Srivilliputtur Sri Periyazhwar Aani Brahmotsavam Part 2

Date:

Share post:

Srivilliputtur Sri Periyazhwar Utsavam_09

On July 7, 2014; Jaya Varusha Aani Swathi, Thirunakshatram of Sri Periyazhwar was celebrated grandly in the avathara sthalam of Srivilliputtur. This marked the Day 10 of Sri Periyazhwar Avathara Utsavam (Aani Brahmotsavam).

பேரணிந்த வில்லிப்புத்தூர் ஆனி தன்னில் பெரும் சோதி தன்னில் தோன்றும் பெருமாளே!, வேயர் புகழ் வில்லிப்புத்தூர் ஆடிப்பூரம் மென்மேலும் மிக விளங்க..என்று ஸ்வாமி தேஸிகனால் அனுபவிக்கப்பட்ட பெருமை உடையது ஸ்ரீவில்லிபுத்தூர் என்னும் ஸ்ரீ நாச்சியார் திருமாளிகை திவ்ய தேசம்.

நித்யமும் ஸ்வாமி தேஸிகன், தாயாரின் திருக்கல்யாண பந்தல் மண்டபத்திலே நாச்சியாரின் பரம கல்யாண குணங்களை அனுபவித்துக் கொண்டு பெரியாழ்வாரின் திருவடிவாரத்திலே எழுந்தருளியிருந்து அவர் காணும் ஆனி ஸ்வாதி திருவவதார உத்சவத்தை தாமும் அனுபவிக்குமா போலே, வைகாசி ஸ்ரீ கோதாஸ்துதி உத்சவத்தில், பத்து நாட்களும் திவ்ய தம்பதிகளை நாடக சாலை தெருவில் அனுதினமும் பாகவத கோஷ்டியில் தனது பூர்வாவதாரமான திருவேங்கடமுடயான் திருக்கோயிலிலே அனுப்பிரவேசராய் சேவித்துக் கொண்டு, திருவீதி புறப்பாடுகளை திருவுள்ளம் உகக்கிறார்.

தொடர்ந்து ஆனி ஸ்வாதி ஆழ்வார் உத்சவத்திலும், திருவாடிப்பூரத்திலும், ஆவணி உறியடியிலும், புரட்டாசி பெரிய பெருமாள் ப்ரம்மோத்ஸவத்திலும், உத்தராவதாரமாய் தன்னுடய திருநக்ஷத்திரத்தில் பெரிய கோயில் கிரமமாக திவ்யதம்பதிகளையும், ஆழ்வாரயும் திருவடி தொழுது எட்டெட்டு பதினாறு மாட வீதிகளிளும் அழகிய வேதாந்தாசிரியன் என்னும் திருநாமம் விலக்ஷணமாய் விளங்க திருவீதியார வருவது அடியார் திருக்கூட்டத்துக்கு அமுதாம் ஸேவையாகும்.

பின்னே மார்கழியில் அருளப்பாடுகளோடே, நாச்சியாரின் விசேஷ பகுமானங்களோடே எதிர் ஸேவயில் எழுந்தருளியிருந்து திருவோலக்கத்திலே, இராமானுச முனி இன்னுரை சேரும் தூப்புல் வள்ளலாய், மற்றும் ஒரு தெய்வம் உண்டே மதியிலா மானிடங்காள் என்னுமா போலே கூரத்தாழ்வான் அடிக்கீழ் உடயவருக்குப் பின்னான ப்ரதான ஆச்சார்ய ஸ்தானத்தில் எழுந்தருளி, ஒப்பாரும் மிக்காரும் இல்லாமல் தான் ஒருவரே ஓராண்வழியான குருபரம்பரயில் முடிவாம் சோதி என்னும் தத்துவம் விளங்க எழுந்தருளி இருக்கும் பாங்கை விளக்க ஒரு வார்த்தை போதுமோ?

