Upastaanam-Prathanai

3
1,452 views

Upastanam

This is a wonderful article written by Dr. P.V. Satakopa Tatacharya Swamy about Upastaanam-Prathanai based on the quotes from Vedas.

உபஸ்தானம்—ப்ரார்த்தனை

(வேதத்தில்  வரும் ஸந்தேஹமும் ஸமாதானமும்.)

அக்னியை உபஸ்தானம் செய்யவேணுமா வேண்டாமா என்ற விசாரம் उपस्थेयोग्नी,,,,,,,,,र्नोपस्थेया,,,,,,,,, 3.விசாரத்தில் ப்லுதம் வரும். தரித்ரனானவன் மநுஷ்யனான ராஜாவினிடத்தில் ப்ரதிதினம் சிறிய உபஹாரத்தை கொடுத்துவிட்டு பூமி,மற்றும் பணம் முதலியவைகளை யாசித்தால் ராஜாவை உபத்ரவிப்பதாகும்.மனுஷ்யனிடத்திலேயே இது உபத்ரவமானால் மிகவும் பெருமையோடு கூடிய தேவர்களிடத்தில்  ப்ரதிதிநம் யாசிக்க யாரும் தகுதியுள்ளவர்களல்ல,இந்த உபஸ்தாநம் என்பது யாசனாரூபமாகும், आयुर्दा अग्ऩेस्यायुर्मे देहि, அக்னியே, நீ ஆயுஸ்ஸை கொடுப்பவனாகிறாய், எனக்கு ஆயுஸ்ஸை கொடு, என்ற மந்த்ரத்தில் யாசகம்  தோன்றுகிறது, ஆனபடியால் அக்னியை உபஸ்தானம் செய்யக்கூடாது तस्मान्नोपस्थेयः என்று பூர்வபக்ஷம்.

अथोखल्वाहुः.அப்படியல்ல என்று வேதார்த்தம் அறிந்தவர்கள் சொன்னார்கள் தன்னுடய விருப்பத்தை பெறவேண்டியே அக்னியை குறித்து யஜமானன் யாகம் செய்கிறான்,லோகத்திலும் ராஜாவின் மனநிலையையறியாமல், ஸமயம் நோக்காமல்  கொடு கொடு என்று கேட்பதே உபத்ரவமாகும்,அதேஸமயம் ப்ரஸம்ஸையாலேயும் விநோதத்தாலேயும் ஸந்தோஷத்தையுண்டுபண்ணி யாசித்தால் அப்பொழுது உத்ஸாஹத்தோடு கூடியவனாய் ராஜா  யாசித்ததைவிட கூடுதலாக கொடுப்பான். அதுபோலே ஆஹிதாக்னியின் மந்த்ரத்தால் உபஸ்தானமாகிற மந்த்ரம், அநேகவிதமாக ப்ரஸம்ஸை செய்து கூறுவதால்  உபத்ரவமாகாது. ஸந்தோஷத்தின்பொருட்டேயாகும், ஆனபடியால் காலை மாலை இரண்டுகாலத்திலும் அக்னியை உபஸ்தானம் செய்யவேணுமென்று வேதம் கூறுகிறது.

 நாம் அனுஷ்டிக்கும் கர்மாக்களின் முடிவில் உபஸ்தாநம் செய்து வருகிறோம்,உதாஹரணமாக  மூன்று காலத்தில் ஸந்த்யாவந்தனத்தின் முடிவில் காயத்ரி உபஸ்தாநம் செய்வது,ஔபாஸநஹோமம் செய்தவுடன்  அக்னி உபஸ்தானம் செய்வது முதலியன,உபஸ்தானம் என்பதை ப்ரார்த்த்னை எனலாம், இந்த க்ரமத்தில்  அக்னி உபஸ்தாந மந்த்ரம்  

अग्ने नय सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान्। युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नम उक्तिं विधेम।

என்பது,இதின் விளக்கமாவது, अग्ने देव-அக்னி தேவனே,सुपथा -சாஸ்த்ரவிருத்தமல்லாத வழியினால் अस्मान्-எங்களை,नय- நடத்தி செல்வாயாக.எதுக்காகவென்றால் राये- பணத்தின் பொருட்டு,உனக்கு ஹவிஸ்ஸைஸம்பாதிக்கத்தகுந்தவர்களாக எங்களை செய்யவேணும், विश्वानि वयुनानि विद्वान्-நீ எலாலாவற்றையும் அறிந்தவன்,जुहुराणम्.வக்ரமான एनः- செய்யவேன்டிய கர்மாவை செய்யாததினால் உண்டான பாபத்தை अस्मत्-என்னிடத்திலிருந்து युयोधि- விலக்கவேணும்.இதுக்காக நான் செய்வது भूयिष्ठां ते नम उक्तिं-உன்னை குறித்து அதிக அளவு நமஸ்காரம் என்ற சொல்லை மாத்ரம்  विधेम-சொல்லக்கடவேன்.

