Thiruthanka Sri Vilakoli Perumal Temple Dhavanotsavam Purappadu

2
1,189 views

Thoopul Dhavanotsava Purappadu 2014 -27

On, 4th  March 2014,Vijaya, Masi Revathi; Dhavanotsavam took place in grand manner at Sri Vilakoli Perumal Temple ,Thiruthanka Divyadesam, Kanchipuram. Deepaprakasa Perumal with Thayar gave a scintillating Sevai on Sathupadi. Swami Desikan had Perumal and Thayar Mariyathai during purappadu . Perumal and Thayar thiruveedhi Purappadu happens in the evening.  Lot of astikas  took part in the utsavam and had blessings of  Divyadampatis.

For Morning Perumal Sevai in Alankaram Please Visit :  Dhavanotsavam At Thiruthanka Sri Vilakoli Perumal Temple

மாசி மாதம் ரேவதீ நக்ஷத்ர நாள் 4-3-2014 காஞ்சியில் திருத்தண்கா திவ்யதேசத்தில் ஸ்ரீமரகதவல்லிநாயிகா ஸமேத ஸ்ரீவிளக்கொளிப் பெருமாளுக்கு வார்ஷீக தவன உத்ஸவம் மிகவும் விமர்சையாக நடைபெற்றது.இதை  அநேகம் ஆஸ்திகர்கள் ஸேவித்து தந்யர்களானார்கள். இத்திவ்ய தேசத்தில் நடைபெறும் இந்த  உத்ஸவத்தில் ஸ்வாமி தேசிகனும் எழுந்தருளி மங்களாசாஸநம் செய்வது விசேஷம்.

ஸ்வாமி தேசிகன் இந்த எம்பெருமான் விஷயமாக சரணாகதிதீபிகை எனும் ஸ்தோத்ரத்தை அனுக்ரஹித்துள்ளார். அதில் இரண்டாவது ச்லோகம்,

நித்யம் ச்ரியா வஸுதயா நிஷேவ்யமாநம்

நிர்வ்யாஜநிர்பரதயா பரிதம்  விபாதி.

வேதாந்தவேத்யமிஹ வேகவதீஸமீபே

தீபப்ரகாச இதி தைவதமத்விதீயம்,

பரோக்ஷமான வேதாந்தத்தால் அறியத்தகுந்ததான தேவதை, ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன், தயையுடன் கூடியதாய் வேகவதீநதிக்கு ஸமீபத்தில்  ப்ரத்யக்ஷமாக தீபப்ரகாசராக ப்ரகாசிக்கிறார்.

இந்த ச்லோகத்தில் அத்விதீயம் என்பதாக விசேஷணத்தை கொடுத்தார். இதனால்  இவர் காஞ்சியில் முதலில் அவதரித்த.பெருமாள் என்பதாக பொருள் வரும்.மேலும்  இந்த பதம் உபநிஷத்தில் உள்ளது. ஸதேவ ஸௌம்யேதமக்ர ஆஸீத் ஏகமேவாத்விதீயம் என ஸ்ருஷ்டிகாலத்தில் ஒன்று இருந்தது என.

வேதத்தில் மற்றுமோரிடத்தில் ஆநீதவாதம் ஸ்வதயா ததேகம், லக்ஷ்மியுடன் கூடியதாய் ஒன்று இருந்தது. என இங்கு ஸ்வதா பதத்தின் பொருள் பிராட்டி என்பதாம். ப்ரமாணம் விஷ்ணுபுராணத்தில் ஸ்ரீஸ்துதியில்  ஸ்வதா த்வம் லோகபாவநீ என.

ஆக இந்த ச்ருதியையும் சேர்த்து ஸ்ரீதேவி பூதேவி மற்றும் பெரியபிராட்டியுடன் வேகவதீஸமீபத்தில் ப்ரகாசிக்கிற தேவதை ஸ்ரீவிளக்கொளிப்பெருமாள் என்பதாக கொள்ளலாம்.வேதாந்தவேத்யமான இந்த திவ்யதம்பதிகள் கண்டருளும் உத்ஸவம் தவன உத்ஸவம். இதை ஸேவித்த ஸ்வாமி தேசிகன் சூடாபாகே தீப்யமானௌ ச்ருதீநாம் திவ்யாவேதௌ தம்பதீ மே தயேதாம் என்றும் ஸம்முகீநாம் ச்ருதீநாம்  பாவாரூடௌ பகவதி! யுவாம் தைவதம் தம்பதீ நஃ என்றும் ஸ்தோத்ரம் செய்ய, ஸ்தோத்ரத்தால் ப்ரீதியடைந்த இவ்விருவரும்,  வளர்த்ததனால் பயன் பெற்றதை ஸ்மரித்து, மடக்கிளி ஸ்தானத்தில் உள்ள ஸ்வாமிக்கு பஹுமானமாக தாம் சூடிக்களைந்த மாலையை அனுக்ரஹித்து தமதனைத்தும் அவர் தமக்கு வழங்கியும் தான் மிக விளங்கும் என்று அனுபவித்தபடி ஏகாந்தமாக ஆஸ்தானத்தை அடைந்த ஸேவையையும் நேரில் ஸேவிக்காதவர்கள் இங்கே ஸேவிக்கலாம்.

These are some of the photos taken during the Utsavam…

Thoopul Dhavanotsava Purappadu 2014 -01 Thoopul Dhavanotsava Purappadu 2014 -02 Thoopul Dhavanotsava Purappadu 2014 -03 Thoopul Dhavanotsava Purappadu 2014 -04 Thoopul Dhavanotsava Purappadu 2014 -05 Thoopul Dhavanotsava Purappadu 2014 -06 Thoopul Dhavanotsava Purappadu 2014 -07 Thoopul Dhavanotsava Purappadu 2014 -08 Thoopul Dhavanotsava Purappadu 2014 -09 Thoopul Dhavanotsava Purappadu 2014 -10 Thoopul Dhavanotsava Purappadu 2014 -11 Thoopul Dhavanotsava Purappadu 2014 -12 Thoopul Dhavanotsava Purappadu 2014 -13 Thoopul Dhavanotsava Purappadu 2014 -14 Thoopul Dhavanotsava Purappadu 2014 -15 Thoopul Dhavanotsava Purappadu 2014 -16 Thoopul Dhavanotsava Purappadu 2014 -17 Thoopul Dhavanotsava Purappadu 2014 -18 Thoopul Dhavanotsava Purappadu 2014 -19 Thoopul Dhavanotsava Purappadu 2014 -20 Thoopul Dhavanotsava Purappadu 2014 -21 Thoopul Dhavanotsava Purappadu 2014 -22 Thoopul Dhavanotsava Purappadu 2014 -23 Thoopul Dhavanotsava Purappadu 2014 -24 Thoopul Dhavanotsava Purappadu 2014 -25 Thoopul Dhavanotsava Purappadu 2014 -26  Thoopul Dhavanotsava Purappadu 2014 -28 Thoopul Dhavanotsava Purappadu 2014 -29 Thoopul Dhavanotsava Purappadu 2014 -30

 

Photography : Sri Elangadu Ranganatha Chakravarthy

Tamil Writeup : Sri Satakopa Thatachariar

Print Friendly, PDF & Email

2 COMMENTS

  1. மேலே காணும் போட்டோகள் மிகவும் அழகாக எடுக்கப்பட்டுள்ளன.பெருமாளை நேரில் சேவித்தது போல் நிறைவாக உள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here