The temple Committee has scheduled to conduct Jeernodharana Ashtabandhana Mahasamprokshanam for Sri Adhikesava Perumal Temple at Pudhupalayam Village,Gummidipoondi,Thiruvallur. The mahasamprokshanam pre event such as Acharya varnam, Angurarapanam, mruthsangraham, homam will start on 5th September 2014. The Mahasamprokshanam for Rajagopuram will take place on 7 September 2014 (Sunday). The Pudhupalayam villagers and temple committee invites all Astikas to take part in the mahasamprokshanam and get the blessings of Divyadampatis.
ஜீர்ணோர்தாரண அஷ்டபந்தன மஹா சம்ப்ரோக்ஷணம்
திருவள்ளூர் மாவட்டம் புதுப்பாளையம் கிராமத்தில், ஸ்ரீ பூமிநிளா ஸமேத ஸ்ரீ ஆதிக்கேசவப் பெருமாள் என்னும் திருநாமத்துடன் நின்ற திருக்கோலத்தில் திருவருள்புரியும் இவ்வெம்பிரானுக்கு பகவத் கிருபையால் தொடுகடல் கிடந்த எங்கேசவன் திருவுளப்படி ஸ்ரீ ஆதிக்கேசவப் பெருமாள் மற்றும் சீதாலட்சுமண அநுமத் சமேத ஸ்ரீ கோதண்டராமர், நவநீத கிருஷ்ணன், பெருமாள் விமானம், விநாயகருக்கும் ஸ்ரீ வைகானஸ பகவத் சாஸ்திரப்படி ஸ்வஸ்தி ஸ்ரீ நாளது ஜய வருஷம் ஆவணி மாதம் 22-ந் தேதி (07.09.2014) ஞாயிற்றுக்கிழமை சுக்கில திரயோதசி திருவோண நட்சத்திரம் அமிர்தயோகம் கூடிய சுபயோக சுபதினத்தில் காலை 7.30 மணிக்குமேல் 9.00 மணிக்குள்ளாக கன்னியா லக்கினத்தில் மஹா சம்ப்ரோக்ஷணம் (மஹா கும்பாபிஷேகம்) நடைபெற இருப்பதால் இப்பெருவிழாவில் அனைவரும் கலந்து கொண்டு திருமாமகள் கேள்வனின் திருவருள் பெற்றுய்யுமாறு கேட்டுக் கொள்கிறோம்.
The schedue of event is given in the patrikai
Courtesy : Sri Chakravarthi Bharathi