சர்வரீ நாபயாதி – Description about Swami Desikan Utsavam at Thoopul

2
2,929 views

Thoopul  Swami Desikan Thirunakshatra Mahotsavam 2013_ Ganthapodi Utsavam -36

This article is written by Sri.U.Ve. Dr.Satagopa Thathacharyar Swamy of Kanchi, about the details of recently concluded Swami Desikan Utsavam at Thoopul.

தாஸஸ்ய விக்ஞாபனம்.ஸ்வாமி தேசிகனின் அடியார்களின் ப்ரார்த்தனையினால்  ஸ்வாமியின் உத்ஸவம் நிர்விக்நமாக நடைபெற்று முடிவுற்றது, ஸ்வாமி ஆஸ்தானத்துக்கு எழுந்தருளிவிட்டார். அடியார்களுக்கு மிக்கமகிழ்ச்சி,ஆயினும் .நீண்ட நாளாக ஆவலுடன் ப்ரதீக்ஷித்திருந்த உத்ஸவம்  11 தினங்களும் ஒரு க்ஷணம்போல் சென்று விட்டதே என வருத்தமும் கூட,ஆயினும்  அந்த அனுபவம் மனதை விட்டு நீங்காமல் மனதிலேயே நிலைத்துவிட்டது,ஸ்வாமி ஸாதித்தவிஷயம் எத்தனை உண்மையானது என்பதை  அனுபவத்தால் மாத்ரம் அறியமுடிந்தது. ஆம் ஸ்வாமி ஹம்ஸஸந்தேசத்தில்  ராமன் ஸாதிப்பதாக குறிப்பிட்ட விஷயம்

வேலாதீதப்ரணயவிவசம் பாவமாசேதுஷோர்நௌ
போகாரம்பே க்ஷணஇவகதா பூர்வமாலிங்கநாத்யைஃ.
ஸம்ப்ரத்யேஷா ஸுதனு சதசஃ கல்பநாஸங்கமைஸ்தே
சிந்தாதீர்கைரபி சகலிதா சர்வரீ  நாபயாதி..

(எல்லை கடந்த ப்ரணயத்தின் வயப்பட்ட நமக்கு ஆலிங்கனம் முதலியவைகளால் போகாரம்பகாலத்தில் இரவு ஒரு க்ஷணத்தில் சென்றுவிட்டது, அதே இரவு தற்சமயம் விரஹகாலத்தில் நீண்டசிந்தனையினால் பழையஅனுபவத்தை பலதடவை ஸ்மரித்தாலும் முடிவடைகிறதில்லை.–செல்லவில்லை என. ) இந்த க்ரமத்தில் இரவுகள் செல்லாமல் இருக்க, அதை கழிக்க தாஸன் ஸ்மரித்த விஷயங்கள்–

3-10-13. அன்று கோயிலாழ்வார் திருமஞ்சனம், த்ரவ்யம்  உபயம்  ஸ்ரீமான்,AMR கண்ணன்,ஸ்வாமி திருவடிகளில் உள்ள பக்தியால் விடாது ஸ்வாமி கைஙகர்யத்தை நடத்தி வைத்தார்,

Swami Desikan_Thoopul_Day1_01

4-10-13.  ஸ்வாமி  உத்ஸவம் முதல் திருநாள், ஸ்ரீபரகாலமட்த்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில் ஸ்ரீ கோசம்ஞானமுத்ரை ஸ்வர்ணகவசத்துடன்ஸேவை,பிறகு  திருமஞ்சனம்,  திருப்பல்லாண்டு துடங்கி 2 பத்து,தேசிக ப்ரபந்தம் அடைக்கலப்பத்து, தினப்படி பிள்ளயந்தாதி ஸேவை.நிவேதனம்,   வேதப்ரபந்த சாத்துமறை, ஸ்தோத்ரபாட கோஷ்டியில் வெள்ளிக்கிழமையாதலால் சதுச்சலோகீ அனுஸந்தானம், ஸ்ரீதேசிகமங்களம் ,ததீயாராதனம்,  ஸ்வாமியின் ஸ்வாத்யாயகாலத்தில்  நடைபெறும் உபன்யாஸத்துக்கு மஹான்கள் எழுந்தருளமுடியாத சூழ்நிலையில் திநசூன்யமில்லாமல் இருக்க ஸ்வாமி ஸாதித்த க்ரந்தங்களில்  “ஓரொன்று தானே அமையாதோ தாரணியில் வாழ்வார்கு வானேறப்போமளவும் வாழ்வு” என்பதால், நாடகரூபமான ஸங்கல்பஸூர்யோதயத்திலும், வேதாந்தவிஷயமான பலவிதமான ச்ருதிகளின்  விரோதத்தை “மிதோ பேதம் தத்வேஷு அபிலபதி பேதச்ருதிரதஃ “என பரிஹரிக்கும் பாங்கை    தாஸன் விண்ணப்பித்தேன். பிறகு தாம்பூல கோஷ்டீ,