அக்னிதேவனே,  சாஸ்த்ரவிருத்தமல்லாதவழியில் நிறையபணத்தை ஸம்பாதித்து உனக்கு ஹவிஸ்ஸை ஸமர்பிக்கத்தகுந்தவனாக என்னை நடத்திச்செல்லவேணும்,என்னுடய பாபத்தை போக்கவேணும்,இதுக்காக என்னால் வேறு ஏதும் செய்ய இயலாது,நமஸ்காரமும் செய்ய இயலாதவனாய் நமஸ்காரம் என்ற சொல்லை மாத்ரம் சொல்லக்கடவேன். 2,யாகம் முடிந்தவுடன் சொல்லவேண்டிய மந்த்ரம்

यज्ञो बभूव  स आबभूव सप्रजज्ञे स वावृधे। स देवानामधिपतिर्बभूव सो अस्मान् अधिपतीन् करोतु वयं स्याम पतयो रयीणाम्, यज्ञो बभूव  -யஞ்ஞம் முடிந்துவிட்டது

स आबभूव- மீண்டும்  வரட்டும், सप्रजज्ञे -அது  எங்களை சோம்பல் இல்லாதவர்களாய் அறிந்தக்கொண்டது, स वावृधे-அது மீண்டும் அநுஷ்டாநத்தினால் வளரட்டும், स देवानामधिपतिर्बभूव -தேவதைகளுக்கு ரக்ஷகனாகட்டும், सो अस्मान् अधिपतीन् करोतु -அது எங்களையும அனுஷ்டானத்தை ரக்ஷிப்பவர்களாக செய்யட்டும், वयं स्याम पतयो रयीणाम्- நாங்கள் யஞ்ஞபுருஷனின் அனுக்ரஹத்தால் யாகஸாதநமாந பணத்துக்கு அதிபதியாகக்கடவோம்  என்ற மந்த்ரம் தநிகர்களாக வேணுமென்ற ப்ரார்த்தனையை கூறியுள்ளது,யாகம் செய்து முடிந்தவுடன் அதை விஸர்ஜநம் செய்யவேணும்,செய்யாவிடில் யஜமானன் ப்ரதிஷ்டையில்லாதவனாகிறான், यो वै यज्ञं प्रयुज्य न विमु़ञ्चति अप्रतिष्ठानो वै स भवति.விஸர்ஜனம் செய்தவுடன் ப்ரார்த்தனை செய்யாவிடில் யஞ்ஞம் மீண்டும் வராமல் போய்விடும்,पराङ्वाव यज्ञ एति न निवर्तते पुनः, यो वै यज्ञस्यपुनरालम्भं विद्वान् यजते तमभिनिवर्तते  மீண்டும் வரவேண்டுமானால் அதுக்காக செய்யும் ப்ரார்த்தனா மந்த்ரம் இது यज्ञो बभूव स आबभूवेत्याह एष वै यज्ञस्य पुनरालम्भः .இந்த க்ரமத்தில் ஸ்வாமி தேசிகன் புரட்டாசி ச்ரவணத்தன்று வாக்யஞ்ஞமாகிற மங்களாசாஸனத்தை முடித்து,கடைசியாக இம்மந்த்ரம் சொல்கிற க்ரமத்தில் மீண்டும் கைங்கர்யமாகிற யஞ்ஞம் கிடைக்க श्रीरङ्गद्विरदवृषाद्रिपूर्वकेषु स्थानेषु स्थिरविभवा भवत्सपर्या। आकल्पं वरद विधूत वैरिपक्षा भूयस्या भवदऩुक्म्पयैव भूयात्. என்றனுஸந்திப்பது போல் தோன்றுகிறது. இங்கு ஸ்வாமி தேசிகன் செய்யும் ப்ரார்த்தனையை ஆஸ்திகர்கள் கூர்ந்து கவனிக்கவேண்டும். அவர் விரக்தர், அவருக்கு எதிலும் ஆசைகிடையாது. அவர் விரும்புவது ஸ்ரீரங்கம், திருமலை, பெருமாள்கோயில்களில் எம்பெருமானுக்கு நித்யபடிதிருவாராதனம், மற்றும் உத்ஸவாதிரூபமான கைங்கர்யங்கள்,எதிரிகளின் உபத்ரவமில்லாமல் நடைபெற  வேணுமென்பதாகும். கைங்கர்யம் தான் யாகம் என்பது நமது ஸம்ப்ரதாயம்.

