Kanchi Varadaraja Perumal Kovil Deepavali Purappadu

3
1,921 views

Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -13

On November 2, 2013; Vijaya Varusha Aippasi Chithirai, being Deepavali Thirunaal,  Sri Devaperumal along with Ubhaya Nachiyars had Thiruveedhi purappadu in the evening at Sri Varadaraja Perumal Kovil,Kanchipuram. Several bhaagavathaas attended the purappadu to get the blessings of the Sri Perundevi Thayar and DevaPerumal.

The following are some of the photographs and video taken on the occasion…

Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -01 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -02 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -03 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -04 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -05 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -06 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -07 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -08 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -09 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -10 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -11 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -12 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -13 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -14 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -15 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -16 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -17 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -18 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -19 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -20 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -21 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -22 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -23 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -24 Kancihipuram Devarajan Vijaya Varusha Deepavali Purappadu 2013 -25

Photo Courtesy : Sri Elangadu Ranganatha Chakravarthy

Print Friendly, PDF & Email

3 COMMENTS

  1. தாஸஸ்ய விக்ஞாபநம்.
    சென்ற வருடங்களில் போல் இவ்வருடமும் தீபாவளி தினம் காஞ்சியில் நம்மத்திகிரித்திருமாலுக்கு விசேஷமாக நடைபெறும் உத்ஸவத்தில் பாராயணத்தில் அன்வயித்தேன். ஆதலால் உடன் எழுதமுடியவில்லை.
    தேவரீர் அனுப்பிய தீபாவளி வாழ்த்தில் ஸம்ருத்தி உண்டாகும்படி ப்ரார்த்திப்பதாக எழுதினீர்.
    அனுதினம் ஆர்கில்
    “தீபாவளி திநத்தில் தைலத்தில் எண்ணையில் லக்ஷ்மியும்,ஜலத்தில் கங்கையும் வஸிக்கிறார்கள் என ப்ரமானம் கூறுகிறது. தாரித்ர்யம் தொலைவதற்காகவும் எண்ணை தேய்த்துக்கொண்டு ஸ்நாநம் செய்து புதுவஸ்த்ரம் தரிக்கவேணும் என பெரியோர்கள்” எழுதியதை ப்ரகாசனம் செய்துள்ளார்.