       நாச்சியார் திருமாளிகை, ஸ்வாமி ஏற்றி வைத்த கிரமத்தில் அருளப்பாடுகள் முதலானவையோடு, வழக்கங்களோடு இன்றும் விளங்கி வருகிறது. நாச்சியாரும், ‘நாறும் நறும் பொழில்’ பாசுர உடையவர் திருமாலிரும்சோலை வைபவத்தின்படி, எம்பெருமானர் ஸ்ரீ நாச்சியார் திருமாளிகையேற எழுந்தருளியபோது ‘தங்கோயிலண்ணன்’ என கடாக்ஷித்தவாறே, இராமனுஜதயா பாத்ரரான ஸ்வாமியயும், குளிர கடாக்ஷித்து, ‘இவரன்றோ தங்கோயிலண்ணனான உடையவர்’ என்று தலைக்கட்டியாயித்து!

முன்னிட்ட ஆச்சாரியர்கள் முடி சம்மந்தமாயும், பின்னிட ஆச்சார்யர்கள் திருவடி சம்மந்தமாயும், ஸ்ரீ நாச்சியார் திருமாளிகையில் தனி சந்நிதி கொண்டு ஏளியிருந்து திருவருள் சுரக்கும், ஸ்வாமி அனுபவித்த பெருக்கமுறும் ஆனிதன்னில் சோதிவந்த பெருமாளாம் ஆழ்வாரின் வடிவழகில் ஈடுபட்டு களித்திருப்போம்!

       அம்புலியிலும், பறங்கி நாற்காலியிலும், ஆனை-பரி-தேரிலும் வரும் அழகரான விஷ்ணுசித்தரயும் அவர் மனத்தே கோயில் கொண்ட வடபெருங்கோயிலுடயானயும், அவர்தம் குலக்கொடியாம் பூங்கோதையயும், அவள் தன் தொல்லருளால் வாழும் திருக்கோயிலண்ணனயும், அவர் வன்மை போற்றும் சீர்மையனான நம் தூப்புல் வள்ளலையும், ஏரார் மறைப்பொருளெல்லாம் சீராக்கிய வரததேஸிகனயும் புந்தியில் வைத்தடி போற்றிடுவோம்!

அவ்வாறே ஸ்ரீமந்நாதமுனிகள் திருவம்சபூதராய் ஏளியிருந்து கலாபக்காலத்தே நாச்சியார் திருமாளிகையை காத்து உத்சவ திருமேனிகளை திருவலசையினின்றும் மீட்டு, நாச்சியார் திருமாளிகையை நிலையிட்ட திருமலைநம்பிகளின் நினைவை நன்றியுடன் போற்றுவோம். ஸ்வாமி ஒன்னான திருமலைநம்பிகளிடமிருந்து பத்தாவது தலைமுறையில் ஸ்ரீவில்லிப்புத்தூரில் ஏளியிருந்தார். நாச்சியாரும், ஒரு விசேஷத்தாலே நம்பிகளின் வைபவம் பிரகாஸிக்க அருளப்பாடுகளொடும், தர்மகர்த்த கைங்கர்யங்களோடும் குளிர கடாக்ஷித்தார்._

The following are some of the glimpses from the Brahmotsavam…

Srivilliputtur Sri Periyazhwar Utsavam_00 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_01 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_02 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_03 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_04 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_05 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_06 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_07 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_08 Srivilliputtur Sri Periyazhwar Utsavam_09

Photo and Write up by Sri Nachiyar Thirumaligai Nilayitta Thirumalai Nambigal Sishya Kuzham

Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

spot_img

Related articles

Vishesha Thirumanjanam At Pazhaveri Perumal Temple Today

23 June 2022, Subhakruth Varusha, Aani maasa-09, Monday; Today, Aani Revathi, Thirumanjanam was performed for Sri Lakshmi Narayana Perumal...

Garuda Sevai At Tiruvallur Perumal Temple On Sravanam

19 June 2022, Subhakruth Varusha, Aani maasa-05, Sunday; On Aani Sravanam, 18 June 2022, Purappadu of Sri Vaidya Veera...

Sravana Purappadu At Srivilliputhur Vatapatrasaayi Temple

19 June 2022, Subhakruth Varusha, Aani maasa-05, Sunday; On Aani Sravanam, 18 June 2022, Purappadu of Sri Vatapatrasaayi Perumal...

Sravanam Celebrations In Sri Vedantha Desikan Sannidhi At Taramani

19 June 2022, Subhakruth Varusha, Aani maasa-05, Sunday; Being Aani Sravanam, monthly thirunakshatram of Swami Desikan was celebrated in...