பகவதாராதனத்தின்  முடிவில் உபஸ்தான க்ரமத்தில்  சாத்துமறை அமைந்துள்ளது  எனலாம்,இதில் திருப்பாவை அனுஸந்திப்பதும்  அதில்  உனக்கே  நாம்  ஆட்செய்வோம் மற்றினம் காமங்கள் மாற்று  என்பதும் ப்ரார்த்தனையேயாகும்.

நம்முடய ஸம்ப்ரதாயத்தில் யஜ- தேவபூஜாயாம்  என்று தேவதாராதனம்தான் யாகம், ஆனபடியால் அதுக்குண்டான பணத்தை ஸம்பாதித்து நாம் தநிகர்களாகவேணுமென ப்ரார்த்திக்கலாம்.அதடியாக கைங்கர்யகநிகர்களாகவும் ஆகலாம்.இது காம்யமானாலும் நிஷித்தகாம்யமல்ல, ஆனபடியாலேயே ஸ்வாமி தேசிகன் நிஷித்தகாம்யரஹிதம் குரு மாம்  நித்யகிங்கரம் என்றனுக்ரஹித்தார் எனலாம்.

தனக்காகமாத்ரம் பணம் ப்ரார்த்திப்பது  யே பசந்த்யாத்மகாரணாத் என்கிற கணக்கில்  நிஷித்தகாம்யமாகும், அப்படிப்பட்ட காம்யகர்ம நிஷித்தம், அல்லது காம்யகர்ம முழுவதும் நிஷித்தமல்ல என்று தோன்றுகிறது.ஆக வயம்  ஸ்யாம பதயோ ரயீணாம்  என்கிறவிடத்தில் ரயீணாம் – கைங்கர்யோபயோகியான பணத்துக்கு நாம் அதிபதியாகக்கடவோம்,என்று ப்ரார்த்திப்பது தவறில்லை எனத்தோன்றுகிறது. இதையே யஞ்ஞார்த்தம் த்ரவ்யார்ஜனாதிகம் கர்ம ஸமாசர என்று கீதாபாஷ்யததில் காணலாம்.அல்லது கைங்கர்யமாகிறபணத்துக்கு அதிபதியாகக்கடவோம்.

ஸ்ரீஸ்துதியில்

யோகாரம்பத்வரிதமநஸோ யுஷ்மதைகாந்த்யயுக்தம்
தர்மம் ப்ராப்தும் ப்ரதமமிஹ யே தாரயந்தே தநாயாம்.
தேஷாம் பூமேஃ தநபதிக்ருஹாத் அம்பராத் அம்புதேர்வா
தாரா நிர்யாந்தி அதிகமதிகம் வாஞ்சிதாநாம் வஸூநாம்.

 மோக்ஷம் பெறவேணும்,அது பக்தியோகத்தால் வரவேணும், அது க்ஞானயோகத்தால், அது  கர்மயோகத்தால்,அது கார்ஹஸ்த்யம் முதலான ஆச்ரமதர்மத்தால் வரவேணும். அதற்கு யாகம் முதலியன செய்யவேண்டும். அதற்கு தனம் வேணும்.அதற்கு இம்மண்ணுலகில் தேவதாந்தரத்தைக்கேட்கக்கூடாது,பணமும் வேணும்,ஆதலால் ச்ரியஃபதியையே கேட்கவேணுமென்று இப்படி உறுதியுடன் உங்களைப்பற்றினார்க்கு உங்கள் ஸங்கல்பத்தாலே பூமியில் நிதிரூபமாகவும்,குபேரன் வீட்டிலிருந்தோ, ஆகாயத்திலிருந்தோ, ஸமுத்ரத்திலிருந்தோ மிகுதியான தநலாபம் உண்டாகிறது என்கிறார்.

 மேலும் कृतार्थीकुर्मस्स्वं कृपणमपि कैङ्कर्यधनिनः என்கிறார். .

லோகத்தில் சிலர் ,தான் உதவி செய்வதினால் தனக்கும்  லாபம் உண்டாகுமென்று அறிந்தால் செய்வார்கள், சிலர் செய்தபின் கிடைத்தலாபத்தினால் ஸந்தோஷிப்பார்கள். யஜமானன் அக்னியிடம் பணத்தின் பொருட்டு வழி நடத்தவும் பாபங்களை போக்கவும் உதவியை உபஸ்தானரூபத்தில்  ப்ரார்த்திக்கிறான்,இதனால் எனக்கு என்ன பயன் என்று அக்னி வினவினால் நம உக்தியை செய்கிறேன் என்பது பதிலாகும், அக்னி பெறும் லாபமாவது நம உக்தியை பெறுவதாகும், இதுவே பெரிய லாபமாகும், மற்றவர்களால்  இதை பெறமுடியாதே, இதையே கீதையில்  தேவாந் பாவயதாநேந தே தேவா பாவயந்துவஃ பரஸ்பரம் பாவயந்த ச்ரேயஃ பரமவாப்ச்யத, ,தேவதைகள் மனுஷ்யர்களுக்கு அன்னபானாதிகளை கொடுப்பதினால்  லாபம்  தேவதைகளுக்கும் உண்டு.

