Dayasatakam celebrates the auspicious Quality (Kalyana Guna ) of Mercy (Dhayaa) of the Lord of Thiruvenkatam. Of All the Kalyana Gunaas of Venkataadhri Sekhara Vibhu , His Dhayaa is the most important one for the uplift of the Chetanaas.The concept of Prapatti and Thiruvenkatamudayaan’s Dhayaa to realize the fruits of that Prapatti is the subject of this Stotra, composed by Swami Vedanta Desikan. For previous slokas from Dayasatakam, please refer: http://anudinam.org/?s=dayasatakam
cont…
Slokam 55
நிகம ஸமாச்ரிதா நிகில லோக ஸம்ருத்தி கரீ பஜத் அக கூல முத்ருஜ கதி: பரிதப்த ஹிதா ப்ரகடித ஹம்ஸ மத்ஸ்ய கமடா த்யவதார சதா விபுத ஸரித் ச்ரியம் வ்ருஷகிரி ஈச தயே வஹஸிnigama samaashritaa nikhila loka samR^idhdi karI bhajadagha kUla mudR^ija gatiH paritapta hitaa. prakaTita hamsa matsya kaThaadhyavataara shataa vibudha sarichchhriyaM vR^iShagirIsha daye vahasi..55
பொருள் – நீ அனைத்து வேதங்களாலும் போற்றப்படுகிறாய். அனைத்து உலகிற்கும் செழுமை அளிக்கிறாய். உன்னை அண்டியவர்களின் பாவங்கள் என்ற கரையை உடைக்கும் நதியாக உள்ளாய். துன்பம் கொண்டவர்களுக்கு மிகுந்த நன்மை அளிக்கிறாய். அன்னம், மீன், ஆமை போன்றவற்றை உடைய கங்கையின் பெருமையை நீ கொண்டுள்ளாய்.
விளக்கம் – கங்கை வேதங்களாலே போற்றப்பட்டது; இதே போன்று தயாதேவியும் வேதங்களால் போற்றப்படுகிறாள். கங்கையானது தான் பாய்ந்து வரும் இடங்களை வளப்படுத்துகிறது; இதே போன்று தயாதேவி அனைவரையும் செழிக்க வைக்கிறாள். கங்கை தான் வரும் பாதையில் உள்ள கரைகளை உடைத்துப் பாய்கிறது. இதே போன்று தயாதேவியும் நமது பாவங்கள் என்னும் கரைகளை உடைக்கிறாள். கங்கையில் அன்னம், மீன், ஆமை முதலான உயிர்கள் ஆனந்தமாக உள்ளன. இதே போன்று தயாதேவி மூலம் ஸ்ரீநிவாஸன் ஹம்ஸம், மத்ஸ்யம் மற்றும் கூர்மம் முதலான அவதாரங்கள் எடுக்கிறான்.
Slokam 56
ஜகதி மிதம்பசா த்வத் இதரா து தயே தரளா பல நியம உஜ்ஜிதா பவதி ஸந்தபநாய புந: த்வம் இஹ நிரங்குச ப்ரசகந ஆதி விபூதிமதீ விதரஸி தேஹிநாம் நிரவதீம் வ்ருஷசைல நிதிம்jagati mitaMpachaa tvaditaraa tu daye! taralaa phala niyamojjitaa bhavati santapanaaya punaH. tvamiha nira~Ngusha prashakanaadi vibhutimatI vitarasi dehinaaM niravadhiM vR^iShashaila nidhim.h..56
பொருள் – தயாதேவியே! இந்த உலகத்தில் உள்ள மற்ற தேவதைகளின் தயை என்பது அற்பமான பலன்களைத் தரவல்லது, நிலையற்றது, பயன் அளிக்கும் என்ற நிச்சயம் அல்லாதது, துன்பம் அளிக்கக்கூடியது ஆகும். நீ தடையில்லாத சக்தி மட்டும் ஐஸ்வர்யம் உடையவளாக இருந்து கொண்டு, இந்த உலகில் உள்ள அனைவருக்கும் திருமலையில் உள்ள ஸ்ரீநிவாஸன் என்ற நிதியை அளிக்கிறாய்.
