-Padhukas (Swamy Sri Nammazhwar), our Lord of Athigiri is specially known as ‘Sri Pranadharthi Hara’ ‘one who destroys all odds in a Bagavatha’ as praised by Swamy Sri Thirukachchi Nambigal and Swamy Sri Sruthaprakaashika Bhattar!

So, as the first music of His ascend is from His ‘Divine-Lotus Foot Rests’, the ‘Thiruchinna’ musical instrument reminds our Swamy about the wonderful composition of ‘Thiruvaimozhi’ of Swamy Sri Nammazhwar, in which our Swamy was immersed in His entire life!

Hence He enjoys this lovable music in almost all of His Granthams and made a very special note of it through His beautiful Composition!

பாதுகாஸஹஸ்ரம் நாதபத்ததி  32 வது ச்லோகத்தில் “விபோஃ ப்ரணதார்த்திஹந்துஃ,” என்றுள்ளது, ப்ரணதார்த்திஹர சப்தம் பொதுவாக எல்லா பெருமாளையும் குறிக்கும் ஆயினும் வரதனிடத்தில்  ப்ரஸித்தம்,( நமஸ்தே ஹஸ்திசைலேச ஸ்ரீமந் அம்புஜலோசந.சரணம் த்வாம்  ப்ரபந்நோஸ்மி ப்ரணதார்திஹராச்யுத,  திருக்கச்சிநம்பி, வரதம் த்விரதாத்ரீசம் ஸ்ரீநிதிம் கருணாநிதிம்,சரண்யம் சரணம் யாமி ப்ரணதார்திஹரம் ஹரிம், ச்ருதப்ரகாசிகா பட்டர்,) .”ப்ரஸ்தான மங்களவிதௌ  ப்ரதமோத்யதானி”, அவருடய  புறப்பாடு காலத்தில் முதலில் உண்டான பாதுகையின் நாதமே திருச்சின்ன நாதத்தை ஆரம்பித்தது என்று திருச்சின்னஓசை பாதுகாநாதஜனிதமானபடியால் ஏற்றமானபடி, ஆகையால்தான் திருச்சின்னமாலை என ஸாதித்தார் எனலாம்,திருச்சின்னமாலை ஸ்ரீதேவப்பெருமாள் விஷயமாகும், அதை ஸூசிப்பிக்கும் இந்த ச்லோகத்தில் ப்ரணதார்திஹந்துஃ என ப்ரயோகிப்பதால் ப்ரணதார்திஹரன் வரதனே என நிச்சயமாக கூறலாம்.

அதடியாகவே புறப்பாடுகள்தோறும் திருச்சின்னம் பரிமாறி பெருமாள் புறப்பாடான பிறகு  ஸ்வாமிதேசிகன் ஸன்னிதிக்கு எழுந்தருள, ஹாரத்தி ஆகி உபஹாரம் ஸமர்பித்த உடன்  திருச்சின்னம் பரிமாற ஸ்வாமியை அனுக்ரஹிக்க  ஸ்ரீசடாரியை எழுந்தருளச்செய்வார்கள். திருச்சின்னம் பரிமாறுவது என்பது சில  விசேஷ,ஸமயத்தில் மட்டுமேயாகும்,  அதில் ஸ்வாமிக்கு மரியாதை செய்யும் காலமும் ஒன்றாகும்.

Hence upon the arrival of our beloved Lord always as He visits, our Swamy Sannidhi, the Thiruchinnam is played at the highest of its pitch and once again it blows to mark the Divine-Love shown through the respects which are offered in the form of ‘Satari’ (Swamy Sri Nammazhwar) to our Aacharya Simhar every time when the Lord visits Him!

பெருமாள் த்வஜஸ்தம்பம்வரை வெளிபுறப்பாடு கண்டருளினால் ஸ்வாமிக்கு ஸ்ரீசடாரி அனுக்ரஹம் நிச்சயம், அதுபோல் ஆண்டாள் ஸந்நிதிவரையில் எழுந்தருளினால் ஆண்டாளுடன் மாலை மாற்றுதல் நிச்சயம். (Swamy is out side keeper, andal is inside keeper,) இவையிரண்டும் தவறாமல் நடைபெறுகிறது,

வரதனுக்கு இவர்களிடம் விசேஷ பஹுமானமாநபடியாலேயே இவ்விருவர் மாத்ரம் எம்பெருமான் அலங்கரிக்கும் திருப்பல்லக்கையும் அலங்கரிக்கிறார்கள் என்பது விசேஷமாகும்.

Our Lord’s palanquin is adorned only by Thayar Sri Andal and Swamy Sri Desikan in their Divya Mangala Swaroopam across the celebrations of Thiruvaadipooram, Bhogi and Purattasi Thiruvonam! Every time when our Lord crosses the Temple-Flag Staff, He sends His love to Swamy in the form of ‘Honors’ and upon His return back to Athigiri He receives Love from Thayar Sri Andal by exchaging Garlands!

 As our Lord has our Thayar Sri Andal and our Swamy in a very special place at His Lotus Heart, both of Them stand next to Him at every occasions where our Swamy sits at the Lotus Feet of the Divine Couple and represents Their Divine Love in a transcendental form!

This article is written by Sri ‘U.Ve’ ‘Perumal Koil’ ‘Koti Kannikadhana’ Dr.Sadagopa Thathacharyar Swamy and English translation by stvd. 

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here