Neeladevi Part 1

2
2,726 views

This article on Neela Devi (நீளாதேவி) is written by Poigaiadiyan swami…

ஸ்ரீமந் நாராயணன் பரமபதத்தில் ஸ்ரீதேவி பூதேவி, நீளாதேவி சகிதராய் திருமாமணி மண்டபத்தில் ஆதிசேஷ பர்யங்கத்தில் (மெத்தையில்) எழுந்தருளி இந்த உலகை ரட்சித்துக் கொண்டிருக்-கிறார் என்று கேட்டிருக்கிறோம். புத்தகங்களில் படித்தும் இருக்கிறோம்.

ஸ்ரீதேவியை நம் எல்லோருக்கும் தெரியும். “பொருளில்லார்க்கு இவ்வுலகம் இல்லை” என்று ஆன பின் நாம் அந்தத் திருமகளின் தயவைத் தானே நாடியாக வேண்டும்? ஆகவே இந்துக்கள் அனைவரும் இந்த லக்ஷ்மியை நன்கு அறிவர்.

அடுத்த தாக பூதேவியையும் நாம் எல்லாரும் அறிவோம். அவளே பூமித்தாய். நம்மை எல்லாம் தாங்கிக் கொண்டிருப்பவள்.

ஒரு சமயம் இவள் கடலுக்கடியில் அரக்கனுக்குப் பயந்து ஒளிந்திருந்தபோது எம்பெருமான் வராக அவதாரம் எடுத்து இவளைக் காப்பாற்றியிருக்கிறார்.

இந்தக் கதைகளையெல்லாம் கூட நாம் படித்திருக்கின்றோம்.

அப்படி என்றால் அந்த நீளாதேவி யார்?

அவளும் எம்பெருமானின் பத்தினிகளில் ஒருவர் என்று மேலெழுந்த வாரியாகக் கூறி விடலாம். ஆனால் உண்மையில் அவள் யார்? அவள் புகழென்ன? அவள் எப்படி நமக்கு அருள் புரிகிறாள்?என்பது பலருக்குத் தெரியாது.

sri-neeladevi-

அந்த நீளாதேவியைப் பற்றி அறிந்து கொள்ள வேண்டுமானால் கீழ்க்காணும் புராணக்கதையைப் படிக்க வேண்டும்.

ஒரு சமயம் எம்பெருமான் திருப்பாற்கடலில் யோக நித்திரையில் இருந்தபோது ஸ்ரீதேவி பூதேவி நீளாதேவிகளுக்குள் விவாதம் எழுந்தது. மூவரில் உயர்ந்தவர் யார் என்று விவாதம் கடுமையாக நடந்தது.

ஸ்ரீதேவியைச் சார்ந்தவர்கள். “லக்ஷ்மியே சிறந்தவள், அவளே இந்த உலகத்திலுள்ள செல்வங்களுக்கெல்லாம் தலைவி, அவளே நம் எல்லோருக்கும் அம்மா, பெருமாளுக்கு மிக்க விருப்பமானவள் அவளே. அவளுடன் இணைந்திருப்பதாலேயே பெருமாளுக்குப் பெருமை. அதனாலேயே பெருமாளை ஸ்ரீபதி, ஸ்ரீநிவாஸன், ஸ்ரீநிகேதன் என்றெல்லாம் அழைக்கிறோம்.“எவன் ஒருவன் மீது இவள் கடாக்ஷம் படுகிறதோ அவன் அன்றே பெரும் செல்வன் ஆகிறான். வேதங்களும் இவளையே போற்றிப் புகழ்-கின்றன.” என்றெல்லாம் ஸ்ரீதேவியைப் பற்றி மிகப் பெருமையாகப் பேசினார்கள்.

இதையெல்லாம் கேட்டுக்கொண்டிருந்த பூதேவியைச் சேர்ந்தவர்கள் “எங்கள் தாயே இவர்கள் மூவரில் சிறந்தவர். இந்த உலகத்திற்கு ஆதாரமானவளே இவள்தான், அவளே மிகப் பொறுமையுடன் இந்த உலகம் முழுவதையும் தாங்கிக் கொண்டிருக்கிறாள். விஷ்ணுவிற்கு அவளிடமே அன்பு அதிகம்.

