விக்னங்களை விலக்கியருளும் விஷ்வக்ஸேநர் – 1

0
1,666 views

Article written by Sri Poigaiadiyan Swami

யஸ்ய த்ரவித வக்த்ராத்யா : பாரிஷத்யா: பரஸ்ததம் |
விக்நம் நிக்நந்தி ஸததம் விஷ்வக்ஸேநம் தமாச்ரயே ||

கஜானன், ஜயத்ஸேநன், போன்ற ஆயிரக்கணக்கான பரிஜனங்கள் எவருடைய ஆணைக்குக் கீழ்படிந்து நடக்கிறார்களோ, அப்படிப்பட்ட ஸ்ரீவிஷ்வக்ஸேநரை சகலவிதமான விக்னங்களும் ( தடைகளும் ) விலகு-வதன் பொருட்டு வணங்குகின்றேன் என்று பொருள்படும், இந்த ஸ்லோகம் ஸ்ரீவிஷ்ணுஸஹஸ்ரநாமத்தில் உள்ளது..

விஷ்ணுஸஹஸ்ரநாமத்தின் தொடக்க ஸ்லோகமான “சுக்லாம்பரதரம் “ என்ற ஸ்லோகம் ஸ்ரீஹயக்ரீவரைப் பற்றியது என்று கூறும் ஸ்ரீவைஷ்ண-வர்கள், அதற்கு அடுத்த ஸ்லோகமான மஹாவிஷ்ணுவின் சேனைத்-தலைவரான விஷ்வக்ஸேநரைப்பற்றிக்கூறும் மேற்படி ஸ்லோகத்தைக் கூறிவிட்டே ஸஹஸ்ரநாமத்தைத் தொடங்குவர்.

சேனைத்தலைவர், படைத்தலைவர் என்பதினால் இவருக்கு, சேனைமுதலி என்ற பெயரும் உண்டு. மரியாதை நிமித்தம் காரணமாக சேனை முதலி-யார் என்றும் அழைப்பர்.

ஒரு செயலைத் தொடங்குமுன்னர், சைவர்கள் எப்படி விநாயகக்கடவுளை வணங்கிவிட்டு ஆரம்பிப்பார்களோ அது போன்றே ஸ்ரீவைஷ்ணவர்கள், இந்த விஷ்வக்ஸேநரை வணங்கிவிட்டே எந்த செயலையும் தொடங்குவர். இவரைப்பற்றி ஸ்ரீஆளவந்தார் தம்முடைய “ ஸ்தோத்ர ரத்னம் “ என்ற ஸ்தோத்ரத்தில் என்ன சொல்கிறார் என்று பார்ப்போம்.

த்வதீய புக்தோஜ்ஜித சேஷ போஜிதா
த்வயா நிஸ்ருஷ்டாத்ம பரேண யத்யா |
ப்ரியேண ஸேநாபதி நா ந்யவேதிதத்
ததா நுஜானம் தமுதார வீக்ஷணை : ||

இதன் பொருள் யாதனில், “நீர் (எம்பெரு-மான்) கண்டருளிய ப்ரசாதத்தின் மிகுதியைப் புசிப்பவரும், நித்ய, லீலா விபூதிகளைக் காப்பவரும், தமக்கு விதிக்கப்பட்ட பொறுப்புகளை விருப்-பத்துடன் செய்து முடிக்க வல்லவரும், எம்பெருமானின் நண்பருமான சேநைமுதலியார், நாம் நம் இஷ்டப்படி விண்ணப்பிக்கும் அனைத்துக்-காரியங்களையும், உதாரணகுணமும், நன்மையும், கருணையும் நிறைந்த பார்வையால் மெச்சி, அதற்கு அனுமதியை வழங்கும் அறிஞனே !“ என்பதாகும். ஆக இந்த விஷ்வக்ஸேநரே எம்பெருமானின் ப்ரதான மந்திரி போன்று செயல்படுகிறார் என்பது தெளிவாகின்றது.

இவரின் வேலைகளை விளக்கவந்த ஸ்ரீவேதாந்த தேசிகர், தம் தயாஸத-கத்தில் கீழ்கண்ட ஸ்லோகத்தில் விளக்குகின்றார்.

“அசேஷ விக்நசமநம் அநீகேஸ்வரமாச்ரயே |
ஸ்ரீமத் கருணாம் போதௌ சிக்ஷாஸ்ரோத இவோத்திதம் ||“

இந்த ஸ்லோகத்தின் பொருளென்ன ? மேலே படியுங்கள்

இதன் பொருள், “ இவரது சேனைகள் பகவானையே நம்பி அவரிடத்தில் பக்தி செலுத்துபவர்களுக்கு, ஏற்படும் விக்னங்களை எல்லாம் போக்குவதற்கே ஏற்பட்டவர்கள். எல்லா வைதீகக் காரி-யங்களையும் தொடங்குமுன்னர், வைஷ்ணவர்கள் விஷ்வக்ஸேநரை வண-ங்கிவிட்டேத் தொடங்குவர். ஸ்ரீநிவாஸனுடைய தயையென்ற தடாகத்திலிருந்து அநேக கிளைகள் வெளியில் பெருக்கெடுத்து ஓடுகின்றன. அதில் தயை என்ற கிளையும் பக்தர்களின் சங்கடங்களைப் போத்குவதற்-காக ஓடுகின்றது. இருப்பினும் இப்படி அநேகக் கிளைகளில், ஞானோப-தேஸம் என்பதான சிக்ஷையை ( செயலை )சேனைமுதலி என்ற கிளையே செய்கின்றது“. இங்கு, சிக்ஷை என்ற சொல் உபதேஸத்தை சொல்வது மட்டுமின்றி, பக்தன் செய்யும் தவறுதல்களை உரிமையுடன் தண்டிப்-பதையும் செய்வது என்று பொருள். ( ஒரு குழந்தை தவறு செய்தால் அதன் தாய் உரிமை யுடன் கண்டிப்பதைப்போல ). இல்லையென்றால் தவறு செய்வதே அவர்கள் சுபாவமாகிவிடும் என்ற அவர்கள்மீதுள்ள அளவுகடந்த கருணையே காரணம் என்று கூறுகிறார் ஸ்வாமி தேசிகன்.

to be contd…!

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here