அன்னத்தைக்கொண்டு மனுஷ்யர்கள் யாகம் செய்கிறார்கள், அதனால்  தேவதைகளுக்கல்லவா லாபம், இராவணன் சிவனை குறித்து தபஸ் செய்து வலிமையை பெற்றான். அவன் அதை பரீக்ஷிக்க வேண்டி கைலாயகிரியை தூக்குகிறான்,இதனால் பயந்து போன பார்வதீ சிவனை கட்டி அணைக்கிறாளாம்.சிவன் ராவணனுக்கு அளித்த வரனின் பயனை பெற்றதாக ராவணன் ப்ரத்யுபகாரம் செய்ததாகக்கருதி மிகுந்த ஸந்தோஷத்தை அடைந்ததாக சிசுபாலவதம் எனும் காவ்யத்தில்  மாககவியின் குறிப்பு உள்ளது, ச்ரியஃபதியானவன்  அவாப்தஸமஸ்தகாமனாகிலும் அவனுக்கும் ஓர் ஆசையண்டு, சிவன் ஆலிங்கநத்தினால் ஸந்தோஷமடைபவன், ச்ரியஃபதியானவன் பிராட்டியின் கடைக்கண் பார்வைக்கே ஸந்தோஷமடைபவன்,இதையறிந்து ஸ்வாமி தேசிகன் சரணாகதிதீபிகையில் வினவுகிறார்

தேவரீர் எனக்கு ஓர் உதவி செய்யவேணும், செய்தால் உமக்கும்  ஒரு லாபம்  உண்டாகும், என,என்ன உதவி என்று எம்பெருமான் வினவுகிறார்,ஸ்வாமி தேசிகன் பணத்தையோ பதவியையோ ப்ரார்த்திக்கவில்லை,வினவியது க்ருத்வா த்வதன்யவிமுகம் க்ருபயா ஸ்வயம் மாம்

 தேவரீரைத்தவிர்த்து வேரொருவரையும் தொழாதவனாக என்னை செய்து ரக்ஷிக்கவேணும், ரக்ஷிப்பதால்  எனக்கு என்ன லாபம் பெருமாள் வினவுகிறார், பதிலாக -ஸ்பாதிம் த்ருசோஃ ப்ரதிலபஸ்வ ஜகஜ்ஜநந்யாஃ,பிராட்டியின் கடைக்கண் பார்வையை அதிகம் பெறுவீர் என்கிறார்.என்னை ரக்ஷித்தால் உமக்கும் லாபம் உண்டு  அதாவது உம்மை பிராட்டி குளிர கடாக்ஷிப்பாள் என்று.

இப்படி வேதகாலம் தொட்டு தேவதைகளும், பெருமாளும் கூட ப்ரதிபலனை எதிர்பார்க்கும் ஸமயத்தில் ஸ்வாமி தேசிகனின் கைங்கர்யம், மற்றும் வேதபாராயன கைங்கர்யத்தில்  ஆஸ்திகர்கள் ப்ரதிபலனை எதிர்நோக்குவதில்

ஆச்சர்யமில்லை. ப்ரதிபலனை வேண்டுபவர்களுக்கு ப்ரதிபலன் நிச்சயமுண்டு, .கைங்கர்யத்தினால் ப்ரீதனான எம்பெருமான் இவர்களின் ப்ரார்த்தனையை ,அபீஷ்டங்களை  பூர்த்தி செய்கிறான். स एनं प्रीतः प्रीणाति ,என்றல்லவா வேதம் கூறுகிறது. தர்மோ ரக்ஷதி ரக்ஷிதஃ என்பது போல் ஸ்வயம் ப்ரீதனாய்க் கொண்டு  இவனையும் ப்ரீதியடையச் செய்கிறார். ஆதலால் அடியார்கள் எம்பெருமானின் திருவாராதனத்தில் ஸஹகரித்து பயனை அடையலாம்.

This article is written by Sri U.Ve. Satakopa Tatacharya Swamy of Kanchi

Sri.V.P.T.V.Kainkarya Trust.
Print Friendly, PDF & Email

3 COMMENTS

  1. excellant explanation…in tune with our sampradhayam too..kudos to Sri.U.Ve.Satakopa Thathachar swamy…we
    pray for more of such interesting and education articles..

  2. Dr.P.V. Satakopa Tatachrya swaamy’s blog address is given below. asthikaas, please go through.

    वेदप्रतिपादितविषयाः

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here