ஸாயம் சப்ரத்தில்  திருவீதி உத்ஸவம், திருவாராதனம் முதல் திருவந்தாதி. திருவாய்மொழி முதல் பத்து, ஸ்ரீதேசிகப்ரபந்தம் அம்ருதரஞ்சநி, ஸேவை சாத்துமறை, ஸ்தோத்ரபாட கோஷ்டீ ஸ்ரீஸ்துதி, ப்ரார்த்தனாஷ்டகம், ததீயாராதனம்.
Thoopul_Swami Desikan_Day2_00

5-10-13.2ஆம் திருநாள் காலை ,ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில், ,ஸ்வாமிக்கு ஸ்ரீஅம்மாள் காலக்ஷேப கோஷ்டீ திருக்கோலம், திருவீதி உத்ஸவம்  பிறகு  திருமஞ்சனம்,பெரியாழ்வார் திருமொழி அம்ருதாஸ்வாதினி  சாத்துமறை, இன்று   ஹஸ்த நக்ஷத்ரம் ந்யாசதசகம், மங்களம் ஸ்தோத்ரபாட கோஷ்டீ ,ததீயாராதனம்முதலியன, ஸ்ரீமதுபயவே  வில்லூர் கருணாகராசார்யரின்  உபன்யாசம் . ருத்ரன் என்ற சொல்லுக்கு  வேதத்தில் ஸோரோதீத் யதரோதீத் தத்ருத்ரஸ்ய ருத்ரத்வம்  என்பதால் அழுபவன் என்பதால் அக்னி என்று பொருள், ரோதயதி அழும்படி செய்பவன் என்பதால் சிவனைக்குறிப்பதாகவும் உள்ளது. ஸஹஸ்ரநாமத்தில்  ருத்ரோ பஹுசிரா என்பதால்  எம்பெருமானுக்கும்  ருத்ரன் எனத்திருநாமம். ரோதயதி என ருத்ரன் அழும்படி செய்பவன் , இங்கு விசேஷம் யாதெனில் வருத்தமளித்து அழும்படி செய்பவன் அல்ல ஆநந்தத்தால்  கண்ணில் நீர் வரும்படி செய்பவன். அது தேவாதிராஜனாகும் என்பதாக ஸ்வாமி தேசிகன் “ஸ்தூலஸ்தூலான் நயநமுகுளைர்பிப்ரதோ பாஷ்ப்பிந்தூந்” என ஸாதிப்பதாக , உபந்யஸித்தார்.  பிறகு மறை உரைக்கும் பொருள்  எனும் புஸ்தகத்தை வெளியிட்டார்.
ஸாயம் “நிகில குமதிமாயா சர்வரீ பாலசூர்யரான” ஸ்வாமீ சூர்யப்ரபையில்  திருவீதி உத்ஸவம்,திருவாராதநம் 2ஆம் திருவந்தாதி திருவாய்மொழி 2ஆம் பத்து, பரமபதஸோபாநம்  முதலியன ஸேவை சாத்துமறை .ஸ்தோத்ரபாடம் ஸ்ரீவரதராஜபஞ்சாசத்,

