உத்தமமான புரட்டாசித் திருவோணம் எனும் நாளே

1
1488

Thoopul_Swami Desikan_50

Today October 13, 2013; Vijaya Varusha Purattasi Thiruvona Thirunaal (Sravanam), is the avathara Thirunakshatram of Tirumala Thiruvengadamudyan and Swami Vedantha Desikan. Here is an article explaining the significance of Purattasi Thiruvonam, written by Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy

Swami Desikan_1 Swami Desikan_2 Swami Desikan_3 Swami Desikan_4 Swami Desikan_5 Swami Desikan_6 Swami Desikan_7 Swami Desikan_8 Swami Desikan_9 Swami Desikan_10

Print Friendly, PDF & Email

1 COMMENT

 1. தாஸன், ஸ்ரீவரதன் ஆஸ்திகர்கள் அதிகளவில் ஸேவிக்க இவ்வருடம் திருவோணத்தை ஞாயிற்றுக்கிழமையில் வரச்செய்தார். அதுபோல் தனக்காக மஹாநவமி தினம் வரச்செய்தார் எனலாம். ஆம் மஹாநவமி தினம் மங்களாசாஸநமஹோத்ஸவம் ஸம்பவித்தாலே கண்ணாடி அறையில் பிராட்டியுடன் நெருக்கமாக ஏகாஸநத்தில் அமரமுடியும் . ஸ்வாமி தேசிகன் ,தேவ,என்னை ஸம்ரக்ஷிப்பதால் உமக்கும் பலனுண்டு, அதாவது,”ஸ்பாதிம் த்ருசோஃ ப்ரதிலபஸ்வ ஜகஜ்ஜநந்யாஃ” பிராட்டியின் கடைக்கண் பார்வையை பெறுவீர் என ஸாதித்தார். இதை ஸ்மரித்த நம்மத்திகிரித்திருமால்,ஸ்வாமியின் அவதாரதினத்தை மஹாநவமியில் ஸம்பவிக்கச்செய்தால் பிராட்டியுடன் கண்ணாடிஅறையில் மன்ஸத்திலும் ஏகாஸநம் கிடைக்குமே என்பதால் இவ்வருடம் அம்மாதிரி வரச்செய்தாரோ எனத்தோன்றுகிறது.

  மேலும் ஸ்வாமி தேசிகன், பஹுப்ரமாணங்களைக்கொண்டு பிராட்டிக்கு விபுத்வத்தை ஸ்தாபித்து ,அவளை ஈச்வரியாக ஸ்தாபித்து, அவளை எம்பெருமானுடன் ஸமானமாய் ,சரணாகதியாகிற யாகத்தில் ப்ரத்யக்– ஜீவரூபமான ஹவிஸ்ஸில் எம்பெருமானைப்போல் உத்தேச்யமாய்,ஸ்வரூப ரூபகுணவிபவைச்வர்யாதிகளால் ஸமானமாய் திவ்யதம்பதிகளாக அனுபவித்தபடியால் இந்த சாஸ்த்ரார்த்தையும் ப்ரத்யக்ஷமாக காண்பிக்க இவ்விதம் இன்று ஏகாஸநத்தில் ஸேவை ஸாதிக்கிறார்கள் எனலாம்.

  மேலும், எம்பெருமானுடன் போகத்தில் ஸாம்யத்தை காண்பிக்க பெருமாள் அநேககாலம் எழுந்தருளியிருக்கும் கண்ணாடி அறையிலும் ஸ்வாமி எழுந்தருள்வதை காண்பிக்கும் விதமாகவும் மஹாநவமி தினம் ஸ்வாமியின் அவதாரதினத்தை ஏற்படுத்தினார் எனலாம்.
  மேலும் இன்றையதினம் மங்களாசாஸனம் ஸம்பவித்தபடியால் எம்பெருமான் திருமஞ்ஜநகாலத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்வர்ணதிருமஞ்ஜன வேதிகையிலும் ஸ்வாமி எழுந்தருளும்படி நேர்ந்தது. ஆக ஸ்வாமி தேசிகன், ”தமதனைத்துமவர்தமக்கு வழங்கியும் தான் மிக விளங்கும்” என ஸாதித்ததை ஸத்யமாக காட்ட எல்லா போகோபகரணங்களையும் இவ்வருடம் ஸ்வாமிக்கு அனுக்ரஹித்தார் என்பதும் விசேஷமாகும்.

  ஆக எம்பெருமான், ப்ரியையான பிராட்டியுடன், ப்ரியரான ஸ்வாமியுடன் ஆநந்தமாக இருப்பதை (ஸேவை ஸாதிப்பதை) நாம் இவ்வருடம் ஸேவித்தபடியால் நாமும் ஆநந்தத்தை அடைந்தோம். “ஸம்ஸார ஏஷ பகவன் அபவர்க ஏவ” ,இந்த ஸம்ஸாரமும் மோக்ஷமே என ஸ்வாமி ஸாதித்ததும் ஸத்யமாகும். இந்த ஸேவை ப்ரதி வருடம் கிடைப்பது அறிது.
  நேரில் ஸேவிக்கமுடியாதவர்களுக்கு “அனுதினம் ஆர்க்”anudinam.org எல்லா உத்ஸவத்தையும் இங்குமட்டுமல்லாமல் அநேகம் திவ்யதேசங்களில் நடைபெற்ற ஸ்வாமி தேசிகன் உத்ஸவங்களையும் அனுதினம் ப்ரகாசனம் செய்து “அனுதினம்” என்ற பெயர் பொருந்தும்படி செய்தார்கள்.
  இனி நாம் இந்த அனுதினம் எனும் ஆர்கையும் சேர்த்து “ஸ்ரீமன் ஸ்ரீரங்கச்ரியம், அனுதினம் ஸம்வர்தய” என ப்ரார்த்திப்போம்.
  ஸ்வாமி தேசிகன் கண்ணாடி அறையில் மங்களாசாஸநம் செய்யும் படத்தை வெளியிட்டால் ஆஸ்திகர்களுக்கு ஆனந்தம் அதிகமாகும்.
  न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
  श्रीदेशिकप्रियः

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here