ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி திருக்கோவில் நரசிங்கபுரம்
அன்ன கூட்ட மகா உற்சவம் AND சுவாதி திருமஞ்சனம் ( AUG 31.08.2014) நடைபெறற்து………
திருவள்ளூர் அடுத்த நரசிங்கபுரத்தில் பழமைவாய்ந்த ஸ்ரீலட்சுமி நரசிம்ம பெருமாள் கோயில் உள்ளது. இங்கு மூலவர் நரசிம்மர், தாயாரை மடி மீது அமர்த்தி அணைத்த கோலத்தில், ஏழரை அடி உயரத்தில் காட்சி அளிக்கிறார். இங்கு மாதம்தோறும் பெருமாள் பிறந்த நட்சத்திரமான சுவாதி அன்று மூலவருக்கு திருமஞ்சனம் நடக்கும். அன்று நெய் தீபம் ஏற்றி, கோயிலை 32 முறை வலம் வந்தால் திருமண தடை நீங்கும், நினைத்த காரியம் கைகூடும் என்ப தால், பக்தர்கள் கோயிலு க்கு வந்து, தங்களது நேர்த்தி கடனை செலுத்துவர்.
சுவாதி மற்றும் அன்னகூட்ட மகா உற்சவம் என்பதால், ஆயிரக்கணக்கான பக்தர்கள் மூலவர் நரசிம்மரை தரிசனம் செய்ய குவிந்தனர்.
விழாவையொட்டி காலை 5.30 மணிக்கு கோபூஜை, 9.30 மணிக்கு யாக பூஜை, திருமஞ்சனம், 11 மணிக்கு பல வகையான காய்கறிகள்,
இனிப்புகள், பலகாரங்கள் ஆகியவை வைக்கப்பட்டு அன்னகூட்ட மகா உற்சவம் நடந்தது. பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
மாலை 5 மணிக்கு உற்சவர் மலர்களால் அலங்கரிக்கப்பட்டு திருவீதியுலா வந்தார்.
சென்னை, காஞ்சிபுரம், வேலூர் மற்றும் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர். விழா ஏற்பாடுகளை ஸ்ரீலட்சுமி நரசிம்ம சுவாமி சேவா சபா டிரஸ்ட் செய்திருந்தனர்.
These are some of the photos taken during the occasion…
———-பேருந்து போக்குவரத்து வசதி———-
# கோயம்பேடு – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# தி நகர் – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி- காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# வடபழனி – பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு (MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# பூந்தமல்லி – தண்டலம் கூட்ரோடு
(MP distillaries ) இருந்து வலதுபுறம் திரும்பி – காட்டு கூட்ரோடு – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# தாம்பரம் – ஸ்ரீபெரும்பந்தூர் – காட்டு கூட்ரோடு இடதுபுறம் திரும்பி- பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# காஞ்சிபுரம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் -நரசிங்கபுரம்
# அரக்கோணம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம் – நரசிங்கபுரம்
# திருவள்ளுர் – கடம்பத்தூர் – பேரம்பாக்கம் -நரசிங்கபுரம்
# திருவள்ளுர் – காட்டு கூட்ரோடு வலதுபுறம் திரும்பி – பேரம்பாக்கம் – நரசிங்கபுரம்
# வேலூர் – பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்
# பனப்பாக்கம் – நெமிலி – சேந்தமங்கலம் – தக்கோலம் கூட்ரோடு – தக்கோலம்- நரசிங்கபுரம்
மேலும் விவரங்களுக்கு :
ஸ்ரீ லக்ஷ்மி நரசிம்ஹ ஸ்வாமி சேவா சபா டிரஸ்ட்
நரசிங்கபுரம் அஞ்சல் ,
பேரம்பாக்கம் வழி,
திருவள்ளூர் மாவட்டம்-631402
மொபைல் : 9442585638
Courtesy : Sri Rajesh Muthuswamy