இந்த ‘உலகமே நமக்கு உறைவிடம், உணவு, துணிமணிகளை அளிக்கிறது. அவன் அருள் இல்லையென்றால் மக்கள் எப்படி உயிர் வாழ முடியும்? பெருமான் எங்கள் தலை-வியையே பிரளயத்தி லிருந்து காப்பாற்றினார். மேலும் அவர் வாமன அவதாரம் எடுத்தபோது மாவலி மன்னரிடம் மூன்றடி நிலத்தைத்தான் கேட்டாரே தவிர மூன்று கழஞ்சி பொன் நகை-களைக் கேட்கவில்லை. ‘தாரணி’ ‘சர்வம் சத்ரா’ என்றெல்லாம் அழைக்கப்படும் எங்கள் தலை-வியே மூவருள் சிறந்தவள்” என்று கூறினர்.

அதுவரை பொறுமையாக எல்லாவற்றையும் கேட்டுக் கொண்டிருந்த நீளாதேவியை சேர்ந்தவர்கள், “பேசி முடித்து விட்டீர்களா? எங்கள் தலைவியின் பெருமையை நாங்கள் ஒன்றும் தனியாகக் கூற வேண்டிய அவசியமில்லை. உங்கள் இரண்டு தலைவிகளே நன்கறிவர். வேதங்களும் அவள் ‘ரச’ ரூபமானவள் என்று அவளைப் புகழ்கின்றன. வேதங்கள் பெருமானை‘ரஸோவைசஹா’ அதாவது நீருக்கு ஆதாரமாக இருப்பவன் என்றே புகழ்கின்றன.

அவள் தண்ணீராகக் காணப்படுகிறாள். அவளே தண்ணீருக்கு அதிஷ் டான தேவதை. எம்பெருமான் இவளிடமே உலகைப் படைக்கும் பொறுப்பை ஒப்படைத்து இருக்கிறார். அதாவது நீரிலிருந்துதான் உலகம் (பூமி) தோன்றியது. அதன் பிறகு தானே செல்வத்திற்கு அங்கே வேலை?ஆக எங்கள் தலைவியின்றி பூதேவியும் ஸ்ரீதேவி-யும் செயல்பட முடியாதே!

தண்ணீரை ‘நாரம்’ என்பர். பெருமாள் எங்கள் நீளாதேவியின் மடியில்தான் சயனித்திருக்கிறார். அதாவது நீரின் மீது சயனித்திருப்பதால்தான் அவருக்கு “நாராயணன்” என்ற பெயரே வந்தது.“நீளாசூக்தம்” எங்கள் தலைவியின் பெருமையையும் புகழையும் அழகாகக் கூறுகிறது” எனக் கூறி வாதிட்டனர்.

இப்படி அவர்கள் நடத்திய பட்டிமன்றத்தின் முடிவு என்ன என்பதைப் பற்றி நமக்குக் கவலையில்லை. நீளாதேவி யார்? என்ற நம் கேள்விக்கு விடை கிடைத்து விட்டதல்லவா? அது போதுமே!

அந்த நீளாதேவிதான் “சமுத்ரத்தாய்”, நமக்கு நீரைப் பொழிபவள். அவள் இல்லையேல் நமக்கு மழை இல்லை. மழையிருந்தால்தான் பயிர்கள் விளையும், பூமி செழிக்கும், உயிர்கள் வாழ முடியும்.

ஆகவே இந்த நீளாதேவியைப் பற்றிய ‘நீளாஸூக்தத்தை” நாம் தினமும் சொல்லி வந்தாலே போதும், நமக்குத் தேவையான மழை பெய்யும் என்பது நிச்சயம்.

ஸ்ரீதேவி இந்த மண்ணில் அவதாரம் செய்திருக்கிறாள். பூதேவியும் அவதாரம் செய்திருக்கிறாள். ஆனால் நீளாதேவி அவதாரம் செய்தி-ருக்கிறாளா?  என்றால் விடை ‘ஆம்’ என்பதே.

அவள் யாராக அவதாரம் செய்திருக்கிறாள் என்றுதானே கேட்கிறீர்கள்?

