108 திவ்ய தேசங்களில் ஒன்றானதும், ஸ்ரீ க்ருஷ்ண மங்கள க்ஷேத்ரத்தில் ஒன்றானதுமான “ திருக்கண்ணமங்கை” திவ்ய தேசத்தில் ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு இன்று ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 15ந் தேதி 30.12.2014 செவ்வாய்க்கிழமை பகல் பத்து ஒன்பதாம் நாள் உத்ஸவத்தில் காலை 11.30 மணி சுமாருக்கு ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும், மாலை”ஸ்ரீ பெரிய பெருமாள் திருவ்டி திருமஞ்சனமும் திருமங்கை ஆழ்வார் திருவடி தொழல் நிகழ்ச்சியும். அதன் பின் சாற்றுமுறையும் தீர்த்த கோஷ்டியும் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
ஸ்ரீ ஜய வருஷம் மார்கழி மாதம் 16ம் தேதி 31,12,2014 புதன்கிழமை காலை ஸ்ரீ பக்தவத்ஸலப் பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனமும் இரவு 8 மணிக்கு “ மோகினி அலங்காரப் புறப்பாடும்” நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசித்து ஸ்ரீ அபிஷேகவல்லி ஸமேத ஸ்ரீ பக்தவத்ஸலனின் அருளைப் பெற்றனர்.
The following are some of the photos taken during the occasion…..
Photography By : Sri Dr Rajagopalan TSR