Upastaanam-Prathanai – Part2

0
355

This is a wonderful article written by Dr. P.V. Satakopa Tatacharya Swamy about Upastaanam-Prathanai based on the quotes from Vedas. Part 1 of this series can be read from this link: http://anudinam.org/2013/07/13/upastaanam-prathanai/

உபஸ்தானம்—ப்ரார்த்தனை. 2.

அக்னி உபஸ்தாந மந்த்ரம்,

  अग्ने नय सुपथा राये अस्मान् विश्वानि देव वयुनानि विद्वान्।

  युयोध्यस्मज्जुहुराणमेनो भूयिष्ठां ते नम उक्तिं विधेम।

என்பது,வேதபாஷ்யத்தில் உள்ளபடி இதின் விளக்கத்தை முன்பு அறிந்தோம்,

(அக்னிதேவனே,  சாஸ்த்ரவிருத்தமல்லாதவழியில் நிறையபணத்தை ஸம்பாதித்து உனக்கு ஹவிஸ்ஸை ஸமர்பிக்கத்தகுந்தவனாக என்னை நடத்திச்செல்லவேணும்,என்னுடய பாபத்தை போக்கவேணும்,இதுக்காக என்னால் வேறு ஏதும் செய்ய இயலாது, நமஸ்காரம் என்ற சொல்லை மாத்ரம் சொல்லக்கடவேன்.)

இந்த மந்த்ரமானது  யஜுர்வேதத்தில். முதல்காண்டம் முதல் ப்ரச்னத்தில் கடைசி அனுவாகத்தில், நான்காம் ப்ரச்நத்தில், இரண்டாவது அஷ்டகத்தில் எட்டாம் ப்ரச்னத்தில்,ஆரண்யகம் முதல் ப்ரச்னத்தில்,  , ஈசாவாஸ்யோபநிஷத்தில் கடைசி மந்த்ரமாகவும் ஒதப்படுகிறது

ஈசாவாச்யோபநிஷத்துக்கு ஸ்வாமி தேசிகன் பாஷ்யத்தை அனுக்ரஹித்துள்ளார்.அதின்படி  பொருள் வருமாரு– : மீண்டும் அக்னிசப்தத்தின் பொருளான எம்பெருமானை தன்னுடைய தேவையை பூர்த்திசெய்ய ப்ரார்த்திப்பது.

அக்னே–அக்னிசரீரக,  யஸ்ய அக்னிச்ச்சரீரம் என்பதாக ச்ருதி உள்ளதால். ஸாக்ஷாதப்யவிரோதம் ஜைமிநிஃ என்பதான ப்ரம்ஹஸூத்ரத்தால் அக்ரம் நயதீதி அக்னிஃ என கூறுவதால் நேரடியாகவும்  அக்னிசப்தம் எம்பெருமானை குறிக்கும்., நய–நடத்திச்செல், ஸுபதா–நல்லமார்கத்தால், ராயே– ப்ரம்ஹவித்யைக்காக சரீரஸம்ரக்ஷணத்தின் பொருட்டும், உன்னுடைய ஆராதனத்துக்குத் தேவையான பணத்தின் பொருட்டும், அஸ்மான்- –உன்னைத்தவிர்த்து வேறொன்றை ஸ்மரிக்காத, வேறுகதியுமில்லாத எங்களை,  வயுநாநி வித்வான் தேவ—எங்களின் அபீஷ்டங்களை கொடுப்பதுக்கு  அனுகுணமான விசித்ரசக்தியுடன் கூடிய எம்பெருமானே, ஒன்றுமறியாத எங்களை வழிநடத்தத்தகுந்தவனாகிறாய். ஜுஹுராநம்—-எண்ணமுடியாத அளவு வக்ரமாக உள்ளதாய் மிகவும் உபத்ரவிக்கிற. ஏனஃ—,அக்ருத்யகரண,க்ருத்யாகரணரூபமாய்,உன்னுடைய அனுபவத்தைத் தடைசெய்யும் பாபத்தை, யுயோத்யஸ்மத்— எங்களிடமிருந்து நீக்குவாயாக. உன்னைக்குறித்து மேன்மேலும் நமஃ என்ற சப்தத்தை சொல்லுவோம். மானஸிகமாயும், காயிகமாகவும் நமஸ்காரம் இல்லாமல் போனாலும் நமஃ என்று சொல்வதால்மட்டும்  ஸந்துஷ்டனாகத்தகுவனாகிறாய் என.

மேலும் ஸ்வாமி ஸாதிப்பது ஒரே மந்த்ரம்,  ப்ரகரணங்களை அனுஸரித்து விசேஷமாக ப்ரகரணங்களுக்குத்தகுந்தபடி பொருளைக்கூறுமென்பதாக பெரியோர்கள் கூறுவர் என.