எம்பெருமான் ஸ்ரீமந்நாராயணன் பல அவதாரங்கள் எடுத்திருந்தாலும் இராமாவதாரத்தையும், க்ருஷ்ணாவதாரத்தையும் தான் நாம் புகழ்வோம். அதிலும் க்ருஷ்ணாவதாரத்துக்கே ஏற்றம் அதிகம்.

கண்ணன் குழந்தையாக இருந்தபோது செய்த லீலைகளோ, பூதனை போன்ற அரக்கர்களை வதம் செய்ததோ, கோவர்த்தனகிரியைக் கையில் தாங்கி ஆயர்-களைக் காத்ததோ, சிசுபாலன், கம்சன் போன்ற-வர்களை அழித்ததோ, கீதோபதேசம் செய்ததோ கூட அவனுக்குப் பெருமையைச் சேர்க்கும் விஷயங்களல்ல. க்ருஷ்ணாவதாரத்தின் பெருமையே இந்த மூன்று தேவிகளும் இந்த மண்ணுலகில் அவதரித்து எம்பெருமானை மணந்துகொண்டதுதான் காரணம் எனலாம்.

விதர்ப்ப தேசத்தை ஆண்டு வந்த பீஷ்மகன் என்ற மன்னனுக்கு ருக்மி,  ருக்மகேசன், ருக்மபாஹூ, ருக்மன்,  ருக்மமாலி என்ற ஐந்து பிள்ளைகளும் ருக்மணி என்ற பெண்ணும் உண்டு. அவனைக் காண வரும் பெரியவர்கள் கிருஷ்ணனின் வீர தீர பராக்ரமங்களைப் பற்றிப் புகழ்ந்து கூறும்போது அருகில் இருக்கும் ருக்மணி அவற்றைக் கேட்டு தன்னை அறியாமலேயே கண்ணன் மீது காதல் வயப்-பட்டாள்.

கண்ணனும், ருக்மணியின் அழகு, பண்பு, அறிவு ஆகியவற்றைப் பற்றிக் கேள்வியுற்று அவளை மணந்து கொள்ள விரும்பினான். ருக்மணியின் பெற்றோருக்கு இந்த சம்பந்தத்தில் பூரண சம்மதம்.

ஆனால் அந்தத் திருமணத்திற்கு ஒரு முட்டுக்கட்டையாக அவள் அண்ணன் ருக்மியே இருந்தான். அவன் தனக்கு இதில் சம்மத-மில்லையென்றும் தன் நண்பனான சேதி நாட்டு இளவரசன் சிசுபாலனுக்கே தன் தங்கையை மணம் முடித்து வைக்க வேண்டு-மென்றும் தீவிரமாக இருந்தான்.

ருக்மியின் எண்ணத்தை அவன் தந்தையாலும் தடுத்து நிறுத்த முடியவில்லை. ருக்மி தன் தங்கையின் திருமண ஏற்பாடுகளைத் துரிதமாகச் செய்யத் தொடங்கினான்.

விஷயத்தை அறிந்த ருக்மணி பதறினாள். தன் திருமணச் செய்தியை ஓர் அந்தணன் மூலம் கண்ணனுக்குச் சொல்லி அனுப்பினாள். அதாவது கண்ணன் உடனே வந்து என்னை மணக்கவில்லை- யென்றால் என் உயிரை மாய்த்துக் கொள்வேன் என்று சொல்லி அனுப்பினாள்.

அந்தணன் மூலம் விஷயத்தைக் கேள்வியுற்ற கண்ணன், தேரில் ஏறி திருமண ஏற்பாடுகள் நடந்து கொண்டிருந்த குண்டினபுரத்தை அடைந்தான். குலவழக்கப்படி திருமணத்திற்கு முன்பு அம்பிகையைத் தொழ சேடிகளுடன் வந்த ருக்மணியை தேரில் ஏற்றிக் கொண்டு சென்றான்.

to be cont…!

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. So many thanks for the article.
    Further to add, in my village, Alwarthirunarai also Emperuman Polinthu Nindra Piran,showered His Blessings with 3 Thayyars, Sri Devi, Bhoodevi,and Neela Devi, but in all are in Nindra Thirukkolam

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here