Thoopul_Swami Desikan_Surya Prabhai_13

6-10-13 ,3ஆம் திருநாள், ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில் முரளி க்ருஷ்ணன்  திருக்கோலம், திருவீதி உத்ஸவம்  பிறகு  திருமஞ்சனம்,நாச்சியார் திருமொழி ,பரமதபங்கம். ஸேவை சாத்துமறை. ஸ்ரீமதுபயவே சோகத்தூர் ராமாநுஜாசார்யஸ்வாமியின் உபந்யாசம், கலியனுறை குடிகொண்ட  கருத்துடையோனான ஸ்வாமி தேசிகன் கலியனின்  ஸ்ரீஸூக்தியை   ஸ்ரீபேரருளாளனிடம்   திருமாமகளைப்பெற்றும்  என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் என்றனுபவித்த படியும் ,ஆறுவார்தை ஸாதித்து ஸம்ப்ரதாயத்தை காப்பாற்றியதால் பேரருளாளனானார் , இதே க்ரமத்தில் ஸ்வாமி தேசிகனும் அநேக்க்ரந்தங்களை ஸாதித்து  அனுக்ரஹித்தபடியால் இவரும் பேர்ருளாளன் தான் என ஸாதித்தார்.
ஸாயம்  ஸ்வாமீ “ஸ்ரீமான் அத்புத சந்த்ரமாஃ “ஆனபடியால்  ஸகலா யத்ர ஹி  கலா நிர்மலா நித்யகளங்கமில்லாத கலைகளை  உள்ள  சந்த்ரனாக சந்த்ரப்ரபையில் திருவீதி உத்ஸவம் 3ஆம் திருவந்தாதி, திருவாய்மொழி 3ஆம் பத்து,ஹஸ்திகிரி மாஹாத்ம்யம்  முதலியன.
SWAMI DESIKAN THOOPUL 2013-DAY 3 eve-31
தாஸனுக்கு கிடைத்த ஓர் அனுபவம், ஸ்வாமி தேசிகனுக்கு அநேக விசேஷணங்கள் உள்ளன,  அதில் கலிவைரி சடாரி வசோ ரஸிகன், என்பதாக ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின்  அனுபவம்.கலிவைரி  வசோ ரஸிகன், என்பதை ஸ்ரீபேரருளாளனிடம்   திருமாமகளைப்பெற்றும்  என் நெஞ்சகம் கோயில் கொண்ட பேரருளாளன் என்றனுபவித்த படி, என அறிந்தோம், சடாரி வசோ ரஸிகன்    எப்படி என்பதின் பதிலாக கிடைத்த  விஷயம்,திருவாய்மொழி 3ஆம் பத்தில்  திருவேங்கடமாமலை ஒன்றுமே தொழ நம் வினை ஓயுமே, என்பதை ஸ்வாமீ  தயாசதகத்தில்  ப்ரபத்யே தம் கிரிம் என்றனுபவித்தாலும் ஹஸ்திகிரி மாஹாத்ம்யத்தில் அத்திகிரி பத்தர்வினை தொத்தறவறுக்கும் அணி  அத்திகிரியே  ஹஸ்திகிரியானது ஆச்ரிதர்களின் பாபத்தை போக்கவல்லது,  பக்தர்களின் பாபத்தைபோக்கடிப்பதாக ப்ரஸித்தி பெற்ற -அத்திகிரி,- அந்த திருவாழியாழ்வான், அணியே,  ஹஸ்த பூஷணமே, என்றபடி ஸ்ரீதேவாதிராஜன்  விஷயத்தில்  அனுபவித்தபடி, ஆக இந்த 2 ப்ரபந்தமும்  சேர்ந்து  ஸேவை சாத்துமறையில்   அமைந்த விதம் ரஸநீயம்.

7-10-13 ,4ஆம் திருநாள்,ஸ்ரீபரகாலமட்த்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்  பரவாஸுதேவன் திருக்கோலம்,வழக்கப்படி உத்ஸவம் முதலியன ,திருவீதி உத்ஸவம்  பிறகு  திருமஞ்சனம்,பெருமால் திருமொழி திருச்சந்தவிருத்தம் அர்தபஞ்சகம் ஸேவை  சாத்துமறை இன்று ஸ்வாதீ காமாஸிகாஷ்டம் அனுஸந்தானம் முதலியன. ஸ்ரீமதுபயவே மன்னார்குடி ராஜகோபாலாசார்ய ஸ்வாமியின் உபந்யாஸம். ஸ்வாமி தேசிகன் பரமத நிரஸநார்தம் செய்தருளிய க்ரந்தங்கள், ஸம்ப்ரதாயத்தில் க்ஞானம் பெற ப்ரகரணக்ரந்தங்களை ஸாதித்து அனுக்ரஹித்தவிதத்தை உபந்யஸித்தார்