முன்பே கூறினோம், திருவாராதனத்தில் சாத்துமறையை உபஸ்தானத்தின் ஸ்தானத்தில் செய்கிறோமென. இம்மந்த்ரம் சுக்லயஜுர்வேதத்தின் கடைசிமந்த்ரமாகும். ஆக இதுவும் சாத்துமறையில் ஓதப்படும் மந்த்ரமாகும்.

நமது ஸம்ப்ரதாயத்தில்  நாம் அனுஷ்டிக்கும் எல்லா கர்மாக்களும் பகவதாராதனரூபமாகும். எல்லாகர்மாக்களுக்கும் பலனை கொடுப்பவன் எம்பெருமான் தான் என்பதை, அஹம் ஹி ஸர்வயக்ஞாநாம் போக்தா ச ப்ரபுரேவ ச என கீதையில் ஸாதித்தார். நாம் செய்யும் ஹோமம் முதலானவைகளை அக்னி முதலான தேவதைகளைக்குறித்து மட்டும் செய்தால் நமக்கு கிடைக்கும் பலன் பரிமிதமாகும்.அக்னி முதலானதேவதைகளின் அந்தர்யாமியான பகவானைக்குறித்து என ஸ்மரித்தால் பலன் அதிகமாக கிடைக்கும்.

நாம் செய்யும் கர்ம, ஒரேமாதிரியாக இருக்க பலத்தில் ஏன் இந்த வேறுபாடு என்று வினவி, ஸமாதானமாக கீதாபாஷ்யத்தில் ஸ்ரீபாஷ்யகாரர் ஸாதிப்பது, நம்முடைய ஸங்கல்பத்தில் உள்ள மாற்றத்தால் பலத்திலும்  வேற்றுமை உண்டு என. ஆதலால் பகவான்  நியமிப்பது,எல்லா நித்ய நைமித்திகமான கர்மாக்களையும் எனக்கு அர்பணமாகச்செய் ,

யத் கரோஷி யதச்நாசி யஜ்ஜுஹோஷி ததாஸி யத்.

யத்தபஸ்யஸி கௌந்தேய தத்குருஷ்வ மதர்பணம்.

என்பதாக. இதை அனுஸரித்தே ஸ்வாமி தேசிகன் அக்னியின் உபஸ்தானத்தை பரமாத்மபரமாக வ்யாக்யானித்து பாஷ்யத்தை உபஸம்ஹரிக்கிறார்.

 வ்யக்தாவ்யக்தே வாஜிநாம் ஸம்ஹிதாந்தே

வ்யாக்யாமித்தம் வாஜிவக்த்ரப்ரஸாதாத்.

வைச்வாமித்ரோ விச்வமித்ரம் வ்யதாநீத்

வித்வச்சாத்ரப்ரீதயே வேங்கடேசஃ என.

ஸ்ரீஹயக்ரீவனின் அனுக்ரஹத்தால் வாஜஸநேயஸம்ஹிதையின் (சுக்லயஜுர்வேதம்) முடிவில், விச்வாமித்ரகோத்ரத்தைச்சேர்ந்த வேங்கடேசன் ,(தேசிகன்) வித்வான்களான சிஷ்யர்களின் ப்ரீதிக்காக, இவ்விதம் வ்யாநத்தை செய்தார்,

தத்வமுக்தாகலாபத்தில் இரண்டாவது ச்லோகத்தில், வ்யாதாநீத் வேங்கடேசோ வரதகுருக்ருபாலம்பிதோத்தாமபூமா என உள்ளது. இங்கு ஸ்ரீமதுபயவே அய்யாஸ்வாமி, அக்ஷரார்த்த வ்யாக்யானத்தில்,வேங்கடேசஃ—வேங்டாத்ரீசனின் அவதாரமான படியால் வேங்கடேசன் என்பதான திருநாமம் என ஸாதித்தார்.

க்ரந்தத்தின் ஆரம்பத்தில் க்ரந்தத்தை ஆரம்பிக்கிறேன் என்றே இருக்கவேணும்.  வ்யாதாநீத்—செய்தேன் என எப்படி ப்ரயோகித்தார் என்பதான கேள்விக்கு ஸமாதானத்தை, ஸ்வாமி தேசிகன், ஸாக்ஷாத் திருவேங்கடவனின் அவதாரமானபடியால் ஸர்வசக்தனானபடி, க்ரந்தத்துக்கு விக்னமில்லை,செய்யமுடியும்  என்கிற நிச்சயத்தால் ஆரம்பத்திலேயே செய்தேன் என ப்ரயோகித்தார் என்பதாக அஸ்மத்ஸ்வாமி ஸாதித்தார்.

வைச்வாமித்ரோ விச்வமித்ரம் வ்யதாநீத் என்றும், வ்யாதாநீத் வேங்கடேசஃ என்றும் காண்கிறது.

This article is written by Sri U.Ve. Satakopa Tatacharya Swamy of Kanchi

Sri.V.P.T.V.Kainkarya Trust.
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here