Desika Upadesam

1
859 views


This article on Desikopadesam written by Sri U.Ve. Vidwan Mathuranthakam Veeraraghavacharyar Swami.



Print Friendly, PDF & Email

1 COMMENT

  1. ஸ்வாமி தேசிகனின் உபதேசம்.

    ஹம்ஸஸந்தேசத்தில் ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீரங்கம் முதலான திவ்யதேசத்தை மங்களாசாஸனம் செய்ய திருவுள்ளம், ஆதலால் அத்திவ்யதேசங்களை ஹம்ஸத்துக்கு மார்கமாக குறிப்பிட்டார்.இது போல்
    ஸங்கல்பஸூர்யோதயநாடகத்தில் எம்பெருமானின் தசாவதாரங்களை குறித்து தெரிவிக்க வேணுமென திருவுள்ளம். அதுக்காக ஏழாவது அங்கத்தில்ஒரு சித்ரசாலையை ஏற்படுத்தி அதில் தசாவதாரங்களை சித்ரமாக வரைந்து அதை கதாநாயகன் காணவருவதாக ஒரு கல்பனை. முதலில் சித்ரசாலையின் காப்பாளனாக ஸம்ஸ்காரன் என்ற பெயருடன் ஒருவன் ப்ரவேசித்து அவன் தன்னை அறிமுகப்படுத்துவதாக ஒரு காட்சியை அமைத்தார்.

    ஸம்ஸ்காரன்:– நான் அனுபவத்தின் மகனாய் ஸம்ஸ்காரனென்ற பெயர் பெற்றவன்.விவேகமஹாராஜனின் சில்பிகளில் எல்லாவித்யையும் பூர்ணமாகப்பயின்ற சில்பி.தேவசில்பியான விச்வகர்மாவையும், அஸுரசில்பியான மயனையும் வென்ற களைப்பில் அது தீரவேண்டி வெகுநேரம் உறங்கிவிட்டேன்.அவ்வளவில் ஸமயம் பார்த்து மஹாமோஹன் அனுப்பிய இருவர் மதுவும் கைடபனுமென்னலாம்படி சக்திமிக்க ரஜஸ்தமோ குணங்கள் , என்னை ஸத்வகுணத்தின் தோழன் என்பதாக நினைத்து உபத்ரவிக்க விரும்பினான்.नूनमप्रबुद्धतैव पुरुषेषु प्रतिपक्षजनस्य हस्तावलंबः।
    புருஷனுக்கு விழிப்பில்லை என்றால் பகைவர்களுக்கு அதுவே கைக்குப் பிடிப்பாகும்.உடன் பெருமாளின் தயையினால் ஏவப்பட்டு ஸுமதி தேவி தன் வேலைக்காரிகளான ஸஹத்ருஷ்டி,ஸத்ருசத்ருஷ்டி என்னும் இருவரைக்கெொண்டு என்னை எழுப்பிவிட்டாள்.பிறகு விரோதிகள் இடம் பெறாமல் ஓடிவிட்டனர்.இப்போது விவேகமஹாராஜா வ்யவஸாயன் என்கிற சேநாபதியுடன் வருவதாக அவர் மூலம் அறிவித்துள்ளார். மிகவும் கவனமாக செய்யேண்டியதை முடித்துள்ளேன்.अवसरानुकूलवृत्तीनां खल्वधिकारिणामाधिपत्यं प्रतिष्ठति।
    காலத்திற்குத்தக்க ஊழியம் செய்பவர்களுக்கே அதிகாரம் நிலைக்கும்.
    என்பதாக தெரிவிக்கிறார். என்ன ஆச்சரயமான கல்பனை, அனுதினமும் இதை அனுபவிக்கவேணும்

    சாஸ்த்ரவிஷயம்.
    ந்யாயசாஸ்த்ரத்தில் கூறியப்ரகாரம் பாவநாக்ய ஸம்ஸ்காரம் என்பது ஆத்மாவின் குணமாகும். “அனுபவஜந்யா ஸ்ம்ருதிஹேதுஃ பாவநா” அனுபவம் எனும் க்ஞாநத்திலிருந்து உண்டானதும் ஸ்மரணத்துக்கு காரணமானதும் எதுவோ அது பாவநா என ஸம்ஸகாரத்துக்கு லக்ஷணத்தை கூறினார்கள்.அனுபவித்த விஷயத்தில் மாத்ரம் வரும் க்ஞாநம் ஸ்மரணமாகும்.இதில் ஸம்ஸ்காரம் காரணமாகும். சிலஸமயத்தில் அனுபவித்த விஷயத்துக்கும் ஸ்மரணம் வருவதில்லை, காரணமான ஸம்ஸ்காரமில்லாமல் போனால் கார்யமான ஸ்மரணமும் உண்டாகாது.ஆக இங்கு ஸம்ஸ்காரத்தை அனுபவத்தின் புதல்வன் எனக்கூறுவது சாஸ்த்ரமறிந்தவர்களுக்கு ரஸனீயம்.ஸஹத்ருஷ்டியாவது சேர்ந்ததை காண்பது, ஸத்ருசத்ருஷ்டியாவது அதைப்போலுள்ளதை காண்பதாகும்.ஸம்ஸ்காரமுள்ளவன் ஒரு வஸ்துவை நினைப்பது என்பது அத்துடன் முன்பு கண்ட வஸ்துவை காண்பதாலும்,அதைப்போலுள்ள வஸ்துவை காண்பதாலும் . ஆதலால் அவைகளை இங்கு ஸம்ஸ்காரத்தை எழுப்புவதாக ஸாதித்தார்.

    ஸ்வாமி கூறும் உபதேசமாவது

    1.नूनमप्रबुद्धतैव पुरुषेषु प्रतिपक्षजनस्य हस्तावलंबः। நூநமப்ரபுத்ததைவ புருஷேஷு ப்ரதிபக்ஷஜநஸ்ய ஹஸ்தாவலம்பஃ
    புருஷனுக்கு விழிப்பில்லை என்றால் பகைவர்களுக்கு அதுவே கைக்குப் பிடிப்பாகும்.

    2.अवसरानुकूलवृत्तीनां खल्वधिकारिणामाधिपत्यं प्रतिष्ठति। அவசரானுகூலவ்ருத்தீநாம் கல்வதிகாரிணாமாதிபத்யம் ப்ரதிதிஷ்டதி
    காலத்திற்குத்தக்க ஊழியம் செய்பவர்களுக்கே அதிகாரம் நிலைக்கும்.

    न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
    श्रीदेशिकप्रियः

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here