ஸாயம்  ஹம்ஸ வாஹநத்தில் திருவீதி உத்ஸவம்  4ஆம் திருவந்தாதி, திருவாய்மொழி 4ஆம் பத்து,.தேசிகப்ரபந்தம் ஸேவை சாத்துமறை,
தாஸனுக்கு கிடைத்த ஓர் அனுபவம், ஸ்வாமி தேசிகன்  ப்ரபந்தஸாரத்தில் ஆழ்வார்களுக்கு  தனித்னியாக விசேஷணம் கொடுத்துள்ளார்,  அதில் திருமழிசைப்பிரானுக்கு  மாயோனல்லால் தெய்வம் மற்றில்லை யென   பரத்வத்தை சொன்னவர்  திருமழிசைப்பிரான் என, மிகவும்  உயர்ந்த , கடிநமாநதும் எனலாம், ஆனபடியாலேயே, ஸ்வாமி தேசிகனை த்ராவிட கவிதா மார்கே  பரகாலம் வாத  பக்திஸாரம் வா என்பதாக ஸ்ரீப்ரதிவாதி பயங்கரம் அண்ணனின்  அனுபவம்.இந்தப்ரபந்ததுக்கு  ஏற்ப இன்று  4ஆம் பத்து திருவாய்மொழி,  பரத்வத்தை பறக்ககூறும் ஒன்றும் தேவும், தசகம் இதில்  ப்ரபுமத சடஜித்  ப்ராஹ ஸர்வாமரோச்சம்- என தேவதாஸார்வபௌமன்  எம்பெருமானே என த்ரமிடோபநிஷத் தாத்பர்ய ரத்னாவளியில் சொன்னார், , என்ன அத்புதமான  சேர்த்தி, எல்லாமே இன்று பரமல்லவா.
Swami Desikan_Thoopul_Hamsam_64
8-10-13, 5ஆம் திருநாள், ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்  நாச்சியார் திருக்கோலம்,வழக்கப்படி .உத்ஸவம் முதலியன ,திருவீதி உத்ஸவம்  பிறகு  திருமஞ்சனம்,முதலாயிரம் தேசிகப்ரபந்தம்  ஸேவை சாத்துமறை, முதலியன.ஸ்ரீமதுபயவே வடுவூர் வீர்ராகவாசார்ய ஸ்வாமியின் உபந்யாசம்.
ஸாயம்  யாளி வாஹனத்தில் திருவீதி உத்ஸவம்,.யாளிவாஹநத்தின் கீழாக   சிறிய யானை இருக்கும், இரண்டும் சண்டை போடுவதுபோல் தோன்றும்,
, இன்று  5ஆம் திருநாளாகிலும் ப்ரஹமஸூத்ரத்தில்  4காவதான ஸமந்வயாதிகரணம்   தத்து  ஸமந்வயாத்  என்று,  இந்த அதிகரண ரசனையே மிகவும் ரஸநீயம்,இங்கு ப்ரதாந பூர்வபக்ஷீ மீமாம்ஸகன், அவன் கண்டிப்பது அத்வைதியை,  அத்வைதத்தில் 3 பக்ஷம் உள்ளது, நிஷ்ப்ரபஞ்சீகரண நியோகவாதம்,இது ப்ராசீநாத்வைதமதம், த்யாநநியோக வாதம்,இது நவீந மதம்,  நிர்தர்மக அத்வைதவாதம், இது சங்கரமதம், இதில்  த்யாநநியோகவாதீ சங்கரமதத்தை கண்டிக்கிறார்,இவரையும்,நிஷ்ப்ரபஞ்சீகரண நியோகவாதத்தையும் மீமாம்ஸகன் கண்டிக்கிறார்,இவரை  வேதாந்தீ கண்டிப்பதாக அமைந்துள்ளது, இங்கு அத்வைதிகள் யானைஸ்தாநம்,அதை கண்டிக்கும்  மீமாம்ஸகன் இங்கு யாளி ஸ்தானம், அதை அடக்கும் ஸ்வாமி தேசிகன் வேதாந்தி ஸ்தாநம்  என இவ்வுத்ஸவம் ஸமந்வயாதிகரணத்தோடு ஸமந்வயமாவதாக. திருவிருத்தம், திருவாய்மொழி 5ஆம் பத்து,தேசிகப்ரபந்தம் ஸேவை சாத்துமறை ஸ்தோத்ரானுஸந்தானம்.விசாகம் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம்.
Thoopul Swami Desikan Utsavam  day 5 Yali vahanam 2013-04
9-10-13 .6ஆம் திருநாள்,ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்  ஸ்ரீவேணுகோபாலன் திருக்கோலம், திருமஞ்சனம்,பெரியதிருமொழி துடக்கம் தேசிகப்ரபந்தம் ஸேவை சாத்துமறை, ஸ்ரீமதுபயவே பைய்யம்பாடி ஸ்ரீவத்ஸாங்காசார்ய ஸ்வாமியின் உபந்யாஸம்.
மாலை யானைவாஹனம் திருவீதி உத்ஸவம், இரவு திருவாசிரியம்,திருவாய்மொழி  6 ஆம் பத்து  தேசிகப்ரபந்தம் ஸேவை சாத்துமறை.   6ஆம் பத்து சாத்துமறையன்று திருவேங்கடமுடையான் கருடஸேவை ஸமயம்  அதடியாக தயாசதகம்  ஸ்தோத்ரானுஸந்தானம்.
தாஸனின் அனுபவம். ஸ்வாமி ஸ்ரீயதிராஜஸப்ததியில்  ஆசாமதங்கஜகணான் அவிஷஹ்ய வேகான்,,,,,,,,,,,,, கர்ணே ஸ ஏஷ கவிதார்கிகஸிம்ஹநாதஃ என ஸாதித்தபடி கவிதார்கிகஸிம்ஹமமான ஸ்வாமி  யானையின் மீதேறி அதின் காதில் ஸிம்ஹநாதம் செய்வதுபோல்  தோன்றியது.
Swami Desikan_Thoopul_Ther_19
10-10-13 . 7ஆம் திருநாள், திருத்தேர் உத்ஸவம், திருமஞ்சனம்,பெரியதிருமொழி  தேசிகப்ரபந்தம்  ஸேவை  ரதோத்ஸவமானபடியால் திருவெழுக்கூற்றிருக்கையும்  சாத்துமறை, ஸ்தோத்ரானுஸந்தானம், ஸ்ரீமதுபயவே வலையப்பேட்டை ராமாசார்ய ஸ்வாமியின் உபந்யாசம். எம்பெருமான் விஷயத்தில் ஸாதித்த பாசுரம்,  மற்றும் “ஸ்வாமீ தயாஜலநிதிஃ மதுர- க்ஷமாவான் “ முதலான  ச்லோகங்கள்  ஸ்வாமி தேசிகனிடத்தில் ஸமன்வயம் ஆவதாக ஸாதித்தார். ஸ்ரீமதுபயவே பைய்யம்பாடி ஸ்ரீவத்ஸாங்காசார்ய ஸ்வாமியின் உபந்யாஸம்.