    இதை வாசித்தவுடன் ஸ்ரீதேவாதிராஜனிடம் தாஸர்கள் ப்ரார்த்தனை செய்ததும் இதுவும் ஸமமாக அமைந்ததை ரஸித்தேன். அதை விக்ஞாபிக்கிறேன்.
    நம்மத்திகிரித்திருமாலின் வைசாகோத்ஸவத்தில் முதல் திருநாள் ஸ்வாமி தேசிகன் உபக்ரமிக்கும் க்ரமத்தில் கோயில் தேசிகன் ஸந்நிதியில் ஆரம்பித்த க்ரமபாராயணம் முடிந்து ,ப்ராஹ்மணபாகம் பாராயணம் நடைபெற்றுவந்தது. தீபாவளி தினம் மூன்றாவது அஷ்டகம் ஆறாம் ப்ரச்நத்துடன் இந்த முதல் ஆவ்ருத்தி பாராயணம் நிறைவு பெற்றது. இரண்டாம் அவ்ருத்தியாக முதல் காண்டம் உபக்ரமித்து பாராயணம் நடைபெற்றது. எம்பெருமான் மாடவீதி ப்ரதக்ஷிணமாக தீபாவளி மண்டபத்துக்கு எழுந்தருளினார். வருடத்தில் இன்று மாத்ரம் இங்கு எழுந்தருள்வதால் இதுக்கு தீபாவளி மண்டபம் என ப்ரஸித்தி. இங்கு பாரயணம் முடிக்கப்ட்டு திருவாராதனம் நடைபெற்று மீண்டும் பெருமாள் கோயிலுக்கு எழுந்தருள்வார். ப்ரபந்தத்தில் கடைசிபாசுரம் போல் பாராயணத்தில் நியதமாக முடிவுபெறும் பாகம் கிடையாது. முடியும் ஸமயத்தில் வரும் அனுவாகம், அல்லது பஞ்சாசத்துடன் முடிப்பது வழக்கம்.இந்த க்ரமத்தில் எம்பெருமான் தீபாவளி மண்டபத்தில் நிறைவு பெறும் பாகத்தை மிகவும் ரஸனீயமாக இந்த உத்ஸவத்துக்குப் பொருத்தமாக அமையச்செய்தார் எனலாம்.முடிவு பெற்ற பாகம் முதல்காண்டம் இரண்டாம் ப்ரச்நம் ,
    “யா தே அக்நே ருத்ரியா தநூஸ்தயா நஃ பாஹி தஸ்யாஸ்தே ஸ்வாஹா யா தே அக்நே அயாசயா ரஜாசயா ஹராசாயா தநூர்வர்ஷிஷ்டா கஹ்வரேஷேடா உக்ரம் வசோ அபாவதீம் த்வேஷம் வசோ அபாவதீம் ஸ்வாஹா “ என முடிந்தது. இதன் பொருள் வருமாறு-
    அக்நே—அக்னிதேவதையே, ருத்ரியா—யாதொருவன் ருத்ரனாய் இருந்து த்ரிபுரத்தை தஹித்தானோ, அவ்வளவு வீர்யமுடையது..தே தநூஃ—உன்னுடைய சரீரமானது. தயா நஃ பாஹி—அந்த சரீரத்தால் எங்களை சத்ருக்களிடத்தில் நின்றும் காப்பாற்றுவாயாக. தஸ்யாஸ்தே ஸ்வாஹா—அந்த சரீரத்துக்கு பதியான உனக்காக இந்த க்ஷீரம்–பாலை ஹோமம் செய்ததாகட்டும்.
    யா தே அக்நே அயாசயா- யாதொரு உன்னுடைய சரீரமானது ப்ருதிவியில் உள்ளதோ, ரஜாசயா—அந்தரிக்ஷத்தில்,ஹராசயா—த்யுலோகத்தில் உள்ளதோ அவைகளால் உக்ரம் வசஃ,அபாவதீம் த்வேஷம் வசோ அபாவதீம்—உக்ரமான வார்த்தைகளை நாசம் செய்கிறேன். உக்ரம் வச என்பதின் பொருளை வேதமே “அசநயா பிபாஸே ஹ வா உக்ரம் வசஃ, ஏநச்ச வைரஹத்யம் ச த்வேஷம் வச” என விளக்குகிறது. அதாவது அன்னம் இல்லாமல் பசியுடன் கூடினவன் நான், தாகத்தோடு கூடியவன் நான் என்பதே உக்ரமான வாக்கு என ( பசிக்கு சாப்பிட அன்னமில்லை, குடிக்க தண்ணீர் இல்லை தரித்ரன் என்பதாம்) த்வேஷமாவது பசுவதம் முதலான பாபம் வந்தது, வித்வாநான ப்ராம்ஹணணை ஹிம்ஸிப்பதான வீரஹத்திரூபமான பாபம் வந்தது என மனதுக்கு வேதனையை அளிக்கும் வாக்காகும்.
    ஹே அக்னியே, உன்னுடைய சரீரத்தால் உக்ரம் த்வேஷம் என்பதாக முன்பு சொன்ன இரண்டு வார்தையையும் நாசம் செய்கிறேன்.( பசி, தாகம், பாபம் இல்லாமல் செய்கிறேன் ).அவ்விதமான அக்னியின் பொருட்டு இந்த ஹோமம் இருக்கட்டும்.
