Tattvamukthakalaapa Haaram Samarpanai To Thoopul Swami Desikan

0
1,043 views
c
On, 3 October 2014; Jaya varusha  Purattasi Uthiradam; Tattvamuktakalaapa Haaram and with Chandra Haaram  Abharana Samarparanai was done to Thoopul Swami Desikan, on the day of  Maha Navami and the day before the Thirunakshatra dhinam of Swami desikan. The haaram was made of 27 Sovereigns of Gold. The Author Satakopa Thaathachariar  describes the reason for choosing the 27 sovereigns with lucid explanation.
சந்த்ரஹாரத்துடன் — தத்வமுக்தாகலாபஹாரத்துடன் ஸ்வாமி தேசிகன்.
ப்ரஹ்மானுபவம்– பேரின்பம்.
“பரச்சதம் வாபி பரஸ்ஸஹஸ்ரம், தத்ராலமேகஃ கலு”, என்று ஸ்வாமி தேசிகனின் ப்ரசிஷ்யரான ப்ரதிவாதிபயங்கரம் அண்ணன் ஸ்வாமி கொண்டாடியபடி, பாரொன்றச்சொன்ன பழமொழயில் ஒன்றாய், ஸ்வாமி தேசிகனாலேயே “ஸர்வம் தத்வமுக்தாகலாபே” என்றும்” ஏகம் தத் ஸர்வஸித்யை கலயத ஹ்ருதயே தத்வமுக்தாகலாபம் ” என்றும் கொண்டாடப்பட்ட உயர்ந்த க்ரந்தம் தத்வமுக்தாகலாபமாகும். இதில் தத்வங்களாகிற முத்துகளை கோர்த்து எம்பெருமானுக்கு ஸ்வாமி ஸமர்ப்பித்தார்.
  1.  ப்ரக்ருதி
  2.  மஹான்
  3.  அஹங்காரம்
  4.  சப்ததந்மாத்ரம்
  5.  ஸ்பர்சதந்மாத்ரம்
  6.  ரூபதந்மாத்ரம்
  7.  ரஸதந்மாத்ரம்
  8.  கந்ததந்மாத்ரம் என பஞ்சதந்மாத்ரங்கள்- ஐந்து தந்மாத்ரங்கள், பதினொரு இந்த்ரியம்  ஆக19.
    20. ப்ருதிவீ
    21 . ஜலம்
    22. தேஜஸ்
    23. வாயு
    24. ஆகாசம் என பஞ்சபூதம்– ஐந்துபூதங்கள்
    25.  காலம்
    26 . ஜீவன்
    27 ஈச்வரன் என 27 தத்வம்,
    இவைகளை,

    1. ஜடத்ரவ்யஸரம், 70 ச்லோகம்
    2. ஜீவஸரம், 75 ச்லோகம்
    3.  நாயகஸரம், 80 ச்லோகம்
    4. புத்திஸரம், 135 ச்லோகம்
    5. .அத்ரவ்யஸரம் 140 ச்லோகம் என ஐந்து ஸரமாக அடுக்கடுக்காக கோர்த்து பெருமாளுக்கு ஸமர்ப்பித்தார்
இவைகளை சுருக்கி ,1, சித், 2, அசித், 3,ஈச்வரன் என தத்வத்ரயமாகவும் சொல்லலாம்.
ஸ்வாமி தேசிகன் இதை பெருமாளுக்கு ச்லோகரூபமாக ஸமர்ப்பித்தார். நம் ஸ்வாமி தேசிகன், திருவேங்கடவனின் அவதாரமானபடியால் அவருக்கு இதை ஸ்வர்ணத்தில் – 27 தத்வமானபடியால் 27 சவரனில், ஐந்து ஸரமாக– வடமாக, 27 தத்வங்களின் ஸ்தானத்தில் 27 கற்கள் பதித்த டாலருடன்– பதக்கத்துடன் அடியார்கள் ஸமர்பிக்க ,அதை ஸ்வாமி பெருமாளுக்கு ஸமர்ப்பிக்க, பெருமாள் களைந்து அதை மஹாநவமீ தினம் தேசிகனுக்கு அனுக்ரஹித்தார்.
ch
பதக்கத்தில் மூன்று நிற கற்கள் உள்ளன. பச்சைக்கல் ஈச்வரன், வெள்ளக்கல் ஜீவன், கெம்புகள் அசேதநங்களாய 25. என அமைக்கப்பட்டு, சந்த்ரஹாரரூபமான சங்கலியில் கோர்த்து ஸமர்ப்பிக்கப்பட்டன.
“ப்ரயோககாலீந அர்த்தஸ்மாரக்த்வம்” என மந்த்ரத்துக்கு லக்ஷணத்தை மீமாம்ஸகர்கள் வகுத்தார்கள். அதுபோல் இந்த ஆபரணம் “தேசிகதர்சனகாலீந க்ரந்தஸ்மாரகமாகும்”.—- தேசிகனை ஸேவிக்கும் காலத்தில் தேசிகன் அனுக்ரஹித்த க்ரந்தத்தை நினைவுபடுத்தும் ஆபரணம் என.
லக்ஷ்மீ நேத்ரோத்பலஸ்ரீ என முதல் ச்லோகம்,அவிரளதுளஸீதாமஸஞ்ஜாதபூமா காளிந்தீ காந்திஹாரீ கலயது வபுஷஃ காளிமா என்பதுடன், பூயச்ச்யாமா புவநஜநநீ என வரதராஜபஞ்சாசத்தில் ஸாதிப்பதால் முதல் ச்லோகம் ஸ்ரீவரதனுக்கு, முடிவில் காதா தாதாகதாநாம் என ஸ்ரீபாஷ்காரருக்கு ஆக இவர்களின் பதக்கத்துடன் ஸேவைஸாதிக்கிறார்.
499 ஆவது ச்லோகத்தில் ஸ்யாதித்தம் சிக்ஷிதார்த என கீழே குறிப்பிட்டபடி யார் அறிகிறாரோ அவர் உயர்ந்த ஸ்வர்ணதண்டையை தனது இடது காலில் தரிக்கக்கடவன் என்பதால் ஸ்வாமி ஒருவரே அறிந்தபடியால் இரண்டு திருக்கைகளிலும் ஸ்வர்தண்டையுடன் ,ஸேவை ஸாதிக்கிறார்
தொண்டருகக்கும் துணையடி வாழி நின்தூமுறுவல் கொண்டமுகம் வாழி என்றே நாம் என்றென்றும் அனுஸந்திப்போம்.
தத்வத்தின் ஸங்க்ரஹச்லோகம்—
த்ரவ்யாத்ரவ்யப்ரபேதாத் மிதமுபயவிதம் தத்விதஸ்தத்வமாஹுஃ
த்ரவ்யம் த்வேதா விபக்தம் ஜடமஜடமிதி ப்ராச்யமவ்யக்தகாலௌ.
அந்த்யம் ப்ரத்யக் பராக்ச ப்ரதமமுபயதா தத்ர ஜீவேசபேதாத்
நித்யாபூதிர்மதிச்சேத்யபரமிஹ ஜடாமாதிமாம் கேசிதாஹுஃ
அடியார்கள் நேரில் வந்து ஸ்வாமியை ஸேவித்தால் மேலும் பேரின்பத்தை பெறலாம்.
Courtesy : Sri Satakopa Thaathachariar
Print Friendly, PDF & Email

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here