ஸாயம் ஸ்ரீராமர் திருக்கோலத்துடன் ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்   திருவீதி  உத்ஸவம்,
தாஸனுக்கு கிடைத்த ஓர் அனுபவம்,  ப்ரதிதினம் ஸாயம் ஸ்வாமி தேசிகன் புறப்பாடாகி  ஸ்ரீபேரருளாளனின் கோபுரவாசலில் எழுந்தருளியிருக்க  திவ்யதம்பதிகள்  நவராத்ரி கொலுவுக்கு எழுந்தருள்வார்கள், ஆக திவ்யதம்பதிகளை ஸேவிக்க ஸ்வாமியும் அவரை அனுக்ரஹிக்க திவ்யதம்பதிகள் எழுந்தருள்வதாக இருவரும் ஸந்திக்குமிடம் கோபுரவாசல், மேலும், மற்ற நாட்க்களில் மாலைவேளையில் ஸ்வாமிக்கு திருக்கோலம் கிடையாது,7ஆம் திருநாளன்று மாத்ரம் ஸ்வாமிக்கு மாலை ஸ்ரீராமர் திருக்கோலம்,நவராத்ரி ஸமயத்தில் சிலர் தனது குழந்தைகளுக்கு ராமர், க்ருஷ்ணன் வேஷத்தை அணிவித்து  ரஸிப்பார்கள்,இந்தக்ரமத்தில் காஞ்சீ திவ்யதம்பதிகள் தங்களது குழந்தையான ஸ்வாமியை  ஸ்ரீராமர் திருக்கோலத்தில் கண்டு களிக்கிறார்களோ என.
. இன்று ஸ்ரீமதாதிவண்சடகோப யதீந்த்ரமஹாதேசிகனின் திருநக்ஷத்ரம், ஸ்வாமி தேசிகன்  உத்ஸவம் கண்டருளி ஸந்நிதி வீதியெழுந்தருள, ஸந்நிதிவீதியிலிருக்கும் ஸ்ரீமதஹோபிலமடத்தில் ஸ்ரீமதாதிவன்சடகோப யதீந்த்ரமஹதேசிகன் ப்ரதீக்ஷித்து, எழுந்தருளியுள்ள ஸ்வாமிக்கு தர்சந தாம்பூலம் ஸமர்பித்து மரியாதை  நடைபெறுகிறது, ஸ்வாமி ஸ்ரீமடத்தில் மண்டகப்படி நிவேதநம் கண்டருளி ஸ்ரீமதாதிவன்சடகோப யதீந்த்ரமஹதேசிகனுக்கு திருப்பரிவட்டம் மாலை, நயிநாராசார்யர் மரியாதையாகி, கோஷ்டீ விநியோகம் .ஸ்ரீராமர் திருக்கோலதமானபடியால் ஸ்ரீரகுவீரகத்யம் ஸ்தோத்ரானுஸந்தானம் .
யத்யதாசரதி ச்ரேஷ்டஃ  என்கிற கணக்கில்  ஸ்வாமீ தேசிகன் ஸ்ரீபேரருளாளனின் அனுஷ்டாந குள உத்ஸவத்தன்றும்,  வைசாக உத்ஸவத்தில் 9ஆம் திருநாள்  இரவும் ஸ்ரீதூப்புலில்  ஸ்ரீபேரருளாளனை உபசரித்து ,அதடியாகப்பெறும் பஹுமாநத்தைப்போலே  ஸ்ரீமதாதிவன்சடகோப யதீந்த்ரமஹதேசிகன் ஸ்ரீமடத்துக்கு எழுந்தருளும் ஸ்ரீஸ்வாமியை  உபசரித்து பஹுமாநத்தை பெறுகிறார்போலும், “தேவவத்ஸ்யாதுபாஸ்ய” என்பதல்லவா நமது ஸித்தாந்தம்..
Swami Desikan_Thoopul_33
பெரியதிருவந்தாதி 7ஆம் பத்து தேசிகப்ரபந்தம் ஸேவை சாத்துமறை, கங்குலும் பகலும் ஸேவை, அதடியாக அபீதிஸ்தவம் ஸ்தோத்ரானுஸந்தானம்.

