108 திவ்ய தேசங்களில் ஒன்றான “திருக்கண்ணமங்கை“ திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு ஸ்ரீ ஜய வருஷம் ஐப்பசி மாதம் 18 ந் தேதி (04.10.2014) செவ்வாய்க்கிழமை “ திருப்பவித்ரோத்ஸவம்” ஆரம்பித்து செவ்வாய் மற்றும் புதங்கிழமை இரு தினங்களும் காலை ஸ்ரீ பக்தவத்ஸலனுக்கு விசேஷ திருமஞ்சனமும், இரு வேளைகளிலும் யாகசாலை பூஜைகள் நடைபெற்று, இன்று 6.10.2014 வியாழக்கிழமை ஸ்ரீ ஜய வருஷம் ஐப்பசி பௌர்ணமி திருப்பவித்ரோத்ஸவ சாற்றுமுறையை ஒட்டி காலை (உதய கருடஸேவை) ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் “தங்க கருட” வாகனத்தில் ஆரோஹணித்து திருவீதி வலம் வந்து, திருக்கோயில் வாசலுக்கு வந்ததும் உள்ளிருந்து ஸ்ரீ சக்ரத்தாழ்வார் புறப்பாடாகி “தர்ஸன புஷ்கரிணி”க்கு ஏளி புஷ்கரிணியில் ஸ்ரீ சக்ரத்தாழ்வாருக்கு திருமஞ்சனமாகி தீர்த்தவாரி நடைபெற்றது
பின், ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாள் ஆஸ்தானத்துக்கு ஏளும் முன் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம் நடைபெற்று, யாகசாலையில் மஹா பூர்ணாஹூதி ஆகி “கடம்” புறப்பாடாகி ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு கடப்ரோக்ஷணம், திருமஞ்சனம் வெகு சிறப்பாக நடைபெற்றது.
ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து அருளைப் பெற்றனர்.
For Previous day Utsavam :
- Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Jaya Varusha Pavithrotsavam : Day 2
- Thirukannamangai Sri Bhakthavatsala Perumal Temple Jaya Varusha Pavithrotsavam Commences
The following are some of the photos taken during the occasion…
Photography : Sri Rajagopalan TSR