A Journey to Ramar Padam Near Kodiyakarai

4
13,801 views

Ramar thiruvadi 1

A journey to Kodiyakarai from Nagapattinam, Its around 55 Km from Nagapattinam to reach Ramar Padam. This is the location where Lord Sri Rama sees Sri Lanka as said in scriptures. Srilanka is very nearer from this location. Sri Ramar first choose this location to go to Sri Lanka, Later this route will reach backside (otherside) of  the Sri Lanka.So he refused to choose this route to reach Sri Lanka.Everyone knows Later via Rameswaram Sethu Karai Lord Sri Rama went to Sri Lanka. Near to Kodiyakarai ramar padham is also called as Point Calimere. This forest is called as Kodiyakadu and one can see lot of Deers and Monkey. A beautiful place everybody has to trip to have darshan of  Ramar Thiruvadi at Kodiyakarai

அடியேன் ராமானுஜ தாசன். அடியேன் இரண்டு நாட்களுக்கு முன்பு வேதாரண்யம் அருகில் இருக்கும் கோடியக்கரையில் உள்ள ராமர் பாதத்தை சேவிக்கசென்றேன். அந்த அனுபவத்தை தங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இத்துடன் அந்த இடத்தின் புகைப்படங்களையும் இணைக்கின்றேன்.

நாகபட்டிணத்திலிருந்து கோடியக்கரை செல்லும் தேசிய நெடுஞ்சாலையில் சரியாக 55 km தொலைவில் உள்ளது ராமர் பாதம்.   இங்கிருந்து தான் ராமர் முதன் முதலில் இலங்கையை பார்த்ததாக வரலாறு கூறுகிறது. இங்கிருந்து இலங்கை மிக அருகில் உள்ளது.

ராமர் இலங்கையை சென்றடைய இவ்வழியை தான் முதலில் தேர்ந்தெடுத்தார். பின்பு , இவ்வழியாக சென்றால் இலங்கையின் பின்பகுதியை தான் சென்றடைய முடியும் என்பதனால் சத்ய புருஷனான ராமர் கோடியக்கரை வழியாக இலங்கை செல்ல மறுத்துவிட்டார். பின்பு, அனைவரும் ராமேஸ்வரம் வழியாக இலங்கையை சென்றடைந்தது நாம் அறிந்த ஒன்று.

இப்பொழுது ராமர் திருவடி இருக்கும் இடத்தில் ஒரு மண்டபம் மட்டும் உள்ளது. ஒரு சிறிய குன்றின் மேல் இம்மண்டபம் உள்ளது. இந்த இடத்திலிருந்து கோடியக்கரை காட்டிற்கு  ஒரு சிறு ஒற்றையடிப்பாதை உள்ளது. இந்த இடம் அனைத்தும் தொல்பொருள் ஆய்வு துறை கட்டுப்பாட்டில் உள்ளது. இருப்பினும் இந்த இடத்தில் ஒரு பாதுகாவலர் கூட இல்லை. ராமர் பாதம் அருகில் ஒரே ஒரு பாதுகாப்பு அலுவலகம் மட்டும் உள்ளது. அங்கும்  யாரும் பாதுகாப்புக்கு இல்லை. இது தவிர ராமர் பாதம் அருகில் உப்பு உற்பத்தி நடை பெறுவதால் பகல் வேலைகளில் ஆட்கள் நடமாட்டம் அதிகம் இருக்கும். எனவே பக்தர்கள் அஞ்சவேண்டியதில்லை. பெயருக்குத்தான் இது அரசு கட்டுப்பாட்டில் உள்ளதே தவிர, இவ்விடம் அனைத்தும் வானர சேவகர்கள்(குரங்குகள்) கட்டுப்பாட்டில் தான் உள்ளது. ராமர் பாதத்தை சுற்றி நூற்றுக்கும் அதிகமான குரங்குகள் உள்ளன. இவைகள் அனைத்தும் வேறு எங்கும் செல்வதில்லை. அருகில் இருக்கும் பழங்கள், தாவரங்களை மட்டுமிய நம்பி வாழ்கின்றன. அந்த அடர்ந்த கட்டில் இவைகள் ராமர் பாதத்தை  விட்டு வேறு எங்கும் செல்வதில்லை. இவைகள் ராமர் பாதத்தை சேவிக்கும் வரும் பக்தர்களுக்கு எவ்வித தொந்தரவும் கொடுப்பதில்லை. ஆனால் அங்கு நாம் ராமர் பாதத்திற்கு ஏதேனும் சேதம் ஏற்படுத்தினால், நம்மை விரட்ட ஆரம்பித்துவிடுகிறது.
இங்கு பூஜைகள் ஏதும் நடப்பதில்லை, ஆயினும் வருடத்தில் ஒரு நாள் ராமநவமி அன்று மட்டும் திரளான பக்தர்கள் ஒன்று கூடி  இங்கு விசேஷ பூஜைகளை செய்கின்றனர்.

These are some of the snaps taken during the travel

A way to kodiyakarai forest from Ramar PAdham Archaeological board Back view of Ramar Padham Entrance arch Entrance Height of the place Kodiyakkarai forest Name board 2 Name board Ramar Padha mandabham  Ramar thiruvadi mandabam Ramar thiruvadi Salt production near Ramar padham Security room Steps to Ramar thiruvadi THiruvadi Mandabam Vaanaraas View frm light house 1 View from light house View of srilanka from ramar thiruvadi

Courtesy : Sri Bharathwaj  Iyengar

Print Friendly, PDF & Email

4 COMMENTS

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here