11-10-13. 8ஆம் திருநாள் ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்  காளிங்கநர்த்தனம் திருக்கோலம் திருவீதி உத்ஸவம்,  நவராத்ரியில் தாயாருடன் திருமஞ்சனம் நடைபெறும், பெரியதிருமொழி  தேசிகப்ரபந்தம் மும்மணிக்கோவை ஸேவை  சாத்துமறை,ஸ்ரீமதுபயவே மு.வ.அனந்த பத்மநாபாசார்ய ஸ்வாமியின் ஸ்ரீபாதுகாஸஹஸ்ரம் உபந்யாஸம்

ஸாயம் குதிரைவாஹனத்தில் திருவீதி உத்ஸவம்,
தாஸனுக்கு கிடைத்த ஓர் அனுபவம்,பாதுகாஸஹஸ்ரத்தில்
சதமக மணிப்ருங்கைருந்மயூகைர்திசந்தீ சரணமுபகதாநாம் ரங்கநாதேந  ஸாம்யம். என்றபடி  துரக விஹகராஜ என்றும் ஆனை பரி தேரின்மேல்  என்று பாடியவராநபடியால்  பாடியவரை இன்று  குதிரையிலேற்றி பெருமாள் அனுபவிக்கிறார் எனலாம்,  பெருமாளோடு ஸாம்யத்தை  காணலாம். ஸ்ரீஹயக்ரீவஸ்தோத்ரத்தில்  த்வாம் சிந்தயந் த்வந்மயதாம் ப்ரபன்னஃ என்கிற கணக்கில் துரக விஹகராஜ என்றும் ஆனை பரி தேரின்மேல் அழகர் என்று பாடியவரானபடியால்  குதிரை வாஹனத்தில் அழகாக ஸேவைஸாதிக்கிறார் போலும்.
ஸந்நிதியில்  சிறியதிருமடல், 8ஆம் பத்து,தேசிகப்ரபந்தம் நவமணிமாலை  ஸேவை  சாத்துமறை.வெள்ளிக்கிழமை, ஸ்ரீஸ்துதி ஸ்தோத்ரானுஸந்தானம்.
Swami Desikan_Thoopul_28
12-10-13. 9ஆம் திருநாள்.ஸ்ரீபரகாலமடத்தில் ஸமர்பித்த தங்க பல்லக்கில்  வெண்ணைத்தாழி க்ருஷ்ணன் திருக்கோலம்.ஸ்வாமீ ஸ்ரீதூப்புலுக்கு எழுந்தருளி திருமஞ்சனம்,பெரியதிருமொழி தேசிகப்ரபந்தம் 18ம் ஸேவித்தபடியால் அர்தபஞ்சகம் புநராவ்ருத்தி,ஸேவை சாத்துமறை.ஸ்ரீமதுபயவே காணியம்பாக்கம் ரங்கநாதாசார்ய ஸ்வாமியின் ஆழ்வார் ஸ்ரீஸூக்திகளில்  ஸ்வாமி தேசிகனின்  ஈடுபாடு என்பதாக உபந்யாஸம். உபஸம்ஹாரரூபமாக தாஸனின் விண்ணப்பம்.
இன்றுடன் ஸ்வாத்யாயகாலத்தில் உபந்யாஸம் நிறைவு பெறுகிறது.

ஸாயம்  ஸிஹ்மவாஹனத்தில் திருவீதி உத்ஸவம்.
ஸந்நிதியில்  பெரியதிருமடல், 9ஆம் பத்து தேசிகப்ரபந்தம்   ஸேவை  சாத்துமறை.  திருவேங்கடமுடையான் பீதாம்பரத்தை பஹுமானமாக ஸமர்ப்பித்தபடியால் தயாசதகம் ஸ்தோத்ரானுஸந்தானம்.
அவதார ஸ்தலத்தில்  ஊஞ்சல் ,ஸேவை, அவதார உத்ஸவாங்க   விசேஷதிருமஞ்சநம், ஸந்நிதிக்கு எழுந்தருளல் .