விளக்கம் – சரணாகதிக்கு முக்கியமான சிந்தனை என்னவென்றால், பகவானைத் தவிர நம்மைக் காக்க வல்லவர்கள் வேறு யாரும் இல்லை என்ற சிந்தனையாகும். இந்த உலகில் ப்ரம்மன், இந்திரன் போன்ற பல தேவதைகள் இருந்தபோதிலும் அவர்களால் மோக்ஷம் என்ற பலனை அளிக்க இயலாது. அவர்கள் அளிக்கும் பலன்கள் – உயர்ந்த பலன்கள் அளிக்காதவை என்ற நிலையும், துன்பங்களையும் அளிக்கவல்ல நிலையும் கொண்டதாகும். நம்மாழ்வார் – அவ்வருள் அல்லன் அருளும் அல்ல – என்பது காண்க . இத்தகைய உயர்ந்த பலனை தயாதேவி மட்டுமே அளிக்க வல்லவள் ஆவாள். அவள் அளிக்கும் பலன் எது என்றால் ஸ்ரீநிவாஸனே ஆவான்.
Slokam 57
ஸகருண லௌகிக ப்ரபு பரிக்ரஹ நிக்ரஹயோ: நியதிம் உபாதி சக்ர பரிவ்ருத்தி பரம்பரயா வ்ருஷப மஹிதர ஈச கருணே விதரங்கயதாம் ச்ருதி மித ஸம்பதி த்வயி கதம் பவிதா விசய:sakaruNa laukika prabhu parigraha nigrahayoH niyatim.h upaadhi chakra parivR^itti paramparayaa. vR^iShabha mahidharesha karuNe! vitara~NgayataaM shR^iti mita sampadi tvayi kathaM bhavitaa vishayaH..57
பொருள் – தயா தேவியே! இந்த உலகில் உள்ள பிரபுக்களின் தயை என்பது அவர்களுக்கு வேண்டியவர்களிடம் உண்டாவதையும், வேண்டாதவர்களிடம் வெறுப்பு உண்டாவதையும் காணலாம். நன்கு அறிந்தவர்கள், இந்த விருப்பு-வெறுப்பு என்பது சக்கரம் போன்று மாறிமாறி வரும் என்று உணர்ந்து கொள்கின்றனர். இவ்விதம் அறிந்தவர்களுக்கு வேதங்கள் மூலம் கூறப்பட்ட உனது பெருமை பற்றி எவ்விதம் சந்தேகம் ஏற்படும்? (ஏற்படாது)
விளக்கம் – இந்த உலகில் உள்ள பிரபுக்கள் தங்களிடம் பணிவாக நடந்து கொள்பவர்களிடம் அன்புடனும், விரோதமாக நடப்பவர்களிடம் கோபத்துடனும் உள்ளனர். இந்த உலகில் உள்ள சாதாரண பிரபுக்களே இவ்விதம் நீதியுடன் நடக்கும்போது, ஸ்ரீநிவாஸன் அவரவர்கள் நடந்து கொள்ளும் முறைக்கு ஏற்ப பலன் தருவான் என்பதில் எந்த ஐயமும் இல்லை. இவ்விதம் நடந்து கொண்டால் ஸ்ரீநிவாஸன் நம்மைக் கை விடமாட்டான் என்ற நம்பிக்கை வேண்டும். ஆக இந்த ச்லோகத்தில் சரணாகதிக்கு இன்றியமையாததாக உள்ள மூன்று செயல்கள் கூறப்பட்டுள்ளன. அவையாவன:
- ஸ்ரீநிவாஸன் விதித்தவற்றை ஏற்று நடப்பது
- அவன் விதிக்காதவற்றை செய்யாமல் இருப்பது
- அவன் கை விட மாட்டான் என்று மஹாவிச்வாசம் கொள்வது
Source:
English: Oppiliappan KOil Sri Varadachari SaThakOpan
Tamil: Sri Sridharan