    வேறு சாகையில் “அபாவதீத்” என உள்ளது. அதாவது இவ்விதமான சரீரம் உக்ரமான, த்வேஷமான வார்தையை போக்கட்டும் என. .( பசி, தாகம், பாபம் இல்லாமல் செய்யட்டும் என )
    ஆக இந்த மந்த்ரத்தால்,அக்நியானவன் பசியையும் தாகத்தையும் போக்கடிக்கட்டும் என ப்ரார்த்திப்பதால் தாரித்ர்யம் ஒழியட்டும் என ப்ரார்த்தனா ரூபத்தில் அமைந்ததாகத்தோன்றுகிறது. இங்கு அக்னியாக நம்மத்திகிரித்திருமால் ஆகலாம். அக்னியின் நின்றும் அவதரித்தபடியால். அவரிடம் பசி,தாகம் பாபம் போகட்டும் என ப்ரார்த்திப்பதாக அமைந்தது.
    உக்ரம் த்வேஷம் வச என்பதின் பொருளை விளக்கும் ப்ராம்ஹணபாகம். முதலஷ்டகம் ஐந்தாம் ப்ரச்நத்தில் உள்ளது.யாகத்தில் உபஸத் எனும் ஹோமத்தை செய்யவேணும்.அது எவ்விதம் செய்யவேணுமென தெரிவிக்கும் பாகம்.
    “தே தேவா ஊசுஃ” —முன்பு அஸுரர்கள் ஸ்வயமாக யாகப்ரக்ரியையை அறியாதவர்களாய் தேவதைகளின் ஸமீபத்தில் ஒருவனை மறைமுகமாக அனுப்பிவைத்து அவன் மூலமாய் ப்ரயோகத்தை அறிந்து பிறகே செய்தார்கள்.இதை அறிந்த தேவதைகள் , நாம் உரத்தகுரலில் யாகத்தை அனுஷ்டித்தால்அஸுரர்கள் இந்த ஒற்றன் மூலம் தெரிந்துக்கொண்டு அவ்விதமே செய்துவிடுகிறார்கள் ஆதலால் இனி நாம் உபாம்சுவாக—மெதுவானகுரலில் ஒற்றன் அறியாதவண்ணம் இந்த உபஸத் எனும் ஹோமத்தை செய்வோம் என நிச்சயித்து அவ்விதமே செய்தார்கள்.
    தேவதைகள் செய்தப்ரகாரமாவது- பதினைந்து ஸாமிதேனி மந்த்ரங்களை சொல்லாமல் மூன்று ஸாமிதேனி மந்த்ரங்களைச்சொல்லி, ஸ்ருக்கால் செய்யாமல் ஸ்ருவத்தால் ஆகாரம் செய்து மூன்று ப்ரதான ஆஹுதியை அக்னி, ஸோமன் விஷ்ணு ,இம்மூன்று தேவதைகளை உத்தேசித்து மூன்று தரம் தனித்தனியாக ஹோமம் செய்வதை மாற்றி ஒரேதடவையில் செய்து நான்காவதாக உபஸத் எனும் ப்ரதான ஆஹுதியை யா தே அக்நே எனும் மந்த்ரங்களைச்சொல்லி செய்தார்கள்.இம்மந்த்ரத்தின் மேல்பாகத்தில் உக்ரம் த்வேஷம் வச என்றுள்ளது. அதையே முன்பு விவரித்தோம், அதாவது, உக்ரம் வசஃ—எங்களுக்கு சாப்பிட அன்னமில்லை குடிக்க தண்ணீர் இல்லை என்று கூறுவதைக்கேட்டால் தயையுள்ளவர்கள் வருந்துவார்கள்,ஆதலால் இதுவே உக்ரமான வார்தையாகும்.இதுபோல் த்வேஷம் வச என்பது கோவதரூபமான உபபாதகம், ப்ராம்ஹணவதரூபமான மஹாபாதகம் வந்துவிட்டது என கேட்போருக்கு மனதில் வேதனை வரும், ஆக, பசி, தாகம், மஹாபாதகம், உபபாதகம் என நான்குவிதமான பாபத்தை தேவதைகள் உபஸத் எனும் ஹோமத்தால் போக்கினார்கள். இதை அறிந்து யஜமானனும் உபஸத் எனும் ஹோமத்தை செய்யவேணும் என விதிக்கிறது. செய்வதால் நான்குவிதமான பாபத்தை போக்குகிறான் என.
    இந்த பாகம் எனக்கு இன்று ப்ரம்ஹயக்ஞத்தில் வந்தது. முன்தையதினம் மந்த்ரபாகத்தை பாராயணத்தில் சொன்னேன், ப்ராம்ஹணத்தை இன்று ப்ரம்ஹயக்ஞத்தில் சொல்லியதுடன் ஸ்வாரஸ்யம் தோன்றியது. அத்துடன் தாரித்ர்யம் ஒழியட்டும், செல்வம் பெருகட்டும் என்பதான தேவரீர்களின் தீபாவளி வாழ்த்தையும் சேர்த்தால் இதுதான் வேதம் கூறும் தீபாவளி வாழ்த்துக்களும் போல் தோன்றியது. ஆக இந்த மந்த்ரத்தை வேதம் ஓதும் தீபாவளி வாழ்த்தாக ஸ்வீகரிக்கலாம்படி தோன்றியது, விண்ணப்பித்தேன்.

    न दैवं देशिकात्परम् न परं देशिकार्चनात्।
    श्रीदेशिकप्रियः

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here