13-10-13.  10ஆம் திருநாள் காலை,  நித்யபடிஸேவை, திருவாராதனம், அஞ்சலி ஹஸ்ததிருக்கோலத்தோடு  ஸ்ரீவிளக்கொளிப்பெருமாள் ஸந்நிதிகளில் மங்களாஸாசனம், அவதார ஸ்தலத்தில்  படி நிவேதநம்,திநசர்யாஸ்தோத்ரம், ஸந்நிதி வாசலில் மங்களத்துடன் கோஷ்டிக்கு நயினாசார்யர் ஸாதித்து பூர்த்தி,நிவேதநம்,  ஸ்வாமிக்கு மரியாதை பெரிய சாத்துமறை கோஷ்டீ, அஞ்சலி ஹஸ்ததிருக்கோலத்தோடு   ஸ்ரீபேரருளாளனின் பெரிய தங்கப்பல்லக்கில் பேரருளாளனை மங்களாசாஸநம் செய்ய புறப்பாடு,ஸந்நிதிகளில் மங்களாசாஸநம் , இரவு ஸந்நிதியையடைந்து  மஹாநவமி ஆனபடியால் பெருமாள் தாயார், ஆண்டாள் ஸ்ரீஹயக்ரீவருடன் திருமஞ்சநம்  திருவாராதநம் நித்யபடி சாத்துமறை. .

11ஆம்  காலை ஸ்ரீவிளக்கொளிப்பெருமாளுக்கு  ஸ்ரீகரவிமாநம் ஸ்வாமிக்கு  தோளுக்கினியானில்  திருவீதி உத்ஸவம், ஸந்நிதியில் விடாயாற்றி திருமஞ்சநம் ஆஸ்தாநம் எழுந்தருளல். இப்படியாக 12 தினங்களும்  நொடிப்பொழுதில் சென்றுவிட்டது, மீண்டும் இப்படியாக ஸேவிக்க ஒரு வருடம் காத்திருக்கவேணுமே.
ஸ்வாமி அநேக ஸ்தோத்ரம் அனுக்ரஹித்தபோதிலும் ஸ்ரீவரதராஜபஞ்சாசத்தில் நம்மத்திகிரித்திருமாலின் வாஹனஉத்ஸவத்தை அனுபவித்தது என்பது விசேஷமாகும்,ஆனபடியாலேயே எம்பெருமான் உத்ஸவம் கண்டருளும் திருவீதியில் ஆழ்வார் ஆசார்யர்களில் ஸ்வாமிக்கு மாத்ரம் வாஹனஉத்ஸவம் நடைபெற்று வருகிறது எனலாம். இவ்வருடம் “கல்யாணானாமவிகலநிதிஃ——ஸந்நிதத்தாம், “ என்றும் “காபி லக்ஷ்மீகடாக்ஷைஃ பூயச்ச்யாமா  புவன ஜநநீ தேவதா ஸந்நிதத்தாம்”  என்றும்  ப்ரார்த்தித்தபடியாக  திவ்யதம்பதிகள் இருவருமாக சேர்ந்து ஸ்வாமிக்கு மிக அருகில் ஸேவை ஸாதித்தார்கள்,இவ்வருடம் ஸ்வாமியின் உத்ஸவத்தால்  நம்மத்திகிரித்திருமாலுக்கே  மிகுந்த ஸந்தோஷம், காரணம், திருநக்ஷத்ரமஹோத்ஸவம்  மஹாநவமி தினம் ஸம்பவித்தபடியால் கண்ணாடியறையில் பெரிய பிராட்டியுடன் ஏகாஸநத்தில்  வெகுகாலம் நெருக்கமாக எழுந்தருளியிருக்க அவகாசம் கிடைத்தது. மஹாநவமீ மாத்ரமானால்  மஹாநவமி மண்டபத்தில்  மாத்ரமே ஏகாஸனம் கிடைக்கும்,ஸ்வாமி ஸாதித்தார், “ஸ்பாதிம் த்ருசோஃ ப்ரதிலபஸ்வ ஜகத்ஜநநாயாஃ, “ வேறு தெய்வம் தொழாதவனாக என்னை யாக்கி  பெரியபிராட்டியின் கடைக்கண் பார்வையை பெறக்கடவாய் என,தற்சமயம் கிட்டியதோ அதைவிட பெரியதல்லவா,எம்பெருமானின் முகவிலாசத்தை கண்ட ஸ்வாமி தூமுறுவல் கொண்டமுகத்துடன் “வைகுண்டவாசேபி ந மேபிலாஷஃ என்றனுஸந்திக்க இதை ஸேவித்த நமக்கு மட்டும்   ஸ்ரீவைகுண்டத்தில் ஆசையானது எப்படி வரும், நாமும்  வைகுண்டவாசேபி ந மேபிலாஷஃ என்றனுஸந்தித்தோம்,இந்த சேர்த்தி ஸேவையை ஸேவிக்கப்பெற்றால் ஸ்வாமி ஸாதித்தப்ரகாரம்  இந்த ஸம்ஸாரமும்  அபவர்கம் தான், ஸத்யம் ஸத்யம் புநஸ்ஸத்யம்,ஸ்வாமி ஸத்யவாதியாயிற்றே. ஸத்யத்தையே ஸாதித்தார் என்பதும் புலப்படும்.
Swami Desikan_Kanchi_127

