Sri Varadaraja Perumal Temple Kainkaryam Appeal

0
413

விழுப்புரம் மாவட்டம்,திண்டிவனம் வட்டம் தேசிய நெடுஞ்சாலையில்(திண்டிவனத்திலிருந்து சரியாக 12 கி.மீ தொலைவில்) செண்டூர் கிராமத்தில் மிகப் பழமையான திருக்கோயிலான ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீவரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது.

SriVaradarajar_Sendur

இத்திருக்கோயில் எழுநூறு ஆண்டுகளுக்கும் பழைமையானது. அழகிய கோயில் காலத்தின் கொடுமையால் சிதலமடைந்து மிகவும் பாழடைந்த நிலையில் இருந்தது. ஊர் மக்கள் இதன் பெருமை தெரியாமல் இருந்தனர். சில பாகவதர்களின் தூண்டுதலினால் கோயிலை புனருத்தாரனம் செய்ய ஆரம்பித்தனர். 2003-ல் திருக்கோயிலுர் ஸ்ரீ எம்பெருமானார் ஜீயர் ஸவாமிகள் கோயிலுக்கு எழுந்தருளி சுற்றிப் பார்த்து மங்களாஸாசனம் செயதார்.

திருப்பணி தொடங்கி 7 ஆண்டுகள் ஆகியும் சில திருப்பணிகள் பணம் இல்லாமையால் தொய்வடைந்துள்ளது. ஊரில் இருக்கும் பஜனை குழுவினர் ஆங்காங்கு பஜனை செய்து அதன்மூலம் கிடைக்கும் பணத்தை திருப்பணிக்கு தங்களாலான பொருளுதவியாக செய்கின்றனர்.

இன்னும் முடிக்க படாமல் இருக்கும் திருப்பணிகள்:-

1. தாயார் சன்னதி, ஆண்டாள் சன்னதி
2. ஆலய சுற்று சுவர்.
3. பட்டாசாரியர் தங்கும் அறை, திருமடைபள்ளி
4. வர்ண பூச்சு
5. மண்டபத்தை சுற்றி இரும்பு கம்பி அமைத்தல்
6. கோயில் கொடிமரம் அமைத்தல்.

இன்னும் சில திருப்பணிகள் மிச்சம் இருக்கின்றன.

கோயிலுக்கு என்று திருப்பணிகுழு அமைத்து அதை முறையாக ரிஜிஸ்டரும் செய்துள்ளனர். பொருளுதவி செய்ய கீழ்கண்ட நபர்களை தொடர்புகொண்டு உதவலாம்.

Address:

SriDevi Sametha Sri Varatharajaperumal Kainkarya Trust
Perumal Koil Street
Sendur Village & Post
Tindivanam Taluka
Villupuram District-604302

Contact Persons:

G. Govindan (Ph: 9976947941) Trust President
S. Ramamoorthy (Ph: 9976992044)

Bank Ac details

Account Name: SriDevi Sametha Sri Varatharajaperumal Kainkarya Trust
Bank : State Bank of India
Ac No. : 32998495240
IFS Code: SBI IN 0005635
Branch Name: Mailam

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here