Sri Thelliya Singar Yaanai Vahanam purappadu

0
870 views

On 23rd June 2013 – sixth day of Brahmothsaam and in the evening Sri Parthasarathi had purappadu on ‘Yaanai vahanam’. When Kings ruled, there was the special battalion of Elephants… its thick hide would protect from injury ~ the high riding portion gave the rider a good view to attack…

EV_2

திருவல்லிக்கேணியில் சிறப்புற நடைபெறும் ப்ரம்மோத்சவத்தில் ஆறாம் நாள் – 23 ஜூன் 2013 – இரவு ஸ்ரீபார்த்தசாரதி கம்பீரமான யானை வாகனத்தில் எழுந்து அருளினார். திருவல்லிக்கேணி யானை வாஹனம் அமர்ந்த நிலையில், தங்க பூச்சுடன் ஜொலிக்கும். மிக கம்பீரமானது. வாகனத்தின் மீது வெண்பட்டுடுத்தி, பெருமாள் பின்பே பட்டரும் அமர்வது தனி சிறப்பு. யானை வாயில் வாழை மரங்கள் வைத்து, நிஜமான களிறு ஓடி வருவதைப் போல் இருக்கும். யானை வாகன புறப்பாட்டில் ‘ஏசல்”, “ஒய்யாளி” என்று அழைக்கப்படும் சிறப்பு உண்டு யானை பார்க்க பார்க்க கம்பீரம். ஆண் யானைக்கு களிறு என்று பெயர். பெண் யானைக்கு பிடி என்று பெயர். பண்டைத்தமிழ் அரசுகளில் யானைப் படை முதன்மையான பங்கு வகித்தது. படை யானைகளுக்குப் பெயரும் பட்டங்களும் வழங்கப்பட்டன. பெரும்பாலான தமிழகக் கோவில்களில் யானைகளின் சிற்பங்கள் செதுக்கப்பட்டிருக்கும். பண்டைய காலத்தில் உருவான ஒவ்வொரு கலைப்படைப்பிலும் யானைகளைப் பார்க்கலாம். சிற்பங்களிலும் சரி, இலக்கியங்களிலும் சரி யானைகளுக்குத் தரப்பட்டுள்ள இடம் தனித்துவச் சிறப்புடைய ஒன்று. யானை தந்தத்திற்கு கோடு, மருப்பு போன்ற பெயர்கள் வழங்கப்பட்டன. யானை மீது அமர்வது உயர்வானதாக கருதப்பட்டது.

குலசேகரர் அழகிய திருமலையிலே ஏதாயினும் இருக்கும்படியான பாக்கியம் கிடைத்தால் யானையின் மீது
அமர்வது கூட வேண்டாம் என்கிறார்.

கம்பமத யானை கழுத்தகத்தின் மேலிருந்து*
இன்பமரும் செல்வமும் இவ்வரசும் யான்வேண்டேன்*
எம்பெருமானீசன் எழில்வேங்கடமலை மேல்*
தம்பகமாய் நிற்கும் தவமுடையேனாவேனே**

தன்னைக் பார்க்கின்றவர்க்கு அச்சத்தால் நடுக்கத்தை விளைக்கின்ற மதங்கொண்ட யானையினது கழுத்தின் மீது அமரும் சுகங்களையும், ஐசுவர்யத்தையும் அரசாட்சியையும் விரும்ப மாட்டேன்: எமது தலைவனும் எம்பெருமானுமான ஸ்ரீமன் நாராயணன் வாழும் அழகிய திருமலையிலே புதராய் நிற்கும்படியான பாக்கியத்தை உடையவனாகக்கடவேன் ~ என்பது குலசேகரர் வாக்கு !!

EV_6

EV_1

EV_3

EV_4

EV_5

Photo and News Courtesy: Sri Sampathkumar Srinivasan

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here