For each day’s Utsavam photos visit:

 

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. தாஸனின் ஸ்மரணரூபமான இந்த சிறிய வ்யாசத்தை ப்ரசுரித்த அனுதினம்.ஆர்க் ஆசிரியர்களுக்கு தாஸனுடைய தந்யவாதங்களைத்தெரிவிக்கிறேன்.

    இதில் இரண்டு ப்ரதான விஷயம் அன்று ஸ்மரணத்தில் வராமல் போயிற்று, அடுத்த இரவே அதை ஸ்மரிக்கமுடிந்தது.அதாவது நம்மத்திகிரித்திருமால் எல்லா புறப்பாடுகளிலும் கோயிலில் ஸ்ரீதேசிகனுக்கு முதல் மரியாதையாக ஸ்ரீசடாரி அனுக்ரஹித்து உத்ஸவத்தை தொடருவார்.அந்த ரீதியில் த்வஜாரோஹணத்தின் முன்பாக ஸ்ரீசடாரிமரியாதையாகும்.இந்த க்ரமத்தில் ஸ்வாமி முதல் உத்ஸவத்தன்று ஸ்ரீபரகாலமடத்தில் முதல் மண்டகப்படி கண்டருளி அங்கு எழுந்தருளியுள்ள ஸ்ரீகுமாரதேசிகனுக்கும், ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமிக்கும் ஸ்ரீபாதுகையை அனுக்ரஹித்து எழுந்தருள்வார். வாசலில் ஸ்வஸ்திவாசனம் பாரயணம் உபக்ரமம்.
    ஸ்வாமி தேசிகனுக்கு ஸர்வதந்த்ரஸ்வதந்ரர் என்பதான பிருதம் அஸாதாரணமானது போல் ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமி முதலானவர்களுக்கு ஸ்ரீமத்கவிகதககண்டீரவசரணநளின விந்யஸ்த ஸமஸ்தாத்மபரர்கள் என அஸாதாரணபிருதமாகும். அதாவது கவிதார்கிகஸிம்ஹத்தின் திருவடிகளில் எல்லா பரத்தையும் ஸமர்ப்பித்தவர்கள்– பக்த்யதிசயத்தை கொண்டவர்கள் என. இது அன்வர்த்தமாம்படி .ஸ்ரீமதபிநவரங்கநாதபரகாலஸ்வாமி தங்களுடையதான தங்கபல்லக்கை, ஸ்ரீதூபப்புலில் ஸ்வாமி தேசிகனுக்கு ஸ்ரீுமதுபயவே பெரு ஸுதர்சனதாதாசார்யர் மூலம் ஸமர்பித்தார். அன்று முதல் ப்ரதி தினம் உத்ஸவத்தில் இந்த பல்லக்கில் உத்ஸவம் நடைபெற்று வருகிறது.
    ஸ்ரீஸ்வாமி தேசிகனுக்கு அநேகம் சிஷ்யர்கள் இருந்தார்கள், அவர்களில் ,ஸ்ரீகுமாரவரதாசார்ய ஸ்வாமி, ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமி, திருமலை ஸ்ரீநிவாஸதாதாசார்ய ஸ்வாமி முதலானவர்கள் ப்ரதானமானவர்கள். இவர்களில் ஸ்ரீப்ரம்ஹதந்த்ரஸ்வாமியின், மற்றும் திருமலை ஸ்ரீநிவாஸதாதாசார்ய ஸ்வாமியின் திருநக்ஷத்ரம் புரட்டாசி திருவோணமாகும்.அதடியாக அன்றையதினம் ஸ்ரீபேரருளாளன் ஸந்நிதிக்கு மங்களாசாஸன புறப்பாட்டின் போது ஸ்ரீபரகாலமடத்தில் மண்டகப்படி .தர்சனதாம்பூலம் நிவேதனம் ஸ்ரீகுமாரதேசிகனுக்கும், ஸ்ரீப்ரம்ஹதந்த்ர ஸ்வாமிக்கும் மாலை மரியாதையாகி புறப்பாடு. வாசலில் ஸ்வஸ்திவாசனம் பாராயணம் உபக்ரமம்.
    ஆஸ்திகர்கள் இதையும் சேர்த்து வாசித்து ஆஸ்வதிக்க ப்ரார்த்திக்கிறேன்.
    न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
    श्रीदेशिकप्रियः

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here