Thirukkannamangai Sri Bakthavathsala Perumal Brahmothsavam: Choornothsavam & Kuthirai Vahanam

0
250

Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_28

As a part of ongoing Chitirai Brahmotsavam at Sri Bakthavatsala Perumal Temple at Thirukkannamangai, On May 12th 2014,  special thirumanjanam was performed to perumal followed purappadu in the evening. Yesterday, May 13th 2014, perumal blessed the devotees in Vennai tazhi alankaram, followed by Kuthurai vahana purappadu in the evening.

108 திவ்ய தேசங்களில் ஒன்றான ஸ்ரீ கிருஷ்ண மங்கள க்ஷேத்ரமான திருக்கண்ணமங்கையில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு நடந்து வரும் சித்திரை ப்ரும்மோத்ஸவத்தில், ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் 28ந் தேதி 12.05.2014 திங்கட்கிழமை  காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு  விசேஷ திருமஞ்சனம் நடைபெற்றது, 7 ம் உத்ஸவம் “ திருக்கல்யாண உத்ஸவமாதலால் காலை வேளை புறப்பாட்டிற்கு பதில் மாலை 5 மணிக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள், உபய நாச்சியார்கள், ஸ்ரீ ஆண்டாள் சகிதமாக   சிறப்பு திருவாராதனம்  கண்டு, நெல் அளந்து  “ பவழக்கால்” சப்பரத்தில் திருவீதிப் புறப்பாடு கண்டருளினார்.
இரவு  8 மணிக்கு நித்தியானுசந்தான கோஷ்டி முடிந்து வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து 10.30 மணிக்கு “ புன்னை மர “ வாகனத்தில் திருவீதி வலம் வந்து, வாகன மண்டபத்தில் இறங்கி அங்கிருந்து  இரவு 01.00 மணிக்கு “ சிவன்” அலங்காரத்தில் சிவனுக்குரிய  “ அஜபா நடனத்தில்”  ஸந்நிதிக்கு எழுந்தருளியபின்  கண்ணாடி திருப்பள்ளி அறையில் ஸ்ரீ தேவி, பூ தேவி, ஸ்ரீ ஆண்டாள் ஸகிதம் ஸேவை ஸாதித்தார்.

ஸ்ரீ ஜய வருஷம் சித்திரை மாதம் ந் தேதி 13.05.2014 செவ்வாய்க்கிழமை  காலை வழக்கம்போல் விஸ்வரூபம், திருவனந்தல், காலசந்தி பூஜைகள் முடிந்து, வீதியில் “ செல்வர் “ ஏளி பலி சாதித்து அதன் பின் “ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள்”   திருப்பல்லக்கில்   “ வெண்ணெய்த் தாழி” சேவை வீதியுலா வந்து உள்ளே எழுந்தருளியதும் விசேஷ திருமஞ்சனம் கண்டருளினார்.
இரவு 9 மணிக்கு “ குதிரை” வாகனத்தில் ஆரோஹணித்து திருவீதி வலம் வந்து ஸ்ரீ தேவி, பூ தேவி, ஆண்டாள் சகிதம் திருப்பள்ளியறையில் சேவை சாதித்து அருளினார்.
ஏராளமான பக்தர்கள் சேவித்து இன்புற்றனர்.

திருத்தனைத் திசை நான்முகன் தந்தையைத்*

தேவதேவனை மூவரில் முன்னிய விருத்தனை*

விளங்கும் சுடர்ச் சோதியை*

விண்ணை மண்ணினைக் கண்ணுதல் கூடிய அருத்தனை*

அரியைப் பரிகூறிய அப்பனை*

அப்பிலார் அழலாய் நின்ற கருத்தனை*

களி வண்டறையும் பொழில்*

கண்ண மங்கையுள் கண்டு கொண்டேனே.*

A detailed sthala of Thirukkannamangai can be read from: Thirukannamangai – Sthala Puranam

Some of the photos taken during the occasion can be viewed below:

May 12th 2014

Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_02 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_03 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_05 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_06 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_11 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_14 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_18 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_19 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_21

May 13th 2014

Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_00 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_02 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_04 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_05 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_06 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_07 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_08 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_14 Thirukkanmangai_Chithrai_Brahmotsavam_20

Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_22 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_23 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_25 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_26 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_28 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_33 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_34 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_36 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_38 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_39 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_42 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_44 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_45 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_48 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_51 Thirukkannamangai_Chithrai_Brahmotsavam_52

வெஞ்சினக் களிற்றை விளங்காய் வீழக்*

கன்று வீசிய ஈசனை* பேய்மகள் –

துஞ்ச நஞ்சு சுவைத்துண்ட தோன்றலைத்*

தோன்றல் வாளரக்கன் கெடத் தோன்றிய-

நஞ்சினை* அமுதத்தினை நாதனை*

நச்சுவார் உச்சிமோல் நிற்கும் நம்பியை*

கஞ்சனைத் துஞ்ச வஞ்சித்த வஞ்சினைக்*

கண்ண மங்கையுள் கண்டுகொண்டேனே*

Writeup & Photography : Sri Rajagopalan TSR

A detailed sthala of Thirukkannamangai can be read from: Thirukannamangai – Sthala Puranam

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here